அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் செப்டம்பர்: குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகம் 20.00 ரூபாய் நன்கொடைக்கு. அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தா 90.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தாக்களும் மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தாக்களும் 45.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தா கிடையாது. சந்தா மறுக்கப்பட்டால், பத்திரிகைகளின் தனிப்பிரதி ஒவ்வொன்றும் 4.00 ரூபாய்க்கு அளிக்கப்பட வேண்டும். சந்தாக்களைப் பெறும்போது, உருது, பஞ்சாபி (இவை மாதாந்தர பதிப்பு) ஆகியவற்றைத் தவிர இந்திய மொழிகள் அனைத்திலும் நேப்பாளியிலும் மாதம் இருமுறை காவற்கோபுரம் வருகிறது என்பதை தயவுசெய்து நினைவில் வையுங்கள். தமிழிலும் மலையாளத்திலும் விழித்தெழு! மாதம் இருமுறையும், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மராத்தி, நேப்பாளி, தெலுங்கு ஆகியவற்றில் மாதாந்தர பதிப்பாகவும் வெளிவருகிறது. உருது, பஞ்சாபி, பெங்காலி ஆகியவற்றுக்கான விழித்தெழு! காலாண்டு விநியோகஸ்தர் பிரதிகள் சபைகளுக்குக் கிடைக்கின்றன; ஆனால் இந்த மூன்று மொழிகளிலும் தனிப்பட்ட சந்தாக்கள் கிடையாது. அக்டோபர் 12 முதற்கொண்டு ராஜ்ய செய்தி எண் 35 விநியோகிக்கப்படும். நவம்பர்: ராஜ்ய செய்தி எண் 35-ன் விநியோகிப்பு தொடரும். ராஜ்ய செய்தி எண் 35-ன் கைவசமுள்ள பிரதிகள் தீர்ந்த பிற்பாடு அறிவு புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். டிசம்பர்: பின்வரும் மூன்று புத்தகங்களில் ஏதேனும் ஒன்றை 45.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம், (சிறியது 25.00 ரூபாய்), என்னுடைய பைபிள் கதை புத்தகம், (சிறியது 30.00 ரூபாய்) அல்லது எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர். மாற்றீடாக, ஜூலை நம் ராஜ்ய ஊழியத்தில் விசேஷ விலை புத்தகங்களாக பட்டியலிடப்பட்டிருக்கும் எந்தப் புத்தகமும் 2.50 ரூபாய்க்கு கொடுக்கப்படலாம். ஜனவரி: பாதி விலைக்கோ விசேஷ விலைக்கோ அளிக்க சங்கம் பட்டியலிட்டிருக்கும் பழைய 192-பக்க புத்தகங்களில் ஏதாவதொன்று. உள்ளூர் மொழியில் அப்படிப்பட்ட புத்தகங்கள் இல்லையென்றால், அறிவு புத்தகமோ குடும்ப மகிழ்ச்சி புத்தகமோ 20.00 ரூபாய்க்கு அளிக்கப்படலாம். குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்டுள்ள அளிப்பு திட்டத்திற்கான பிரசுரங்களை இன்னும் ஆர்டர் செய்திராத சபைகள், தங்களுடைய அடுத்த பிரசுர ஆர்டர் நமூனாவில் (S-AB-14) ஆர்டர் செய்யவேண்டும்.
◼ சபையோடு கூட்டுறவுகொள்பவர்கள், காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கான எல்லா புதிய மற்றும் புதுப்பிப்பு சந்தாக்களையும், தங்களது சொந்த சந்தாக்கள் உட்பட, சபையின்மூலம் அனுப்ப வேண்டும்.
◼ நம் ராஜ்ய ஊழியத்தின் இந்த பிரதியினுடைய உட்சேர்க்கை, “1998 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை” ஆகும்; 1998 முழுவதும் அட்டவணையை பார்ப்பதற்காக இதை வைத்திருக்க வேண்டும்.
◼ நவம்பர் மாதத்தில் ஐந்து வாரயிறுதி நாட்கள் இருப்பதால், துணைப் பயனியர் ஊழியம் செய்வது அநேகருக்கு சௌகரியமாக இருக்கலாம்.
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
என்னுடைய பைபிள் கதை புத்தகம் (சிறிய அளவு) —கன்னடா
குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் —உருது
காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!—1996 பவுண்ட் வால்யூம்கள் —ஆங்கிலம்
◼ மீண்டும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:
பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு டீலக்ஸ் பாக்கெட் சைஸ் (Dlbi25) கருப்பு மற்றும் மெரூன் நிறங்களில்—ஆங்கிலம்
மரணத்தின் மேல் வெற்றி—உங்களுக்குச் சாத்தியமா? —குஜராத்தி, தமிழ்
◼ கையிருப்பில் இல்லாத பிரசுரங்கள்:
ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல் —மலையாளம் புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல் —மலையாளம்