அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் செப்டம்பர்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! சந்தாக்கள். நவம்பர்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? அல்லது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. டிசம்பர்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. இதனுடன் ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு.
◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் செப்டம்பர் 1 அல்லது அதற்குப் பிறகு கூடுமானவரை சீக்கிரத்திலேயே சபையின் கணக்கைத் தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை முடிந்ததும் அடுத்த முறை சபையில் கணக்கு அறிக்கையை படித்தப்பிறகு, இதையும் சபையாருக்கு அறிவித்துவிடுங்கள்.
◼ சபைநீக்கம் செய்யப்பட்ட அல்லது அமைப்பிலிருந்து விலகிவிட்டவர்கள் யாராவது மறுபடியும் பழைய நிலைமைக்கு வரவிரும்பினால், ஏப்ரல் 15, 1991, ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 21-3-ல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை மூப்பர்கள் கருத்தில்கொண்டு, அவர்களை போய் சந்திக்கவும்.
◼ சபையோடு தொடர்புடைய அனைவரும், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் புதிய சந்தாக்களையும், புதுப்பிக்க வேண்டிய சந்தாக்களையும், தங்களது சொந்த சந்தாக்களையும் சபையின் மூலம் அனுப்ப வேண்டும்.
◼ பிரஸ்தாபிகள் சங்கத்திடம் நேரடியாக கேட்கும் பிரசுரங்கள் அனுப்பப்பட மாட்டாது. சபையின் மாதாந்தர பிரசுர ஆர்டரை சங்கத்திற்கு அனுப்புவதற்கு முன், நடத்தும் கண்காணி, ஒவ்வொரு மாதமும் சபையில் அறிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் அனைவரும் தங்களுக்கு வேண்டிய பிரசுரங்களை, அந்த இலாகாவை கவனிக்கிற சகோதரரிடம் தெரிவிக்க முடியும். விசேஷ ஆர்டர் செய்தால் வரும் பிரசுரங்கள் எவை என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
◼ ஆங்கில காவற்கோபுரம், விழுத்தெழு! வால்யூம்களுக்கு நிரந்தர ஆர்டரை இனிமேல் சங்கம் வைத்துக்கொள்ளாது. வேண்டுமென்றால், சபைகள் தங்களுக்கு தேவையான வால்யூம்களை அடுத்த பிரசுர ஆர்டரில் வாங்கிக்கொள்ளலாம். வால்யூம்கள் விசேஷ ஆர்டருக்குரியவை. வால்யூம்களை வாங்க விரும்புவோர், சபையில் ஆர்டர் செய்யும்போதே முன்னதாக பணத்தை கொடுக்கவேண்டும்.
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
யெகோவாவின் சாட்சிகளும் கல்வியும்—பெங்காலி, ஹிந்தி, மராத்தி
1998-ம் வருட ஆங்கில காவற்கோபுரம், விழித்தெழு! வால்யூம்கள்
◼ மறுபடியும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:
நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல்—தமிழ்