ராஜ்ய மன்ற நிதி
ஜனவரி 1997 நம் ராஜ்ய ஊழியத்தில் வெளிவந்த, “நம் கடவுளுடைய வீட்டை அசட்டை செய்யக் கூடாது” என்ற உட்சேர்க்கையில் சொல்லப்பட்டிருப்பதற்கு ஏற்றவாறு நீங்கள் செயல்பட்டதற்காக நாங்கள் உங்களுக்கு நன்றிசொல்ல விரும்புகிறோம். அந்த உட்சேர்க்கையின் ஆறாவது பக்கத்தில் போடப்பட்டிருந்த, “ஒரு ராஜ்ய மன்றம் கட்ட நன்கொடை அளிப்பதற்கு உங்கள் இருதயம் உங்களைத் தூண்டுகிறதா?” என்ற பெட்டியை வாசித்த பிறகு நன்கொடை அனுப்புவதற்கு அநேகருடைய இருதயம் உந்துவித்ததாக தெரிகிறது; ஏனென்றால் தேசிய ராஜ்ய மன்ற நிதிக்கு வந்த நன்கொடைகளில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டதை நாங்கள் கவனித்தோம். தற்சமயம் ராஜ்ய மன்ற திட்டத்தை வைத்திருக்கிற சபைகளுக்கு உதவிசெய்ய இந்தப் பணம் நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதைக் குறித்து தயவுசெய்து நிச்சயமாயிருங்கள். இந்த நிதிக்கு உங்களுடைய ஆதரவு தொடர்ந்து இருக்கும்படி நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அதே சமயத்தில், எல்லா நன்கொடைகளையும் தேசிய ராஜ்ய மன்ற நிதிக்காகவே ஒதுக்கிவைக்க வேண்டாம் என குறிப்பிட விரும்புகிறோம். விசேஷ பயனியர்களை ஆதரித்தல், பயணக் கண்காணிகளை அனுப்புதல், மாவட்ட மாநாடுகளை ஏற்பாடு செய்தல் போன்ற ராஜ்ய பிரசங்க வேலைக்கு தேவைப்படும் உள்ளமைப்பின் மற்ற அம்சங்களில் சங்கம் பேரளவான நிதியைப் பயன்படுத்துகிறது. எனவே, தனிப்பட்ட நபர்கள், சபைகள், வட்டாரங்களிடமிருந்து வரும் பொதுவான நன்கொடைகளும் வரவேற்கப்படுகின்றன. இவற்றை “உலகளாவிய பிரசங்க வேலைக்காக” என்று வெறுமனே குறித்து அனுப்பலாம்; இதன்மூலம், சங்கத்தின் தீர்மானத்தின்படி, பல்வேறு காரியங்களில் எவற்றிற்காவது இந்த நிதிகள் பயன்படுத்தப்படலாம்.
யெகோவாவின் ஊழியர்கள் தங்களுடைய நேரம், சக்தி, நிதி ஆகியவற்றை அவருடைய நோக்கத்தை நிறைவேற்ற தொடர்ந்து தாராளமாய் வழங்குவார்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். மேலும், அதற்குப் பிரதிபலனாக, யெகோவா அவர்களுக்கு தாராளமாய் திருப்பிக் கொடுப்பார்.—மல். 3:10.