அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் பிப்ரவரி: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகம், 25.00 ரூபாய் நன்கொடைக்கு (பெரியது 45.00 ரூபாய்) அல்லது பாதி விலைக்கோ விசேஷ விலைக்கோ அளிக்க சங்கம் பட்டியலிட்டிருக்கும் 192 பக்க பழைய புத்தகங்களில் எதையாவதை அளிக்கலாம். உள்ளூர் பாஷையில் அப்படிப்பட்ட புத்தகங்கள் இல்லையென்றால், அறிவு அல்லது குடும்ப மகிழ்ச்சி புத்தகங்கள் ஒவ்வொன்றையும் 20.00 ரூபாய்க்கு அளிக்கலாம். மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகம் 20.00 ரூபாய் நன்கொடைக்கு. வீட்டு பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதில் கவனம் செலுத்துங்கள். ஏப்ரல் மற்றும் மே: காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தாக்கள்.
◼ மே 4, 1998-ல் துவங்கும் வாரம் முதல் செப்டம்பர் 14, 1998-ல் முடியும் வாரம் வரையாக சபை புத்தக படிப்பில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? ஆகிய சிற்றேடுகள் ஒன்றன்பின் ஒன்றாக கலந்தாலோசிக்கப்படும்.
◼ செயலரும் ஊழியக் கண்காணியும் அனைத்து ஒழுங்கான பயனியர்களின் ஊழியத்தைக் குறித்தும் மறுபார்வை செய்யவேண்டும். தேவைப்படும் மணிநேரங்களை அடைவதில் எவருக்காவது ஒருவேளை சிரமம் இருக்குமானால், உதவி அளிப்பதற்கான ஏற்பாட்டை மூப்பர்கள் செய்யவேண்டும். ஆலோசனைகளுக்காக, அக்டோபர் 1, 1993, மற்றும் அக்டோபர் 1, 1992-ல் பெற்ற சங்கத்தினுடைய கடிதங்களை (S-201) மறுபார்வை செய்யுங்கள். மேலும், அக்டோபர் 1986 நம் ராஜ்ய ஊழியத்தினுடைய உட்சேர்க்கையில் பாராக்கள் 12 முதல் 20-ஐயும் பாருங்கள்.
◼ சபைகள் உள்ளூரில் நடைபெறுகின்ற மாநாடுகளுக்கு ஆஜராகிறபோது பின்வரும் மாற்றங்களைக் குறித்து மூப்பர்கள் கவனமாயிருக்க வேண்டும்: விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரல் எப்போது நடக்க திட்டமிடப்பட்டிருக்கிறதோ, அந்த வாரத்தில் பொதுப் பேச்சு மற்றும் காவற்கோபுர படிப்பைத் தவிர மற்ற கூட்டங்கள் அனைத்தும் நடத்தப்பட வேண்டும். வட்டார மாநாட்டில் ஆஜராவதற்கு திட்டமிடுகின்றபொழுது அந்த வாரத்தில் சபை புத்தகப் படிப்பு மட்டும் உள்ளூர் சபைகளில் நடத்தப்பட வேண்டும். அந்த வாரத்தில் நடக்கவேண்டிய தேவராஜ்ய ஊழியப்பள்ளி, ஊழியக் கூட்டம் ஆகியவற்றை சபைகள் ரத்து செய்யலாம்.