உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 2/98 பக். 7
  • “யெகோவா எனக்கு சகாயர்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “யெகோவா எனக்கு சகாயர்”
  • நம் ராஜ்ய ஊழியம்—1998
  • இதே தகவல்
  • பரிசுத்த ஆவி எனது சகாயரா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • அன்பினால் பலப்படுத்தப்படுகிற தைரியம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • நல்ல தைரியத்தோடிருங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • ‘பலங்கொண்டு தைரியமாயிருங்கள்!’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1998
km 2/98 பக். 7

“யெகோவா எனக்கு சகாயர்”

1 இயேசு தமது ஆரம்பகால சீஷர்களை பிரசங்கிக்க சொன்னபோது, “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்” என்றார். (மத். 10:16) அது அவர்களை, கலக்கமடைந்து பின்வாங்கச் செய்ததா? இல்லை. அப்போஸ்தலன் பவுல் பின்னர் உடன் கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு சொல்கையில் வெளிக்காட்டிய மனப்பான்மையையே அவர்களும் பெற்றனர்: “மிகுந்த தைரியங்கொண்டு, ‘யெகோவா எனக்கு சகாயர்; நான் பயப்படமாட்டேன். மனிதர் எனக்கு என்ன செய்ய முடியும்?’ என சொல்லுங்கள்.” (எபி. 13:6, NW) இயேசுவினுடைய நாமத்துக்காக அவமானமடைவதற்குத் தாங்கள் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால் அவர்கள் சந்தோஷப்பட்டனர்; மேலும் இடைவிடாமல் நற்செய்தியை போதிப்பதிலும் அறிவிப்பதிலும் ஈடுபட்டனர்.—அப். 5:41, 42.

2 இன்று உலகளாவிய பிரசங்க வேலை அதன் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இயேசு முன்னறிவித்தபடியே, நாம் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுகிறோம். (மத். 24:9) நமது பிரசங்க வேலை எதிர்க்கப்படுகிறது, ஏளனம் செய்யப்படுகிறது; உலகின் சில இடங்களில் அது தடையும் செய்யப்பட்டிருக்கிறது. நமக்கு விசுவாசம் இல்லாமலிருந்தால், பயத்தால் நம்பிக்கை இழக்கலாம். என்றாலும், யெகோவா நமக்கு சகாயர் என்பதை அறிந்திருப்பது நமக்குப் புத்துயிர் அளித்து, தொடர்ந்து நிலைத்திருக்க நம்மை பலப்படுத்துகிறது.

3 தைரியம் என்பது மன பலத்தோடும், துணிவோடும், வீரதீரத்தோடும் இருப்பதை அர்த்தப்படுத்துகிறது. அது பயம், கூச்சம், கோழைத்தனம் ஆகியவற்றின் எதிர்ப்பதமாகும். இயேசுவின் சீஷர்களுக்கு, சகித்திருப்பதற்கு எப்போதுமே தைரியம் தேவையாயிருந்தது. தேவனோடு பகைமையில் இருக்கும் ஓர் உலகின் மனப்பான்மைகளாலும் நடவடிக்கைகளாலும் நாம் சோர்ந்துபோவதைத் தவிர்க்க இது தேவை. உலகை வென்ற இயேசுவின் மிகச் சிறந்த முன்மாதிரியை நினைத்துப்பார்ப்பது நமக்கு எவ்வளவு உற்சாகமளிக்கிறது! (யோவா. 16:33) கடும் சோதனைகளின் மத்தியில் இவ்வாறு தைரியமாய் அறிவித்த அப்போஸ்தலர்களையும் நினைத்துப் பாருங்கள்: “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.”—அப். 5:29.

4 நாம் பின்வாங்குகிறவர்கள் அல்ல: நம் வேலையைக் குறித்து நாம் தொடர்ந்து நம்பிக்கையான மனநிலையோடு இருக்க முயலவேண்டும். (எபி. 10:39) மனிதவர்க்கத்தினர் எல்லாருக்கும் அன்பையும் இரக்கத்தையும் காட்டுவதற்காகவே யெகோவா நம்மை அனுப்புகிறார் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். பயனுள்ள நோக்கமில்லாத எதையும் செய்யும்படி அவர் தமது ஊழியர்களுக்குச் சொல்லமாட்டார். நாம் செய்யும்படி நியமிக்கப்பட்டிருக்கும் அனைத்துமே, இறுதியில், தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களின் நன்மைக்கு ஏதுவானவையாகவே விளங்கும்.—ரோ. 8:28.

5 நம்பிக்கையான மனநிலை, நமது பிராந்தியத்தில் செம்மறியாடு போன்ற நபர்களைத் தொடர்ந்து தேடிக் கண்டுபிடிக்க நமக்கு உதவும். மக்கள், வெறுத்துப்போனவர்களாயும் நம்பிக்கை இழந்தவர்களாயும் இருப்பதால்தான் அசட்டை செய்கிறார்கள் என நாம் நினைக்கவேண்டும். நமது அன்பு, இரக்கமுள்ளவர்களாயும் பொறுமையுள்ளவர்களாயும் இருக்க நம்மைத் தூண்டவேண்டும். ஒவ்வொரு முறை நாம் பிரசுரத்தை அளிக்கையிலும், அல்லது சிறிதளவு அக்கறை இருப்பதாக காண்கையிலும் உடனடியாக மறுசந்திப்பு செய்து மேலும் அக்கறையைத் தூண்டுவதே நமது குறிக்கோளாய் இருக்கவேண்டும். ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதிலோ அதை திறம்பட்ட விதத்தில் நடத்துவதிலோ நமக்கு திறமையிருக்கிறதா என நாம் எப்போதும் சந்தேகிக்கக்கூடாது. அதற்கு மாறாக, யெகோவாவின் உதவியையும் வழிநடத்துதலையும் நாம் இடைவிடாமலும் ஜெபசிந்தையோடும் நாட வேண்டும்; அவர் நமக்கு உதவுவார் என்று உறுதியாய் நம்பவேண்டும்.

6 யெகோவா, இவ்வேலையை முடிவுவரை நடத்துவார் என்பதில் நமக்கு திடநம்பிக்கை இருக்கிறது. (பிலிப்பியர் 1:5-ஐ ஒப்பிடுக.) அவர் நமக்கு சகாயர் என உறுதியாக நம்புவது நம்மை பலப்படுத்துகிறது; ஆகவே நாம் “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல்” இருக்கிறோம்.—கலா. 6:9.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்