டிசம்பர் ஊழியக் கூட்டங்கள்
டிசம்பர் 7-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
15 நிமி: “மீண்டும் மீண்டும் சந்தியுங்கள்.” கேள்விகளும் பதில்களும். எசேக்கியேல் 3:17-19-ன் பேரில் சுருக்கமாக குறிப்பு சொல்லுங்கள்; எச்சரிப்பின் செய்தியை தொடர்ந்து அறிவிக்க வேண்டிய நம் பொறுப்பை வலியுறுத்துங்கள்.
20 நிமி: “புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை அளித்தல்.” இந்தக் கட்டுரையை, இரண்டோ மூன்றோ திறம்பட்ட பிரஸ்தாபிகளோடு ஒரு சகோதரர் கலந்தாலோசிக்கிறார். ‘வேதவாக்கியங்களெல்லாம்’ (ஆங்கிலம்) புத்தகத்தில், 327-31 வரையுள்ள பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஒருசில பொருத்தமான குறிப்புகளையும் இதில் சேர்த்துக்கொள்ளுங்கள். டிசம்பர் மாதத்திற்கான இந்த அளிப்பை எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்டுங்கள்.
பாட்டு 176, முடிவு ஜெபம்.
டிசம்பர் 14-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. உலகப்பிரகாரமான பண்டிகை தினங்களில் சொல்லப்படும் வாழ்த்துக்களுக்கு எப்படி சாதுரியமாக பதிலளிக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளைக் கொடுங்கள். மிகப் பெரிய மனிதர் அல்லது பெரிய போதகர் புத்தகங்களை கையிருப்பில் வைத்திருக்கும் சபைகள், அவற்றை கிறிஸ்மஸ் விடுமுறை நாட்களில் ஊழியத்தில் எப்படி திறம்பட்ட விதத்தில் அளிப்பது என்பதைக் குறிப்பிடுங்கள். டிசம்பர் 25 மற்றும் ஜனவரி 1 ஆகிய தினங்களுக்கான விசேஷ வெளி ஊழிய ஏற்பாடுகளைப் பற்றி குறிப்பிடுங்கள்.
15 நிமி: “முன்நின்று வழிநடத்தும் கண்காணிகள்—காவற்கோபுர படிப்பு நடத்துபவர்.” காவற்கோபுர படிப்பு நடத்துனரின் பேச்சு. தங்களுடைய பொறுப்புகளைப் பற்றியும், படிப்பு உற்சாகமூட்டுவதாகவும், கருத்துக்கள் நிறைந்ததாகவும், ஆவிக்குரிய விதத்தில் தூண்டுதலளிப்பதாகவும் இருக்க சபையார் எப்படி உதவலாம் என்பதைப் பற்றியும் விளக்குகிறார்.—நம் ஊழியம், பக்கம் 67-ஐக் காண்க.
20 நிமி: “நாம் வித்தியாசமானவர்கள் என்பதை அவர்களே புரிந்துகொள்ளட்டும்.” கேள்விகளும் பதில்களும். நம்மை தனிப்படுத்திக் காட்டும் ஒவ்வொரு அம்சங்களையும் சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள். இந்தக் குறிப்புகளை உபயோகித்து எப்படி அக்கறை காட்டும் ஆட்களை அமைப்பினிடம் வழிநடத்தலாம் என்பதைக் குறிப்பிட்டு, சத்தியத்திற்கிசைய வாழ்பவர்களில் எப்படி கிறிஸ்தவ குணங்களை அது பிறப்பிக்கிறது என்பதைக் காட்டுங்கள்.
பாட்டு 146, முடிவு ஜெபம்.
டிசம்பர் 21-ல் துவங்கும் வாரம்
8 நிமி: சபை அறிவிப்புகள். புதிய ஆண்டின் துவக்கம்முதல் உங்கள் சபைக் கூட்ட நேரங்களில் ஏதேனும் மாற்றங்கள் செய்திருந்தால் அதைக் குறிப்பிடுங்கள்; அந்த நேரத்தில் தவறாமல் சபைக் கூட்டங்களுக்கு வரும்படி எல்லாரையும் அன்போடு உற்சாகப்படுத்துங்கள். இப்படிப்பட்ட மாற்றங்களை பிரஸ்தாபிகள் தங்களோடு பைபிள் படிப்பவர்களுக்கும் ஆர்வம் காட்டுபவர்களுக்கும் தெரிவிக்கும்படி நினைப்பூட்டுங்கள். பிரஸ்தாபிகள் அனைவரும் தங்கள் நம் ராஜ்ய ஊழியத்தின் சொந்தப் பிரதியை முக்கியமாக உட்சேர்க்கையை பத்திரப்படுத்தி வைக்குமாறு உற்சாகப்படுத்துங்கள். காரணம், எப்பொழுதாவது அவற்றிலிருந்து குறிப்புகளை மறுபார்வை செய்ய வேண்டி வரலாம். அடுத்த வார ஊழியக் கூட்டத்திற்கு வருகையில் மே 1998, நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையைக் கொண்டு வரும்படி எல்லாருக்கும் நினைப்பூட்டுங்கள்.
12 நிமி: சபைத் தேவைகள்.
25 நிமி: “உங்கள் வாழ்க்கை யெகோவாவுடைய சேவையை மையமாக கொண்டிருப்பதாக.” கேள்விகளும் பதில்களும். ஒவ்வொரு வாரமும் தவறாமல் வெளி ஊழியத்தில் கலந்துகொள்வதற்கு திட்டவட்டமான அட்டவணை இருப்பதால் வெற்றி காணும் மணமாகாத ஒருவரையும் குடும்பத் தலைவர் ஒருவரையும் பேட்டி காணுங்கள். ஆவிக்குரிய காரியங்களுக்கு முதலிடம் வைப்பதற்கு எப்படி தனிப்பட்ட விதத்தில் காரியங்களை திட்டமிட்டு செய்கிறார்கள் என்பதை கேளுங்கள்.
பாட்டு 119, முடிவு ஜெபம்.
டிசம்பர் 28-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். டிசம்பர் மாத வெளி ஊழிய அறிக்கை போடுவதை நினைப்பூட்டுங்கள். ஜனவரி மாத பிரசுர அளிப்புக்கான கையிருப்பிலிருக்கும் பழைய புத்தகங்களைக் காட்டுங்கள்; இந்த வார இறுதியில் ஊழியத்தில் அளிக்க அவற்றில் சிலவற்றை வாங்கிச் செல்லுமாறு பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
10 நிமி: “1999-ம் ஆண்டுக்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் நிகழ்ச்சிநிரலிலிருந்து பயனடையுங்கள்.” தேவராஜ்ய ஊழியப் பள்ளி கண்காணியின் பேச்சு. ஒவ்வொரு வாரமும் “கூடுதலான பைபிள் வாசிப்பு அட்டவணை”யைத் தவறாமல் பின்பற்றி வாசித்ததால் அடைந்த பலன்களை சில பிரஸ்தாபிகள் சொல்லும்படி கேளுங்கள். எல்லாரும் கடவுளுடைய வார்த்தையை தினந்தோறும் வாசிக்கும்படி உற்சாகப்படுத்துங்கள்.
25 நிமி: “தேவை—அதிக பைபிள் படிப்புகள்.” மே 1998, நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையை ஊழியக் கண்காணி மறுபார்வை செய்கிறார். மே 1998 முதற்கொண்டு பைபிள் படிப்பு நடத்துவதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தை அலசியாராயுங்கள். ஒரு பைபிள் படிப்புகூட இல்லாதவர்கள் இந்தப் பகுதியை அவ்வப்போது ஜெப சிந்தையோடு வாசித்து அதன்படி செயல்பட உற்சாகப்படுத்துங்கள். ஒரு பைபிள் படிப்பு நடத்துபவர்களும்கூட அநேக பைபிள் படிப்புகளை நடத்தும்படி சபையாருக்கு தூண்டுதல் அளியுங்கள்.
பாட்டு 195, முடிவு ஜெபம்.