செப்டம்பர் ஊழியக் கூட்டங்கள்
குறிப்பு: இனி வரும் மாதங்களில் ஒவ்வொரு வாரத்திற்கும் உண்டான ஊழியக் கூட்ட அட்டவணை நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்படும். “கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை” மாவட்ட மாநாட்டிற்கு செல்வதற்கும், அதன்பின், அடுத்து வரும் வாரத்தில் நிகழ்ச்சிநிரலின் சிறப்புக் குறிப்புகளை 30 நிமிடம் மறுபார்வை செய்வதற்கும் ஏற்ப தேவையான மாற்றங்களை சபைகள் செய்துகொள்ளலாம். மாநாட்டின் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிநிரலின் முக்கிய குறிப்புகளை மறுபார்வை செய்ய தகுதிவாய்ந்த மூன்று சகோதரர்களை முன்கூட்டியே நியமிக்கவும். இந்த மறுபார்வையை நன்றாக தயாரித்து கொடுத்தால், முக்கிய குறிப்புகளை சபையார் நினைவில் வைத்து, தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், வெளி ஊழியத்திலும் பொருத்துவார்கள். சபையார் சொல்லும் குறிப்புகளும் அனுபவங்களும் சுருக்கமாகவும் நேரடியாகவும் இருக்கவேண்டும்.
செப்டம்பர் 6-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
17 நிமி: “இலட்சியத்தோடு செயல்படுகிறீர்களா?” ஒரு நிமிடத்திற்குள் அறிமுகக் குறிப்புகளைச் சொல்லிவிட்டு, கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசிக்கவும். நம் ஊழியம் புத்தகம், பக்கங்கள் 88-9-ல் உள்ள குறிப்புகளை சேர்க்கவும். ஊழியத்தை இடைவிடாமலும், முழுமையாகவும் செய்ய எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
18 நிமி: “பெற்றோரே பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரி.” மூப்பர் சுருக்கமான முன்னுரையை கொடுப்பார். அதன்பிறகு பிள்ளைகளை உடைய இரு சகோதரர்களுடன் கட்டுரையை கலந்தாலோசிப்பார். அந்த இரு சகோதரர்களும் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும்போது, டிவி-யை பார்க்கும்போது, சாட்சிகள் அல்லாத உறவினர்களிடம், மற்றவர்களிடம் பழகும்போது கெட்ட குணங்களை கற்றுக்கொள்வதாக வருந்துகிறார்கள். அவமரியாதையான பண்புகள், உலகப்பிரகாரமான பேச்சு, தலைவாரும்விதம், கெட்ட பொழுதுபோக்கு ஆகியவற்றை பற்றி கலந்தாலோசிக்கிறார்கள். பெற்றோர்கள் நல்ல முன்மாதிரியாக திகழவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள். பிறகு, குடும்ப படிப்பில், சபை கூட்டங்களில், வெளி ஊழியத்தில் பிள்ளைகள் இன்னும் ஆர்வத்தோடு கலந்துகொள்ள என்னென்ன வழிகள் உள்ளன என்பதை கலந்தாலோசிப்பார்கள்.—ஜூலை 1, 1999, காவற்கோபுரம், பக்கங்கள் 8-22, செப்டம்பர் 22, 1991, விழித்தெழு!-ல் பக்கங்கள் 8-9-ஐக் காண்க.
பாட்டு 101, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 13-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
15 நிமி: கடந்த வருடம் எந்தளவுக்கு செய்தோம்? ஊழியக் கண்காணியின் பேச்சு. 1999 ஊழிய ஆண்டிற்குரிய, சபையின் ஊழிய அறிக்கையிலிருந்து சிறப்பான அம்சங்களை எடுத்துரைக்கிறார். எந்தெந்த அம்சங்களை சிறப்பாக செய்திருக்கிறார்களோ, அவற்றிற்காக பாராட்டுகிறார். இன்னும் முன்னேற்றம் செய்ய வேண்டிய அம்சங்களையும் குறிப்பிடலாம். கூட்டங்களுக்கு வருவதிலும், பைபிள் படிப்புகளை நடத்துவதிலும் சபையார் எந்தளவுக்கு செய்திருக்கிறார்கள் என்பதை எடுத்துரைக்கவும். அடுத்த ஊழிய ஆண்டிற்குரிய நடைமுறை இலட்சியங்களை குறிப்பிடுங்கள்.
20 நிமி: “இந்துக்களை சந்திக்கையில் என்ன சொல்வீர்கள்?” கேள்வி-பதில். ஒருமித்த கருத்துடைய விஷயங்களை பேசி, எந்தெந்த விஷயங்களில் நாம் இந்துக்களோடு ஒத்துப்போகிறோம் என்பதை எடுத்துரைக்கும்போது ஏற்படும் அனுகூலத்தை வலியுறுத்தவும். இந்துக்களிடம் எப்படி பேசலாம் என்று கட்டுரையில் எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை எந்த மதத்தினருக்கும் பொருந்தும் வகையில் அமைத்துக்கொள்ளலாம் என்பதை காட்டவும். நன்றாக தயாரித்து, ஒரு இந்து நபருக்கு சாட்சிக்கொடுப்பதைப்போல் நடித்துக்காட்டவும். இந்து மதத்தை பற்றி மேலும் அறிந்துகொள்ள பிப்ரவரி, 1998 நம் ராஜ்ய ஊழியத்தில் வந்த உட்சேர்க்கையையும், நியாயங்காட்டி பேசுதல் புத்தகத்தில் பக்கம் 22-யும், மனிதவர்க்கம் கடவுளை தேடுதல் என்ற ஆங்கில புத்தகத்தில் 5-ம் அதிகாரத்தையும் காண்க.
பாட்டு 140, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 20-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: சபை தேவைகள்.
25 நிமி: “1999 ‘கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை’ மாவட்ட மாநாடுகள்.” (1-15 பாராக்கள்) கேள்வி-பதில். 6, 8, 11, 15 பாராக்களை வாசிக்கவும். வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகள் உட்பட, முழு மாநாட்டிலும் கலந்துகொள்ள வேண்டி காரணங்களை வலியுறுத்துங்கள். ஒவ்வொரு நாளும் நம் சாப்பாட்டை நாமே எடுத்துவர வேண்டும் என்று சங்கம் கொடுக்கிற ஆலோசனையை எதற்காக அவசியம் பின்பற்றவேண்டும் என்பதை வலியுறுத்துங்கள்.
பாட்டு 19, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 27-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். செப்டம்பர் மாத ஊழிய அறிக்கையை போடும்படி சபையாருக்கு ஞாபகப்படுத்துங்கள். அக்டோபர் மாதம் பத்திரிகை விநியோகிப்பில் முழுமையாக ஈடுபடும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். பத்திரிகை விநியோகிப்பதில் எப்படி பேசுவது என்ற ஆலோசனைகள் அக்டோபர் 1996 நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 8-ல் உள்ளன. அவற்றை மறுபார்வை செய்யவும். பேசுவதற்கு ஏற்ற குறிப்புகளை புதிய பத்திரிகைகளிலிருந்து எடுத்துரைக்கவும். பத்திரிகளை எப்படி விநியோகிப்பது என்பதை ஓரிரு நடிப்புகள் மூலம் காண்பிக்கவும்.
15 நிமி: கேள்விப் பெட்டி. மூப்பர் கொடுக்கும் பேச்சு.
20 நிமி: “1999 ‘கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை’ மாவட்ட மாநாடுகள்.” (16-23 பாராக்கள்) கேள்வி-பதில். 17-20 பாராக்களை வாசிக்கவும். நம் உடை, சிகை, நடத்தை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தவேண்டியதை வலியுறுத்த மேற்கோள் காட்டியிருக்கும் வசனங்களையும் மற்ற வசனங்களையும் உபயோகிக்கவும்.
பாட்டு 87, முடிவு ஜெபம்.