பழைய புத்தகங்களை நன்கு பயன்படுத்திக்கொள்ளுதல்
1 “அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு” என்று எழுதினார் ஞானியாகிய சாலொமோன் ராஜா. (பிர. 12:12) மனித ஞானமும் தத்துவமும் அடங்கிய புத்தகங்களைக் குறித்ததில் இந்தக் கூற்று எவ்வளவு உண்மையாய் உள்ளது. ஆனால், கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் தெய்வீக ஞானத்தின் அடிப்படையில் உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பால் தயாரிக்கப்படும் புத்தகங்களைப் பற்றியென்ன? இவற்றில் நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் அறிவு உள்ளது.—நீதி. 2:1-9, 21, 22.
2 குறிப்பிட்ட சில பழைய புத்தகங்களின் விலையை ஒன்றுக்கு ரூ. 2.50 என குறைத்திருப்பது, இந்தப் புத்தகங்களும் இதில் அடங்கியுள்ள ஜீவனையளிக்கும் செய்தியும் பொது மக்களை சென்றடைவதற்கு சங்கத்தால் செய்யப்பட்ட ஏற்பாடாகும். இந்த ஏற்பாடு, இந்தியாவிலுள்ள எல்லா சபைகளிலும் சமீபத்தில் நடந்த ஊழியக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு விளக்கப்பட்டது. இத்தகைய புத்தகங்களின் பட்டியலை நாங்கள் இத்துடன் கொடுத்திருக்கிறோம்; இதன்மூலம் தனிப்பட்ட பிரஸ்தாபிகள் அந்தப் பட்டியலை எல்லா சமயங்களிலும் பயன்படுத்துவார்கள்.
ஒன்றுக்கு ரூ. 2.50 என்ற விலையில் கிடைக்கும் பிரசுரங்கள்
மனிதன் தோன்றியது பரிணாமத்தினாலா படைப்பினாலா—ஆங்கிலம்
உங்களை மகிழ்விப்பதற்கு நற்செய்தி —குஜராத்தி
இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? —ஆங்கிலம், தெலுங்கு
“உம்முடைய ராஜ்யம் வருவதாக” —எல்லா மொழிகளிலும்
பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல் —மராத்தி
புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல் —மலையாளம், தமிழ்
பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? —ஆங்கிலம்
நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் —குஜராத்தி
“கடவுள் பொய்ச் சொல்லக்கூடாததாயுள்ள காரியங்கள்”—கன்னடம்
மெய் சமாதானமும் பாதுகாப்பும்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?—தமிழ்
ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல்—மலையாளம், மராத்தி, நேப்பாளி, தமிழ்
‘சமாதான பிரபுவின்கீழ்’ உலகளாவிய பாதுகாப்பு—ஆங்கிலம்
3 இந்தப் புத்தகங்களை எவ்வாறு மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தலாம்? ஒரு காரியம், உங்களுடைய தனிப்பட்ட நூலகத்தைப் பார்க்கும்படி நாங்கள் உங்களுக்கு ஆலோசனை கொடுக்கிறோம். மேற்குறிப்பிடப்பட்ட எல்லா புத்தகங்களும் உங்களிடம் உள்ளதா? ஏதாவது இல்லையென்றால், உங்களுடைய வீட்டு நூலகத்தை முழுமை பெறச்செய்வதற்கு உங்களுடைய சபையின் மூலம் பிரதிகளுக்காக நீங்கள் ஏன் ஆர்டர் செய்யக்கூடாது? தேவராஜ்ய ஊழியப் பள்ளி நூலகத்தில் இந்த எல்லா புத்தகங்களும் இருக்கிறதா என்பதை அதன் கண்காணி சரிபார்க்கலாம். அப்படி இல்லையென்றால், பள்ளி நூலகத்தில் வைப்பதற்காக பிரதிகளை ஆர்டர் செய்து, அதற்கான விலையை சபைமூலம் கொடுத்துவிடலாம். இந்தப் புத்தகங்களை உங்களுடைய வீட்டு நூலகத்திலும் சபையின் பள்ளி நூலகத்திலும் அநேக மொழிகளில்—நீங்கள் அதிகம் பயன்படுத்தாத மொழிகளிலும்கூட—வைத்திருப்பது நல்லது. அந்த மொழியைப் பேசுகிற எவரையாவது நீங்கள் வெளி ஊழியத்தில் சந்தித்தால் அல்லது அந்த மொழி தெரிந்த அக்கறையுள்ள ஒருவர் கூட்டங்களுக்கு ஆஜராக ஆரம்பித்தால் இது பிரயோஜனமாய் இருக்கலாம். இந்தப் புத்தகங்களில் எதையும் நாங்கள் மறு அச்சு செய்யும் திட்டமில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்—தற்போதைய இருப்புகள் தீர்ந்துவிட்டால், நீங்கள் மறுபடியும் ஒருபோதும் புதிய பிரதிகளைப் பெற முடியாமல் போகலாம்!
4 நீங்கள் ஊழியத்தில் பங்குகொள்ளும் போதெல்லாம் இந்தப் பிரசுரங்களில் சிலவற்றைக் கொண்டுசெல்லும்படியும் நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசேஷ பிரசுர அளிப்பு திட்டங்களின்போது மட்டுமல்ல, இந்த வருடத்தில் எந்தச் சமயத்திலும் அவற்றை விசேஷ விலையாகிய 2.50 ரூபாய்க்கு அளிக்கலாம் என்பதை மனதிற்கொள்ளுங்கள். அவற்றை ஒரு செட்டாக அளிக்கலாம்—உதாரணமாக, நீங்கள் ஒரு புத்தகத்தை சிறப்பித்துக் காண்பித்து, நான்கு புத்தகங்களை ஒன்றாக சேர்த்து 10.00 ரூபாய்க்கு அளிக்கலாம். பரிணாமம் மற்றும் இந்த வாழ்க்கைதானா? போன்ற இத்தகைய புத்தகங்களில் அநேகம், ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் விசேஷ தகவலை அளிக்கின்றன; வீட்டுக்காரர் அந்த விஷயத்தைக் குறித்து கேட்பாராகில் பிரயோஜனமான முறையில் அவற்றை பயன்படுத்தலாம்.
5 பல புத்தகங்கள் அடங்கிய தேவராஜ்ய நூலகம் மதிப்புமிக்க ஒரு சொத்தாக உள்ளது; இது, ஒரு குறிப்பிட்ட தலைப்பில் சிலசமயங்களில் அதிக விளக்கமான தகவலை கொண்டுள்ள பழைய புத்தகங்களை எடுத்துப்பார்ப்பதன் மூலம் நம்முடைய பைபிள் அறிவை ஆழப்படுத்துவதற்கு உதவுகிறது. கூடுதலாக, ஊழியத்தில் பங்குகொள்கையில், வீட்டுக்காரருடைய கவனத்தைத் திருப்புகிற சரியான புத்தகத்தை வைத்திருப்பது ஒரு நல்ல சம்பாஷணைக்கும் அதன் பின்பு ஒரு பைபிள் படிப்புக்கும் வழிநடத்தி, அந்த நபர் ஜீவனுக்கான பாதையில் வரும்படி செய்யலாம். ஆகவே, மேலே பட்டியலிடப்பட்டுள்ள புத்தகங்களை போதுமானளவு வைத்திருப்பதற்காக உங்களுடைய சபையின் மூலம் ஆர்டர் செய்யும்படியும் உங்களுடைய தனிப்பட்ட படிப்பிலும் வெளி ஊழியத்திலும் அவற்றை நன்கு பயன்படுத்திக்கொள்ளும்படியும் நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம்.—நீதி. 2:10, 11.