உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/99 பக். 7
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1999
  • இதே தகவல்
  • மருத்துவ அவசரநிலைக்காக இப்போதே தயாராகுங்கள்!
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • விசுவாசத்திற்கு சவாலாயிருக்கும் ஒரு மருத்துவ நிலையை எதிர்பட நீங்கள் தயாராயிருக்கிறீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—1990
  • இரத்தமேற்றுதலிலிருந்து உங்கள் பிள்ளைகளைப்பாதுகாத்தல்
    நம் ராஜ்ய ஊழியம்—1992
  • இரத்தம்​—⁠கடவுள் சொல்வது என்ன?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1999
km 9/99 பக். 7

கேள்விப் பெட்டி

◼ அவசர சிகிச்சைக்கு ஆயத்தமாக இருக்கிறீர்களா?

இந்த நவீன காலத்தில், எதிர்பாராத “துன்பவேளை எப்போது வருமென்று” தெரிவதில்லை. அப்படி திடீரென்று ஏதேனும் நிகழும்போது, அவசரமாக மருத்துவ உதவியை நாடவேண்டியிருக்கும். அப்போது இரத்தம் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்ற பிரச்சினையும் வரலாம். (பிர. 9:11, பொ.மொ.) இதுபோல் அவசரநிலை ஏற்படும்போது ஆயத்தமாக இருக்கவே, யெகோவா தமது அமைப்பின் மூலம் அநேக வழிகளில் உதவியுள்ளார். ஆனால், இதில் நம் பங்கை நாம் செய்ய வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். உங்களுக்கு உதவுவதற்காக கீழே ஒரு செக்-லிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

• தற்போதைய மருத்துவ முன்கோரிக்கை/விடுவிப்பு அட்டையை எப்போதும் கூடவே எடுத்துச்செல்லுங்கள்.

• உங்கள் பிள்ளைகள் தற்போதைய அடையாள அட்டையை எடுத்துச் செல்கிறார்களா என்று கவனியுங்கள்.

• உங்கள் பிள்ளையின் மருத்துவ விஷயத்தில் டாக்டர்களுடனும் ஜட்ஜுகளுடனும் எப்படி பேசவேண்டும் என்பதை பழகிக்கொள்ள, அக்டோபர் 1992 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையை மறுபடியும் படியுங்கள்.

• இரத்த மூலக்கூறுகளைப் பற்றியும், அதன் மாற்று மருந்துகளைப் பற்றியும் வந்துள்ள கட்டுரைகளை மறுபார்வை செய்யுங்கள். (பரிந்துரை செய்யப்பட்டவை: காவற்கோபுரம், அக்டோபர் 1, 1994, பக்கம் 31; ஆங்கில காவற்கோபுரம் ஜூன் 1, 1990, பக்கங்கள் 30-1; மார்ச் 1, 1989, பக்கங்கள் 30-1; விழித்தெழு! டிசம்பர் 8, 1994, பக்கங்கள் 23-7; ஆகஸ்டு 8, 1993, பக்கங்கள் 22-5; நவம்பர் 22, 1991, பக்கம் 10; நம் ராஜ்ய ஊழியம், அக்டோபர் 1992, டிசம்பர் 1990 உட்சேர்க்கைகள். இவற்றை ஃபைல் செய்து அல்லது சேகரித்து தயாராக வைத்திருங்கள்.

◼ உடலுக்கு வெளியே இரத்த ஓட்டத்தை அனுமதிக்கும் இயந்திரத்தை பயன்படுத்துவதைப் பற்றி அல்லது இரத்த கூறுகள் உள்ள மருந்துகளை உபயோகிப்பதை பற்றி மனசாட்சியின்படி தீர்மானம் எடுங்கள்.

◼ மருத்துவமனைக்கு போகும் முன், முடிந்தால் மூப்பர்களுக்கு தெரிவியுங்கள். தேவையானால் அவர்கள் மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவுக்கு (HLC) தெரிவிப்பார்கள். குழந்தைகளின் மருத்துவ விஷயத்தில், HLC-⁠க்கு விரைவிலேயே தெரிவிக்கும்படி மூப்பர்களிடம் சொல்லுங்கள்.

இரத்தம் வேண்டாம் என்பதை திட்டவட்டமாக சொல்லிவிடுங்கள்: சகோதர சகோதரிகளில் சிலர் கடைசி நிமிடத்தில் போய் மருத்துவரிடம் இரத்தம் வேண்டாம் என்று சொல்வதாக அறிக்கைகள் காட்டுகின்றன. இப்படி செய்வது மருத்துவரை இக்கட்டில் மாட்டிவிடுவதோடு, கட்டாயமாக இரத்தம் ஏற்றிவிடும் அபாயமும் உள்ளது. உங்கள் நம்பிக்கைகளைப் பற்றி மருத்துவர்கள் அறிந்திருப்பது அவசியம். அதோடு எப்படி மருத்துவம் செய்யப்படவேண்டும் என்று உங்கள் விருப்பத்தை தெளிவாக குறிப்பிடும் பத்திரங்களில் கையெழுத்திட்டு கொடுத்தால் உடனடியாக மருத்துவம் பார்க்க மருத்துவர்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் இரத்தம் இல்லாத மாற்று மருந்துகளை கொடுக்க கூடுதல் வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கும்.

அவசர சிகிச்சை அளிக்கவேண்டிய நிர்பந்தம் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். அதுவும் நீங்கள் எதிர்பார்க்காத சமயத்தில் வரும். எனவே, உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இரத்தம் ஏற்றாமல் இருக்க இப்போதே நடவடிக்கைகளை எடுங்கள்.—நீதி. 16:20, 22:3.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்