செப்டம்பர் ஊழியக் கூட்டங்கள்
செப்டம்பர் 7-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். “இதோ ஓர் ஆலோசனை” என்ற பெட்டியை மறுபார்வை செய்யவும்.
15 நிமி: “பெரிய செயல்களை நம்மாலும் செய்ய முடியும்.” கேள்விகளும் பதில்களும். புதிய ஊழிய ஆண்டிற்காக நியாயமான இலக்குகளை வைத்து அதற்காக கடினமாக உழைக்கும்படி எல்லோரையும் உற்சாகப்படுத்துங்கள்.—நம் ஊழியம், பக்கங்கள் 116-18-ஐக் காண்க.
20 நிமி: “பயனியர்கள் மற்றவர்களுக்கு உதவுதல்.” தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கொடுக்கப்படும் பயிற்சியோடு பயனியர்கள் தனிப்பட்ட விதமாக மற்றவர்களுக்கு ஊழியத்தில் உதவவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை ஒரு மூப்பர் விளக்குகிறார். அந்தக் கட்டுரையின் அடிப்படையில் சபையாரிடம் கேள்விகள் கேட்கிறார்; குறிப்பாக இந்த ஏற்பாட்டில் உட்பட்டுள்ள பயனியர்களும் பிரஸ்தாபிகளும் குறிப்புகள் சொல்லும்படி எதிர்பார்க்கிறார். இதிலிருந்து எவ்வாறு நல்ல பலன்களை பெறலாம் என்பதை கலந்தாராயுங்கள். பயனியர்கள் மற்றவர்களுக்கு உதவுவதில் பங்கு கொண்டதன் மூலம் எவ்வாறு மகிழ்ச்சியையும் நன்மையையும் அடைந்தனர் என்பதை சொல்லலாம். உதவி பெற்ற பிரஸ்தாபிகள் எவ்வாறு இந்த அன்பான ஏற்பாட்டை போற்றுகிறார்கள் என்பதையும் மகத்தான வெற்றியை அடையவும் ஊழியத்தில் சந்தோஷத்தை காணவும் எது உதவியது என்பதையும் குறிப்பிடலாம்.
பாட்டு 172, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 14-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
10 நிமி: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? பேச்சு. அடுத்த வாரம் முதல், புத்தகப் படிப்பில் இந்த சிற்றேட்டை படிக்க ஆரம்பிப்போம். எல்லோரையும் முன்கூட்டியே தயாரித்து வரும்படியும் சிற்றேட்டை நன்கு தெரிந்துகொண்டு மற்றவர்களுக்கு எவ்வாறு படிப்பு நடத்துவது என்று கற்றுக்கொள்ள ஒவ்வொரு கூட்டத்திற்கும் தவறாமல் வரும்படியும் உற்சாகப்படுத்துங்கள். “இந்தச் சிற்றேட்டை எப்படி பயன்படுத்துவது” என்ற பாராவை வாசியுங்கள். ஜனவரி 15, 1997, காவற்கோபுரம் பக்கங்கள் 16-17-ல் உள்ள பொருளைப் பயன்படுத்தி இந்த சிற்றேட்டில் உள்ள கேள்விகள், வசனங்கள், படங்கள் ஆகியவற்றுடன் போதிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துங்கள். புத்தகப் படிப்பு நடத்துபவர்கள் தாங்களே அதிகம் பேசிக்கொண்டிராமலும் கூடுதல் குறிப்புகளை சொல்லாமலும் வீட்டு பைபிள் படிப்பு நடத்துபவர்களுக்கு நல்ல முன்மாதிரி வைக்க வேண்டும்.—நம் ராஜ்ய ஊழியம், ஜூன் 1996, பக்கம், 3 பாரா 5-ஐ காண்க.
10 நிமி: கடந்த வருடம் எவ்வாறு செய்தோம்? கடந்த வருடத்திய சபை ஊழிய அறிக்கையையும் கூட்டங்களுக்கு ஆஜரானோரின் எண்ணிக்கையையும் செயலரும் ஊழியக் கண்காணியும் மறுபார்வை செய்கின்றனர். அறிக்கையின் சிறப்பான அம்சங்களைக் குறிப்பிட்டு எங்கு முன்னேற்றம் தேவை என்பதை தெரிவிக்கின்றனர். ஆகஸ்டில் அனைவரும் ஊழியத்தில் பங்கு கொண்டார்களா? ஒழுங்கான பிரஸ்தாபிகளாக ஆவதற்கு உதவுதல் உட்பட, வரவிருக்கும் மாதங்களில் எந்த இலக்குகளின் பேரில் மூப்பர்கள் கவனம் செலுத்துவார்கள் என்பதை குறிப்பிடுங்கள். வட்டாரக் கண்காணியின் கடந்த அறிக்கையில் உள்ள பொருத்தமான குறிப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
20 நிமி: “1998 ‘கடவுள் காட்டும் ஜீவ வழி’ மாவட்ட மாநாடுகள்.” (1-16 பாராக்கள்) கேள்விகளும் பதில்களும். பாராக்கள் 10 மற்றும் 11-ஐ வாசித்து நம்முடைய கண்ணியமான கிறிஸ்தவ தோற்றம், நடத்தை, நல்ல விதத்தில் பிள்ளைகளை பராமரித்தல் போன்றவற்றின் வேதப்பூர்வமான முக்கியத்துவத்தை வலியுறுத்துங்கள்.
பாட்டு 144, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 21-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
20 நிமி: “சகோதரர்களிடத்தில் நன்கு பழகுங்கள்.” கேள்விகளும் பதில்களும். டிசம்பர் 1, 1989, காவற்கோபுரம் பக்கங்கள் 14-15-ல் உள்ள குறிப்புகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்கு முயற்சி எடுக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “1998 ‘கடவுள் காட்டும் ஜீவ வழி’ மாவட்ட மாநாடுகள்.” (17-22 பாராக்கள்) கேள்விகளும் பதில்களும். பாரா 17-ஐயும் கொடுக்கப்பட்டுள்ள வசனத்தையும் வாசியுங்கள். தனிப்பட்ட ஒழுங்கையும் மற்றவர்களின் பேரில் கரிசனையையும் காட்ட வேண்டிய தேவையை, குறிப்பாக இருக்கைகளை பிடிக்கும் விஷயத்தில் காட்டும்படி வலியுறுத்துங்கள். “மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்” என்ற பெட்டியை மறுபார்வை செய்யும் சுருக்கமான பேச்சுடன் முடியுங்கள்.
பாட்டு 34, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 28-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். செப்டம்பர் மாத ஊழிய அறிக்கையை போடும்படி பிரஸ்தாபிகளுக்கு ஞாபகப்படுத்துங்கள். அதிகமான பத்திரிகைகளை வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அளிப்பதற்காக அக்டோபர் மாதத்தில் அனைவரையும் பங்கு கொள்ள திட்டமிடும்படி உற்சாகப்படுத்துங்கள். எவ்வாறு பிரசங்கத்தை தயாரிப்பது என்பதற்கான ஆலோசனைகளுக்கு அக்டோபர் 1996 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 8-ஐ காண்க. புதிய பத்திரிகைகளை உபயோகித்து ஒரு அளிப்பை நடித்துக் காட்டுங்கள்.
20 நிமி: “முன்நின்று வழிநடத்தும் கண்காணிகள்—ஊழியக் கண்காணி.” ஊழியக் கண்காணி கொடுக்கும் பேச்சு. அவருடைய பொறுப்புகளை மறுபார்வை செய்த பின்பு, ஊழியத்தில் திறமையையும் உள்ளூர் பிராந்தியத்தை அதிகரிக்க சபையாக ஒத்துழைக்கவும் உதவியாயிருக்கும் குறிப்பிட்ட சில வழிகளை விளக்குகிறார்.
13 நிமி: சபையில் நல்ல பிரஸ்தாபியாக இருப்பதற்கு என்ன தேவைப்படுகிறது? ஓரளவு சபையார் பங்கெடுப்புடன் பேச்சு. மேம்பட்ட திறமைகள் அல்லது ஆற்றல் தேவையில்லை. மாறாக அன்பு, தாழ்மை, வைராக்கியம், போற்றுதல் போன்றவற்றை வெளிக்காட்டும் மனமுவந்து அளிக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீழ்க்காணும் குணங்கள் ஏன் விரும்பத்தக்கது என சபையாரை கேளுங்கள்: (1) சந்தோஷமான மனநிலை, (2) கூட்டங்களில் தவறாமல் ஆஜராவதும் பங்கு கொள்வதும், (3) நியமிப்புகளை ஏற்றுக்கொள்வதும் நிறைவேற்றுவதும், (4) சபைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளோடும் மூப்பர்களோடும் ஒத்துழைப்பதும், (5) மனப்பூர்வமாக மற்றவர்களுக்கு உதவி செய்வதும், (6) தவறாமல் வெளி ஊழியத்தில் பங்கு கொள்வதும் மாதாமாதம் மறக்காமல் அறிக்கை செய்வதும்.
பாட்டு 25, முடிவு ஜெபம்.