உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/98 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1998
நம் ராஜ்ய ஊழியம்—1998
km 9/98 பக். 7

அறிவிப்புகள்

செப்டம்பருக்கான பிரசுர அளிப்புகள்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. அது இல்லையெனில், படைப்பு ஆங்கில புத்தகம் அல்லது என்றும் வாழலாம் புத்தகம் அளிக்கப்படலாம். அக்டோபர்: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கான சந்தாக்கள். சந்தா மறுக்கப்பட்டால், தனிப்பிரதிகளை அளிக்கலாம். நவம்பர்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிளோடு நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தை அளிக்க வேண்டும்.

◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்டுள்ள ஒருவர் சபைக் கணக்குகளை செப்டம்பர் 1 அல்லது கூடிய விரைவில் தணிக்கை செய்யவேண்டும். சீக்கிரத்தில் அதை சபையில் அறிவிப்பு செய்ய வேண்டும்.

◼ திரும்ப நிலைநாட்டப்பட மனமுள்ள சபைநீக்கம் செய்யப்பட்ட அல்லது தொடர்பறுத்துக்கொண்ட எந்தவொரு நபரின் சம்பந்தமாகவும், ஏப்ரல் 15, 1991, ஆங்கில காவற்கோபுரம் பக்கங்கள் 21-3-ல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றும்படி மூப்பர்கள் நினைப்பூட்டப்படுகின்றனர்.

◼ சபையுடன் தொடர்பு கொள்ளும் அனைவரும் தங்கள் சொந்த சந்தா உட்பட, காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கான அனைத்து புதிய மற்றும் புதுப்பித்தல் சந்தாக்களை சபையின் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

◼ பிரசுரங்களுக்காக பிரஸ்தாபிகள் சங்கத்திற்கு நேரடியாக எழுதிக் கேட்டால் அனுப்பப்படாது. சபை பிரஸ்தாபிகளின் மாதாந்தர பிரசுர ஆர்டர்களை சங்கத்திற்கு அனுப்புவதற்கு முன் நடத்தும் கண்காணி ஒவ்வொரு மாதமும் சபைக்கு அறிவிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் பிரசுரங்கள் தேவைப்படுபவர்கள் தங்களுக்கு வேண்டிய பிரசுரங்களை லிட்டரேச்சர் கையாளும் சகோதரரிடம் ஆர்டர் செய்ய முடியும். விசேஷ தருவிப்பு பிரசுரங்கள் எவை என தயவுசெய்து தெரிந்து வைத்திருங்கள்.

◼ இவ்வருடம் மேலும் இரண்டு மாவட்ட மாநாடுகள் தமிழ் நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இடம், தேதிகள், மாநாட்டு தலைமையகங்கள் ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன:

கோயம்புத்தூர்: நவம்பர் 27-29—டி. பி. செல்லப்பா, 105, சங்கனூர் மெயின் ரோடு, கணபதி, கோயம்புத்தூர், தமிழ்நாடு - 641 006

மதுரை: டிசம்பர் 25-27—கே. பி. சாமுவேல், 123, ஏரிக்கரை தோட்டம், முதல் தெரு, கே.கே. நகர், மதுரை, தமிழ்நாடு - 625 020

◼ சென்னை (தமிழ்) மாவட்ட மாநாடு அக்டோபர் 9-11, 1998 என்ற தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

◼ மாவட்ட மாநாடு சம்பந்தமான காரியங்களை ஒவ்வொரு சபையிலுள்ள செயலர் கண்காணிப்பார்.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

உங்கள் பேச்சு மற்றும் போதனா திறமையை எவ்வாறு முன்னேற்றுவிப்பது (பள்ளி துணை நூல் அதிகாரம் 20-38)—ஹிந்தி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்