அக்டோபர் ஊழியக் கூட்டங்கள்
குறிப்பு: வரவிருக்கும் மாதங்களில் ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணையை நம் ராஜ்ய ஊழியம் ஒவ்வொரு வாரத்திற்கும் அளிக்கும்; ஆனால், “கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம்” மாவட்ட மாநாட்டிற்கு செல்வதற்கும், அதன்பின் அதைப் பின்தொடரும் வாரத்தில் நிகழ்ச்சிநிரல் சிறப்புக் குறிப்புகளை 30 நிமிடம் மறுபார்வை செய்வதற்கும் ஏதுவாக, சபைகள் தேவையான மாற்றங்களை செய்துகொள்ளலாம். மாவட்ட மாநாட்டு நிகழ்ச்சிநிரலை அந்தந்த நாள்படி மறுபார்வை செய்ய இரண்டு அல்லது மூன்று தகுதிபெற்ற பிரஸ்தாபிகள் முன்கூட்டியே நியமிக்கப்படவேண்டும்; அவர்கள் முக்கிய குறிப்புகளை சிறப்பித்துக்காட்டுவார்கள். நன்கு தயாரிக்கப்பட்ட இந்த மறுபார்வை, தனிப்பட்ட விதமாய் பொருத்துவதற்கும் வெளி ஊழியத்தில் பயன்படுத்துவதற்குமான முக்கிய குறிப்புகளை நினைவில் வைக்க சபைக்கு உதவும். சபையாரின் விமர்சனங்களும் அனுபவங்களும் சுருக்கமாகவும் குறிப்பாகவும் இருக்கவேண்டும்.
அக்டோபர் 6-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
15 நிமி:“ஜனங்கள் எல்லாரும் ஒருவரையொருவர் நேசிக்கும் காலம் வருமா?” கேள்விகளும் பதில்களும். ராஜ்ய செய்தி எண் 35-ன் சிறப்புக் குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். பிராந்தியத்திலுள்ள மக்கள் ஏன் இந்தத் தகவலிலிருந்து நன்மைபெறுவர் என்பதற்கான காரணங்களை சுட்டிக்காட்டுங்கள். அதன் விநியோகிப்பில் முழுமையாக பங்குகொள்வதற்கும் அக்கறை காண்பிக்கும் அனைவரையும் மறுபடியும் சந்திப்பதற்கும் இப்போதே திட்டமிடுவதன் அவசியத்தை வலியுறுத்துங்கள்.
20 நிமி:“ராஜ்ய செய்தி எண் 35-ஐப் பரந்தளவில் விநியோகியுங்கள்.” ஊழியக் கண்காணி அளிக்கும் ஆரம்பப் பேச்சு. பாராக்கள் 5-8-ஐக் கேள்வி பதில் மூலம் சிந்தியுங்கள். விரிவான ஊழியத்திற்கு சபை செய்திருக்கும் ஏற்பாடுகளைக் குறிப்பிடுங்கள். எந்தளவு முடியுமோ அந்தளவு பிராந்தியத்தை முடிப்பதற்கான வழிகளை கலந்தாலோசியுங்கள். பஸ் ஸ்டாப்புகளிலோ கடைகளிலோ வாகன நிறுத்துமிடங்களிலோ மற்ற இடங்களிலோ மக்களுக்குச் சாட்சிகொடுக்கையில் பிரஸ்தாபிகள் ராஜ்ய செய்தி எண் 35-ஐப் பயன்படுத்தலாம். பிரசங்க ஊழியத்தில் பங்குகொள்ள விருப்பப்படும் புதியவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதன்பேரில் ஆலோசனைகள் வழங்குங்கள். ஏப்ரல் 1995 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையின் 11-ம் பாராவிலுள்ள தகவலை சேர்த்துக்கொள்ளுங்கள். சில பிராந்தியங்களில், ராஜ்ய செய்தியை விநியோகிக்கையில் தனியாக ஊழியம் செய்வதும் ப்ரீஃப்கேஸை எடுத்துச்செல்லாமல் இருப்பதும் பிரயோஜனமாய் இருக்கலாம். இரண்டு அல்லது மூன்று சுருக்கமான பிரசங்கங்களை நடித்துக்காட்டுங்கள்.
பாட்டு 126 மற்றும் முடிவு ஜெபம்.
அக்டோபர் 13-ல் துவங்கும் வாரம்
12 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் புதிய பிரதிகளிலிருந்து பேச்சுக் குறிப்புகளைக் குறிப்பிடுங்கள். வாரயிறுதி நாட்களில், ராஜ்ய செய்தி எண் 35-உடன் பத்திரிகைகளையும் சந்தாக்களையும் ஊழியத்தில் அளிப்போம் என்பதை அனைவருக்கும் நினைப்பூட்டுங்கள். அக்கறை காண்பிக்கும் அனைவரையும் நாம் மீண்டும் சந்திக்கவேண்டும்.
15 நிமி:சபை தேவைகள்.
18 நிமி:“அசட்டை செய்வோரை சந்திக்கையில் என்ன செய்வீர்கள்?” இரு மூப்பர்கள் கலந்தாலோசிக்கிறார்கள். ஜூலை 15, 1974, ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 445-6-ல், “அசட்டை மனப்பான்மையை நீங்கள் எவ்வாறு சமாளிக்கலாம்?” என்ற உபதலைப்பின்கீழுள்ள தகவலிலிருந்து குறிப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 130 மற்றும் முடிவு ஜெபம்.
அக்டோபர் 20-ல் துவங்கும் வாரம்
15 நிமி:சபை அறிவிப்புகள். 1996 இயர்புக், பக்கங்கள் 6-8-ல், “ராஜ்ய செய்தியின் உலகளாவிய விநியோகிப்பு” என்ற தலைப்பின்கீழுள்ள சில அனுபவங்களை விவரியுங்கள். சென்றமுறை, ராஜ்ய செய்தி விநியோகிப்பில் பிரஸ்தாபிகள் எடுத்த தனிப்பட்ட முயற்சிகளை சிறப்பித்துக்காட்டுங்கள். ராஜ்ய செய்தி எண் 35-ன் விநியோகிப்பில் முழுமையாக பங்குபெறும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி:“நான் முழுக்காட்டப்பட வேண்டுமா?” அக்டோபர் 1, 1992, ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 20-3-ன் அடிப்படையில் மூப்பர் அளிக்கும் உற்சாகமான பேச்சு; முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகள் அனைவரையும், முழுக்காட்டுதலை நோக்கி முன்னேறும்படி உற்சாகப்படுத்துங்கள். அக்டோபர் 1, 1994 காவற்கோபுரம், பக்கங்கள் 26-30-ல் உள்ள குறிப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள்; தங்கள் பிள்ளைகள் பிரஸ்தாபிகள் ஆவதற்கும் இளம் வயதில் முழுக்காட்டுதல் எடுப்பதற்கும் எவ்வாறு கிறிஸ்தவ பெற்றோர் உதவலாம் என்பதைக் காண்பியுங்கள்.
15 நிமி:“நீங்கள் முழுநேர சாட்சியா?” மூப்பர் அளிக்கும் பேச்சு.
பாட்டு 133 மற்றும் முடிவு ஜெபம்.
அக்டோபர் 27-ல் துவங்கும் வாரம்
12 நிமி:சபை அறிவிப்புகள். ராஜ்ய செய்தி எண் 35-ன் விநியோகிப்பில் காணப்படும் முன்னேற்றத்தை குறிப்பிடுங்கள். உற்சாகமளிக்கும் அனுபவங்களைச் சொல்லுமாறு சபையாரை அழையுங்கள். அதுவரை எந்தளவு பிராந்தியம் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நவம்பர் 16-க்குள் இன்னும் எந்தளவு முடிக்க முடியுமென்பதையும் தெரிவியுங்கள். ராஜ்ய செய்தி தீர்ந்துவிட்டால், மீதமுள்ள நாட்களில் அறிவு புத்தகத்தை நாம் அளிப்போம். ராஜ்ய செய்திக்கு அக்கறை காண்பித்தவர்களை மறுசந்திப்பு செய்கையில் பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற இலக்கைப் பெற்றிருக்கும்படி வலியுறுத்துங்கள்.
15 நிமி:மனக்கசப்புற்ற நிலையில் நம்பிக்கையைக் கண்டடைவது எப்படி. மே 15, 1997, காவற்கோபுரம், பக்கங்கள் 22-5-ன் அடிப்படையில் மூப்பரின் பேச்சு.
18 நிமி:உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கக்கடவது. நம் ஊழியம் புத்தகத்தில் பக்கங்கள் 84-8-ன் அடிப்படையில் பேச்சும் கலந்தாலோசிப்பும். பின்வரும் கேள்விகளுக்கு குறிப்பான பதில்களைப் பிரஸ்தாபிகள் அளிக்கும்படி முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள்: (1) யெகோவாவின் சாட்சிகள் ஏன் வீட்டுக்குவீடு பிரசங்கம் செய்கிறார்கள்? (2) இம்முறை, முதல் நூற்றாண்டில் எந்தளவுக்கு பயன்படுத்தப்பட்டது? (3) வீட்டுக்குவீடு பிரசங்கிப்பதற்கு இன்று ஏன் அவசர தேவை இருக்கிறது? (4) என்ன சூழ்நிலைமைகள், அதில் தவறாமல் பங்குகொள்வதை நமக்குக் கடினமாக்கலாம்? (5) விட்டுவிடாமல் தொடர்ந்து பிரசங்கிப்பதற்கான உதவியை நாம் எவ்வாறு பெறலாம்? (6) நம் ஒளியைப் பிரகாசிக்கச்செய்வதால் நாம் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறோம்? (7) மக்களை சந்திப்பதில் இன்னுமதிக வெற்றிகாண நாம் என்ன செய்யலாம்? கடைக்குக்கடை அல்லது தெரு ஊழியம் செய்கையில் தாங்கள் அனுபவித்த நல்ல அனுபவங்களைச் சொல்லுமாறு மூன்று அல்லது நான்கு பிரஸ்தாபிகளைக் கேட்பதன் மூலம் எடுத்துக்காட்டு அளியுங்கள்.
பாட்டு 136 மற்றும் முடிவு ஜெபம்.