புதிய சிற்றேட்டையும் அதன் கேசட்டையும் உபயோகித்து கடவுள் தேவைப்படுத்துகிறவற்றை கற்க மற்றவர்களுக்கு உதவுங்கள்
1 “தேவ சமாதான தூதுவர்கள்” மாவட்ட மாநாட்டில், கடவுள் தேவைப்படுத்துகிறவற்றை கற்க மற்றவர்களுக்கு உதவும்படி வலியுறுத்தப்பட்டது. கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை வெளியிட்டப் பின்பு, கொடுக்கப்பட்ட ஒரு பேச்சில், கடவுளை சேவிப்பதில் முக்கியமாக தேவைப்படுகிறவற்றை கற்கும்படி மற்றவர்களுக்கு உதவி செய்ய இந்தச் சிற்றேட்டை பயன்படுத்தும்படியும், சிற்றேட்டை உபயோகித்து பைபிள் படிப்பை நடத்தும்படியும் உற்சாகமளிக்கப்பட்டது. இந்தச் சிற்றேட்டில் 13 இருபக்க பாடங்களும், மூன்று ஒருபக்க பாடங்களும் உள்ளன; கடவுளை பிரியப்படுத்த தேவைப்படும் முக்கிய தேவைகளைக்குறித்து, கூடுமானவரை குறைந்த காலத்திற்குள் வீட்டுக்காரர் புரிந்துகொள்ள இவை உதவுகின்றன. இந்தப் பிரசுரத்தை உபயோகித்து பைபிள் படிப்பு ஆரம்பிப்பது எவ்வளவு சுலபம் என்பதை அந்தப் பேச்சும், நடிப்பும் காட்டின.
2 அப்போது கேட்கப்பட்ட கேள்வியானது: “அக்கறையுள்ள நபருக்கு படிக்கத்தெரியவில்லை என்றால் என்ன?” அச்சமயம், இத்தகைய அறிவிப்போடு ஓர் ஆடியோ கேசட் வெளியிடப்பட்டது: “இந்தப் புதிய சிற்றேட்டை ஆடியோ கேசட்டில் கிடைக்கும்படி சங்கம் செய்திருக்கிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” இந்தக் கேசட் இப்போது பத்து இந்திய மொழிகளில் கிடைக்கிறது. அநேக படங்கள் நிறைந்துள்ள இந்தச் சிற்றேட்டையும் அதனுடைய ஆடியோ கேசட்டையும் கொண்டு, படிக்கத் தெரியாத அக்கறையுள்ளோர் பலரிடத்தில் நம்மால் பைபிள் படிப்புகள் நடத்த முடியவேண்டும். (1 தீ 2:3, 4) கூடுதலாக, இந்தப் சிற்றேட்டையும் கேசட்டையும் சேர்த்து, இன்னும் சரிவர படிக்கத்தெரியாத சிறுபிள்ளைகளுக்கு பைபிள் படிப்புகளை நடத்தவும்கூட உபயோகிக்கலாம். இதனை எவ்வாறு திறம்பட செய்யலாம்?
3 வீட்டுக்காரரின் வீட்டிற்கு மறுசந்திப்பு செய்வதற்காக பிரஸ்தாபி வந்திருப்பதாக வைத்துக்கொள்வோம். பிரஸ்தாபி ஒரு கேசட் பிளேயரையும் உள்ளூர் மொழியிலுள்ள தேவைப்படுத்துகிறார் என்ற சிற்றேட்டின் கேசட்டையும் உபயோகித்து, கடவுள் தேவைப்படுத்துகிற காரியங்கள் எவை என்பதை படிக்கத்தெரியாத வீட்டுக்காரர் கற்றுக்கொள்ள தேவைப்படுத்துகிறார் என்ற சிற்றேடும் கேசட்டும் பைபிள் படிப்பு நடத்தப் எவ்விதம் பயன்படும் என்பதை நடித்துக்காட்டுகிறார்.
4 முதலில் டேப்ரிக்கார்டரை ஆன் செய்யுங்கள். வீட்டுக்காரர் டேப்பை கேட்க ஆரம்பிக்கையில், நாம் முதல் பாடத்தின் முதல் பாராவிடம் வருகிறோம், கடவுளிடமிருந்து கிடைத்த மதிப்புமிக்க ஒரு பரிசு பைபிள் என்று அது சொல்கிறது. டேப்ரிக்கார்டரை நிறுத்திவிட்டு, பக்கம் மூன்றிலுள்ள படத்தை வீட்டுக்காரருக்கு காட்டி, பண்டைய கையெழுத்துப் பிரதிகளிலிருந்து எவ்வாறு பைபிள் பிரதியெடுக்கப்பட்டது என்பதையும், அவ்வாறு செய்வதில் அடங்கியிருந்த சிரமத்தையும் அப்படம் எவ்விதம் விளக்குகிறது என்று குறிப்பு சொல்லுங்கள். நீங்கள் அடுத்தப் பாடத்திற்கு செல்கையில், கடவுளுடைய படைப்பிலிருந்தும் அவருடைய வார்த்தையிலிருந்தும் நாம் அவரைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் என்பதை ஆறாவது பாரா காட்டுகிறது. மறுபடியும் டேப்ரிக்கார்டரை நிறுத்திவிட்டு, பக்கங்கள் நான்கிலும் ஐந்திலும் கொடுக்கப்பட்டுள்ள படங்களிடமாக வீட்டுக்காரரின் கவனத்தை திருப்பி, யெகோவாவின் படைப்பு திறனை உயர்த்திக்காட்டும் வண்ணம் அவரது குறிப்புகளை சொல்லும்படி சொல்லுங்கள். ஆறாவது பாராவில் இருக்கையிலேயே, பைபிளை திறந்தவண்ணம் ஒரு ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருப்பதை காட்டுங்கள். இவ்வாறாக, கடவுள் இருக்கிறார் என்பதை அவருடைய படைப்புகளின் மூலமும் அவருடைய வார்த்தையின் மூலமும் அறிந்துகொள்ளலாம் என்பதை வீட்டுக்காரரின் மனதில் பதியச்செய்யுங்கள். மற்ற பாடங்களுக்கும் இதே முறையை பின்பற்றுங்கள்.
5 எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் டேப்ரிக்கார்டரை நிறுத்த கவனமாக இருங்கள், படங்களிடமாக கவனத்தைத் திருப்புங்கள். ஒவ்வொரு பாடமும் முடிந்த பின்பு, (டேப்ரிக்கார்டரை நிறுத்திவிட்டு) மறுபார்வை கேள்விகளிடமாக திரும்பவும் செல்லுங்கள்; வீட்டுக்காரரை அவருடைய சொந்த வார்த்தையில் குறிப்புகளை சொல்ல விடுங்கள். மாணாக்கரின் கவனிக்கும் அளவு, திறமைகள் ஆகியவற்றை பொருத்து, குறைந்தபட்சம் ஒரு அதிகாரத்தை ஒருபடிப்பில் முடிக்க இயலவேண்டும். வேகவேகமாக படிப்பதை தவிர்க்கவும். முக்கிய குறிக்கோளானது, அந்த மாணாக்கர் யெகோவாவுக்காக இருதயப்பூர்வமான மதித்துணருதலை வளர்க்க உதவவேண்டும். இந்தச் சிற்றேட்டில் விளக்கப்பட்டுள்ள அடிப்படைகளை அந்த வீட்டுக்காரர் புரிந்துகொண்டவுடன், அறிவு புத்தகத்தினிடமாக மாறி, படிப்பை தொடருங்கள்.
6 நீங்கள் பைபிள் படிப்பு ஆரம்பித்த கையோடு, உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு வரும்படி வீட்டுக்காரரை அழையுங்கள். ஒவ்வொருவாரமும், பொதுப்பேச்சின் தலைப்பை அவருக்குத் தெரியப்படுத்துங்கள், அந்த மாணக்கர் அக்கறை காட்டிய பொருளின் பேரில் பொதுப்பேச்சு இருந்தால், ஆஜராகும்படி விசேஷ ஊக்கத்தை கொடுங்கள். கூட்டம் நடக்கும் இடத்திற்கு அவர் வரும்போது, அவரை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்துவையுங்கள். இவ்விதமாக, அந்த மாணக்கர் அமைப்போடு கூட்டுறவுகொள்ள படிப்படியாக உங்களால் உதவ முடியும். அவர் ஓரிரு கூட்டங்களுக்கு வந்தப்பின், அவருக்கு ஏதாவது தயக்கம் இருந்தால் அதனை மேற்கொண்டு, தன்னுடைய சொந்த வார்த்தையில் சுருக்கமான குறிப்புகளை சொல்ல அவருக்கு உதவிசெய்யுங்கள். இது அங்கு நடக்கும் கூட்டத்தில் அவரை ஈடுபடும்படி அவருக்கு உதவி செய்யும்.
7 அந்த மாணாக்கர் முன்னேற்றம் செய்ய செய்ய, அந்தச் சிற்றேட்டிலிருந்தோ, கேசட்டிலிருந்தோ அறிவு புத்தகத்திலிருந்தோ அவர் கற்கும் நல்ல குறிப்புகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும்படி அவருக்கு ஊக்கம் தாருங்கள். ஏற்ற சமயத்தில், ஊழியத்தில் நம்மோடு அவர் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அவரிடத்தில் கலந்துரையாடுங்கள். முழுக்காட்டப்படாத ஒரு பிரஸ்தாபியாக ஆகும் சிலாக்கியத்திற்காக அவரை தயார் செய்யுங்கள். இந்தப் படிகள் ஒப்புக்கொடுக்கவும், குறித்த காலத்தில் முழுக்காட்டுதல் எடுக்கவும் தகுதிப்பெறுப்படி அவருக்கு உதவும்.
8 ஊக்கம்தளராத, பகுத்தறிவுள்ள ஒரு ஆசிரியராக நீங்கள் இருக்கையில், அந்த மாணாக்கர் யெகோவாவுக்காகவும் அவருடைய அமைப்புக்காகவும் கொண்டுள்ள அன்பின் அளவை உங்களால் அளவிட முடியும். படிப்புத்திறமை குறைவாக இருக்கும் நபர்களுக்கு தேவைப்படுத்துகிறார் சிற்றேடும், அதன் கேசட்டும் இரட்டை-உதவிகளாக உள்ளன என்பதை நினைவில் வையுங்கள். அத்தகைய ஆட்கள் கடவுளுடைய புதிய உலகில் நித்திய ஜீவனை அடைய உதவும் வகையில் இவற்றை நன்றாக பயன்படுத்துங்கள்.