எல்லாரும் ‘வார்த்தையை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ள’ வேண்டும்!
1 லட்சக்கணக்கான ஆட்கள் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்கிறார்கள். பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளில் மனந்திரும்பி முழுக்காட்டுதல் பெற்ற 3,000 பேரைப் போலவே நித்திய ஜீவனுக்குத் தகுதி பெற அவர்கள் ‘வார்த்தையை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ள’ வேண்டும். (அப். 2:41) இன்று இது என்ன பொறுப்பை நாம் ஏற்கும்படி செய்கிறது?
2 நம்மோடு பைபிள் படிப்பவர்கள், யெகோவாவிடம் பக்தியை வளர்த்துக்கொள்ள நாம் உதவ வேண்டும். (1 தீ. 4:7-10) இதற்கு, 1996 ஜூன் மாத நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில் பாரா 20 இவ்வாறு ஆலோசனை அளிக்கிறது: “படிப்புகள் நடத்தும்போதெல்லாம் யெகோவாவின் பண்புகள் பேரில் போற்றுதலை வளர்ப்பதற்கு சந்தர்ப்பங்களுக்காக எதிர்பார்த்திருங்கள். கடவுள் பேரில் உங்களுக்கு இருக்கும் ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள். யெகோவாவோடு ஓர் அனலான, தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ளும் விதத்தில் சிந்திக்கும்படி மாணாக்கருக்கு உதவிசெய்யுங்கள்.”
3 நாம் எதிர்ப்படும் சவால்: பொய் மதத்தால் செல்வாக்கு செலுத்தப்பட்ட அநேகர், தங்கள் வணக்க முறையில் உண்மையில் எந்தப் பெரிய மாற்றத்தையும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கின்றனர். மேலும் கொஞ்ச நேரத்தையும் முயற்சியையும் அதற்காக செலவழித்தால் போதும் என நினைத்து திருப்தியும்பட்டுக் கொள்கின்றனர். (2 தீ. 3:5) இதனால் நாம் ஒவ்வொருவரும் சவாலை எதிர்ப்படுகிறோம். அது, உண்மை வணக்கத்தில் இருக்க விரும்புகிறவர்கள் கடவுளுடைய வார்த்தையை கேட்பவர்களாக மாத்திரம் இருந்தால் போதாது என்பதை நம்மோடு பைபிள் படிப்பவர்கள் புரிந்துகொள்ள உதவ வேண்டும் என்பதே. தாங்கள் படிப்பதை வாழ்க்கையில் கடைப்பிடிக்க அவர்கள் முயலவேண்டும். (யாக். 1:22-25) அவர்களுடைய நடத்தை யெகோவாவுக்குப் பிரியமில்லாததாக இருந்தால் அதை அவர்கள் உணர்ந்து, ‘முற்றிலுமாக திரும்ப’ வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு கடவுளுக்குப் பிரியமானதைச் செய்ய வேண்டும். (அப். 3:19) அவர்கள் நித்திய ஜீவனைப் பெற ‘கடும் பிரயாசப்பட’ வேண்டும்; சத்தியத்திற்காக உறுதியான நிலைநிற்கை எடுக்க வேண்டும்.—லூக். 13:24, 25, NW.
4 ஒழுக்கத்தோடு சம்பந்தப்பட்டுள்ள பல்வேறு காரியங்களையும் நீங்கள் பைபிள்படிப்பு நடத்துபவரிடம் கலந்தாலோசியுங்கள். அவற்றின் சம்பந்தமாக அவருடைய கருத்தை கேள்வி கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். தன்னுடைய வாழ்க்கையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமென அவர் உணர்ந்தால் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் கொடுங்கள். அவர் சத்தியத்தை அமைப்பிடமிருந்து கற்றுக்கொள்கிறார் என்பதை புரிந்துகொள்ளும்படி செய்யுங்கள்; தவறாமல் கூட்டங்களுக்கு வரும்படி அவரை உற்சாகப்படுத்துங்கள்.—எபி. 10:25.
5 நாம் கற்றுக்கொடுக்கும்போது பைபிளைப் படிப்பவர்களுடைய இருதயத்தில் பதியவைப்பதே நம்முடைய இலக்காக இருக்க முயலுவோமாக. கடவுளுடைய வார்த்தையை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள புதியவர்களை நாம் தூண்டுவிக்கையிலும், அவர்கள் முழுக்காட்டுதல் எடுக்கையிலும் நாம் அடையும் சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை!—1 தெ. 2:13.