அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள்: டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிளோடு நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. ஜனவரி: பாதிவிலைக்கு அல்லது விசேஷ விலைக்கு பட்டியலிடப்பட்ட ஏதேனும் 192-பக்க பழைய பிரசுரங்கள். பிப்ரவரி: குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம். மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. வீட்டு பைபிள் படிப்புகள் நடத்த விசேஷ முயற்சி எடுக்கப்படும்.
◼ நடத்தும் கண்காணியோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ டிசம்பர் 1 அல்லது அதற்குப் பின் சீக்கிரத்தில் சபை கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். பின்பு அடுத்த கணக்கு அறிக்கை வாசிக்கும் போது இதையும் அறிவிப்பு செய்யுங்கள்.
◼ ஜனவரி 1999 முதல் வட்டாரக் கண்காணிகள் “கடவுளோடு நடக்கிறீர்களா?” என்ற தலைப்பில் பொதுப் பேச்சு கொடுப்பார்கள். செவ்வாய் மாலை கொடுக்கப்படும் ஊழியப் பேச்சின் தலைப்பு, “யெகோவாவின் மேசையில் தவறாமல் சாப்பிடுதல்.” வியாழன் (அல்லது வெள்ளி) மாலை “கடவுளுடைய ராஜ்யம்—அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டிருக்கிறீர்களா?” என்ற தலைப்பில் வட்டாரக் கண்காணி பேசுவார்.
◼ 1999-ம் ஆண்டுக்கான வருடாந்தர வசனம் இதுவே: “இதோ! இப்பொழுதே இரட்சிப்பின் நாள்.”—2 கொரிந்தியர் 6:2, NW. புதிய வருடாந்தர வசனத்தை சபைகள் சீக்கிரத்தில் எழுத ஏற்பாடு செய்வது நல்லது; இது, ஜனவரி 1, 1999-ல் அல்லது வெகு சீக்கிரத்தில் சபைகளில் மாட்டி வைக்க வசதியாய் இருக்கும்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
சுவனத்திற்கு செல்லும் பாதையை கண்டடைவது எப்படி (முஸ்ஸிம்களுக்கு)—அஸ்ஸாமீஸ், ஆங்கிலம், ஒரியா, கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, நேப்பாளி, மராத்தி, மலையாளம், வங்காளி, ஹிந்தி
◼ கிடைக்கக்கூடிய புதிய காம்பேக்ட் டிஸ்க்:
சிடி-ராம் உவாட்ச்டவர் லைப்ரரி—1997
பயனியர்களும் பிரஸ்தாபிகளும் சிடி-ராம் ஒன்றை 400.00 ரூபாய்க்குப் பெற்றுக்கொள்ளலாம். மேற்குறிப்பிடப்பட்ட சிடி-ராம் ஆர்டர் செய்வதன் அடிப்படையில் அனுப்பப்படும்; இதை சபை அங்கத்தினர்கள் மட்டுமே பெறலாம்.
உவாட்ச்டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ் 1997—ஆங்கிலம் (பயனியர்களுக்கு 8.00 ரூபாய், சபை/பொது மக்களுக்கு: 12.00 ரூபாய்)