2000 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை
அறிவுரைகள்
2000-ல் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடத்துகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பின்பற்றப்படும்.
பாடபுத்தகங்கள்: பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) [bi12], தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு பைபிள், காவற்கோபுரம் [w-TL], கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருட்கள் [td-TL], நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு [kl-TL] ஆகியவை நியமிக்கப்படும் பேச்சுக்களுக்கு அடிப்படையாக இருக்கும்.
பாட்டு, ஜெபம் மற்றும் வரவேற்பு உரையுடன் பள்ளி சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்படும். பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும் எல்லா பகுதிகளையும் பற்றி முன்னதாகவே சொல்ல வேண்டியதில்லை. பள்ளியை நடத்துபவர் ஒவ்வொரு பேச்சையும் அறிமுகப்படுத்தும்போது கேட்கப்போகும் பேச்சின் பொருளை மட்டும் சொல்லுவார். பள்ளி பின்வருமாறு நடத்தப்பட வேண்டும்:
பேச்சு நியமிப்பு எண் 1: 15 நிமிடங்கள். இது மூப்பர் அல்லது உதவி ஊழியர் ஒருவரால் கையாளப்பட வேண்டும்; காவற்கோபுரம் அல்லது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தை அடிப்படையாக கொண்டிருக்கும். காவற்கோபுரம் பத்திரிகையை அடிப்படையாக உபயோகிக்கையில் கேள்வி மறுபார்வையின்றி 15 நிமிட போதனா பேச்சாக அளிக்கப்பட வேண்டும். “அறிவு” புத்தகத்தை அடிப்படையாக உபயோகிக்கையில் 10 முதல் 12 நிமிட பேச்சாக கொடுக்கப்பட வேண்டும்; அதைத் தொடர்ந்து அந்தப் பிரசுரத்திலுள்ள அச்சிடப்பட்ட கேள்விகளைப் பயன்படுத்தி, 3 முதல் 5 நிமிடத்திற்கு மறுபார்வை இருக்கும். இதன் குறிக்கோளானது நியமிக்கப்பட்ட பகுதியைச் சிந்திப்பதாக மட்டுமே இருக்கக்கூடாது, ஆனால் சபைக்கு அதிக பயனுள்ளதாக இருப்பதை சிறப்பித்துக் காண்பித்து, சிந்திக்கப்படும் விஷயங்கள் எவ்வளவு நடைமுறையானது என்பதன் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதாக இருக்க வேண்டும். அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்தப் பேச்சு கொடுக்க நியமிக்கப்பட்டிருக்கும் சகோதரர்கள், கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்க கவனமாயிருக்க வேண்டும். தேவைப்பட்டால், அல்லது பேச்சாளரால் கேட்டுக்கொள்ளப்பட்டால், தனிப்பட்ட ஆலோசனை கொடுக்கப்படலாம்.
பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள்: 6 நிமிடங்கள். இது, மூப்பரால் அல்லது உதவி ஊழியரால் கையாளப்பட வேண்டும்; அவர் விஷயத்தை சபையின் தேவைகளுக்கேற்ப பலன்தரத்தக்க முறையில் பொருத்திப் பயன்படுத்த வேண்டும். தலைப்பு தேவையில்லை. நியமிக்கப்பட்ட வாசிப்புப் பகுதியின் சுருக்கமாக மட்டுமே இது இருக்கக்கூடாது. 30 முதல் 60 விநாடிகளுக்கு, நியமிக்கப்பட்ட அதிகாரங்களின்பேரில் மொத்த மறுபார்வையையும் உட்படுத்திக்கொள்ளலாம். என்றாலும், முக்கிய குறிக்கோளானது, அந்தத் தகவல் ஏன் மற்றும் எவ்வாறு நமக்குப் பயனுள்ளது என்பதை சபையார் மதித்துணர உதவி செய்வதேயாகும். பின்பு மாணாக்கர்கள் வெவ்வேறு வகுப்பறைகளுக்குச் செல்லும்படி பள்ளி கண்காணி சொல்வார்.
பேச்சு நியமிப்பு எண் 2: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரரால் கொடுக்கப்படவேண்டிய நியமிக்கப்பட்ட பகுதியின் பைபிள் வாசிப்பாகும். மன்றத்திலுள்ள பள்ளிக்கும் மற்ற வகுப்பறைகளுக்கும் இது பொருந்தும். மாணாக்கர் முன்னுரையிலும் முடிவுரையிலும் சுருக்கமான விளக்கக் குறிப்பைக் கொடுக்க வசதியாக வாசிப்பு நியமிப்புகள் பொதுவாய் ஓரளவு சிறியவையாக இருக்கின்றன. சரித்திரப் பின்னணி, தீர்க்கதரிசன அல்லது கோட்பாட்டுக்குரிய முக்கியத்துவம், நியமங்களின் பொருத்தம் ஆகியவை சேர்த்துக்கொள்ளப்படலாம். கொடுக்கப்பட்ட எல்லா வசனங்களும் இடைவிளக்கமின்றி வாசிக்கப்பட வேண்டும். ஆனால், வாசிக்கப்படவேண்டிய வசனங்கள் தொடர்ச்சியாக இல்லாத சந்தர்ப்பத்தில் வாசிப்பு தொடரவிருக்கும் வசன எண்ணை மாணாக்கர் குறிப்பிடலாம்.
பேச்சு நியமிப்பு எண் 3: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரிக்கு நியமிக்கப்படும். இந்தப் பேச்சு, கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருட்கள் என்ற சிறுபுத்தகத்தை சார்ந்ததாயிருக்கும். சந்தர்ப்ப சாட்சி, மறுசந்திப்பு, வீட்டு பைபிள் படிப்பு போன்ற அம்சங்களில் பேச்சை அமைக்கலாம். பங்கெடுப்போர் உட்கார்ந்துகொண்டோ நின்றுகொண்டோ இருக்கலாம். மாணாக்கர், நியமிக்கப்பட்ட பொருளை எவ்வாறு படிப்படியாக விவரித்துப் பேசுகிறார் என்றும், வீட்டுக்காரர் வேதவசனங்களை பகுத்தாராய்வதற்கு எவ்வாறு உதவுகிறார் என்றும் பள்ளி கண்காணி முக்கியமாக கவனிப்பார். நியமிக்கப்பட்ட மாணாக்கர், வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். உதவியாளர் ஒருவரை பள்ளி கண்காணி நியமிப்பார், ஆனால் கூடுதலான உதவியாளர் ஒருவரைப் பயன்படுத்தலாம். பேச்சு அமைப்புக்கு அல்ல, ஆனால் பைபிளுக்கே முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பேச்சு நியமிப்பு எண் 4: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரருக்கு அல்லது சகோதரிக்கு நியமிக்கப்படும். பெரும்பாலும் இந்தப் பேச்சு, கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருட்கள் என்ற சிறுபுத்தகத்தை சார்ந்திருக்கும். பேச்சு, காவற்கோபுரம் பத்திரிகையை சார்ந்ததாக இருக்குமேயானால், அட்டவணையில் நியமிக்கப்பட்டுள்ள தலைப்பை மாணாக்கர் படிப்படியாக விவரித்துப் பேச வேண்டும். அதிலுள்ள வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்போதுதான் பைபிள் கதாபாத்திரத்தை நன்கு புரிந்துகொள்ள முடியும்; ஒருவருடைய மாதிரியிலிருந்தும், ஆளுமையிலிருந்தும் குணங்களிலிருந்தும் மனப்பான்மையிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ளும் பாடத்தை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். விசுவாசம், தைரியம், தாழ்மை, சுயநலமின்மை போன்ற நல்ல பண்புகளை வெளிப்படுத்தும் செயல்கள், நாம் அவர்களை முன்னுதாரணங்களாக எடுத்துக்கொள்ளச் செய்கின்றன; அதே சமயத்தில் விசுவாசமற்ற செயல்களும் விரும்பத்தகாத குணங்களும், தவறான பாதையில் விலகிப் போய்விடாதபடி மெய்க் கிறிஸ்தவர்களுக்கு ஓர் எச்சரிப்பாக இருக்கின்றன. இந்தப் பேச்சு கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருட்கள் என்ற சிறுபுத்தகத்தைச் சார்ந்ததாக இருக்கையில், அட்டவணையில் நியமிக்கப்பட்ட தலைப்பை பயன்படுத்த வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள வேதவசனங்களை நடைமுறையில் பொருத்த மாணாக்கர் முயல வேண்டும். இந்தப் பேச்சு ஒரு சகோதரருக்கோ அல்லது ஒரு சகோதரிக்கோ நியமிக்கப்படலாம். ஒரு சகோதரருக்கு நியமிக்கப்படுகையில், ஒரு பேச்சாகவே எப்பொழுதும் இருக்க வேண்டும். ஒரு சகோதரிக்கு நியமிக்கப்படுகையில், பேச்சு எண் 3-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்தப் பேச்சைக் கொடுக்கவேண்டும். கூடுதலாக, பேச்சு எண் 4-ன் பொருளுக்கு முன் # என்ற குறியீடு கொடுக்கப்பட்டிருந்தால், அதை ஒரு சகோதரருக்குக் கொடுக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.
*கூடுதலான பைபிள் வாசிப்பு அட்டவணை: ஒவ்வொரு வாரத்திற்கான பாட்டு எண்ணை அடுத்து அடைப்புக் குறிகளுக்குள் இது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையைப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு வாரத்திற்கு சுமார் 10 பக்கங்களை வாசித்து, முழு பைபிளையும் மூன்று வருடங்களில் வாசித்துவிடலாம். பள்ளி நிகழ்ச்சியின் எந்த பாகமோ எழுத்துமுறை மறுபார்வையோ கூடுதலான வாசிப்பு அட்டவணையின் அடிப்படையில் இல்லை.
குறிப்பு: அறிவுரை, நேரம், எழுத்துமுறை மறுபார்வைகள், நியமிப்புகளுக்கு தயாரித்தல் ஆகியவை சம்பந்தமாக கூடுதலான தகவலுக்கும் ஆலோசனைக்கும் தயவுசெய்து அக்டோபர் 1996 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 3-ஐக் காண்க.
அட்டவணை
ஜன. 3 பைபிள் வாசிப்பு: உபாகமம் 4-6
பாட்டு எண் 9 [*எரேமியா 49-52]
எண் 1: யெகோவா தரும் ஆசீர்வாதங்களை மதியுங்கள் (w-TL98 1/1 பக். 22-4)
எண் 3: td-TL 1அ முன்னோரை வழிபடுவது ஏன் கடவுளுக்குப் பிடிக்காது
எண் 4: மோசேயும் ஆரோனும்—பொருள்: #இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமையை யெகோவா தருகிறார் (w-TL96 1/15 பக். 24-5)
ஜன. 10 பைபிள் வாசிப்பு: உபாகமம் 7-10
பாட்டு எண் 49 [*புலம்பல் 1-5]
எண் 1: உண்மை கடவுளை உயர்த்துங்கள் (w-TL98 1/1 பக். 30-1)
எண் 3: td-TL 1ஆ மனிதருக்கு மரியாதை செலுத்தலாம், ஆனால் கடவுளையே வணங்க வேண்டும்
எண் 4: உங்கள் பிள்ளையின் மனதில் சத்தியத்தைப் பதியவையுங்கள் (w-TL96 5/15 பக். 8-9)
ஜன. 17 பைபிள் வாசிப்பு: உபாகமம் 11-14
பாட்டு எண் 132 [*எசேக்கியேல் 1-9]
எண் 1: நம் அன்புக்குரியோருக்காக ஏன் முன்னேற்பாடு செய்யவேண்டும் (w-TL98 1/15 பக். 19-22)
எண் 3: td-TL 2அ அர்மகெதோன்—பொல்லாங்கை முடிவுகட்டும் போர்
எண் 4: யோனா—பொருள்: #யெகோவாவின் இரக்கம் மகா பெரியது (w-TL96 5/15 பக். 24-8)
ஜன. 24 பைபிள் வாசிப்பு: உபாகமம் 15-19
பாட்டு எண் 162 [*எசேக்கியேல் 10-16]
எண் 1: சத்தியம் மாற்றவும் ஒன்றுசேர்க்கவும் வல்லமையுள்ளது (w-TL98 1/15 பக். 29-31)
எண் 3: td-TL 2ஆ அர்மகெதோன் ஏன் கடவுளின் அன்பான செயல்
எண் 4: #உண்மையான ஒத்துழைப்பு மிகச் சிறந்த விளைவுகளை உண்டுபண்ணுகிறது (w-TL96 6/15 பக். 28-30)
ஜன. 31 பைபிள் வாசிப்பு: உபாகமம் 20-23
பாட்டு எண் 13 [*எசேக்கியேல் 17-21]
எண் 1: புகழ்ச்சி மற்றும் முகஸ்துதி பற்றிய வேதப்பூர்வமான கருத்து (w-TL98 2/1 பக். 29-31)
எண் 3: td-TL 3அ முழுக்காட்டுதல்—கிறிஸ்தவனாவதற்கு அவசியம்
எண் 4: எப்பாப்பிரோதீத்து—பொருள்: #அஞ்சாதீர்கள்; கடவுளுடைய ஊழியர்களுக்கு அன்பு காட்டுங்கள் (w-TL96 8/15 பக். 27-30)
பிப். 7 பைபிள் வாசிப்பு: உபாகமம் 24-27
பாட்டு எண் 222 [*எசேக்கியேல் 22-27]
எண் 1: நம்பிக்கைவாதத்திற்கு வலுவான அடிப்படை (w-TL98 2/1 பக். 4-6)
எண் 3: td-TL 3ஆ முழுக்காட்டுதல் பாவங்களை நீக்கிவிடுவதில்லை
எண் 4: பேதுரு—பொருள்: #தைரியமாய் பிரசங்கித்ததன் பலன்கள் (w-TL96 9/15 பக். 8-9)
பிப். 14 பைபிள் வாசிப்பு: உபாகமம் 28-30
பாட்டு எண் 180 [*எசேக்கியேல் 28-33]
எண் 1: நன்றியுணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள் (w-TL98 2/15 பக். 4-7)
எண் 3: td-TL 4அ பைபிள் தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டது
எண் 4: லீதியாள்—பொருள்: உபசரிக்கும் பண்பால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் (w-TL96 9/15 பக். 26-8)
பிப். 21 பைபிள் வாசிப்பு: உபாகமம் 31-34
பாட்டு எண் 46 [*எசேக்கியேல் 34-39]
எண் 1: இவை கடைசி நாட்கள்! (kl-TL அதி. 11)
எண் 3: td-TL 4ஆ பைபிள்—நம் நாளுக்கு நடைமுறையான வழிகாட்டி
எண் 4: அப்பொல்லோ—பொருள்: #ஆன்மீக நபராக இருங்கள் (w-TL96 10/1 பக். 20-3)
பிப். 28 பைபிள் வாசிப்பு: யோசுவா 1-5
பாட்டு எண் 40 [*எசேக்கியேல் 40-45]
எண் 1: பொல்லாத ஆவி சேனைகளை எதிர்த்து நில்லுங்கள் (kl-TL அதி. 12)
எண் 3: td-TL 4இ பைபிள்—எல்லா தேசத்தாருக்கும் இனத்தாருக்கும் எழுதப்பட்டது
எண் 4: தானியேல்—பொருள்: #கடவுளை இடைவிடாமல் சேவியுங்கள் (w-TL96 11/15 பக். 8-9)
மார்ச் 6 பைபிள் வாசிப்பு: யோசுவா 6-9
பாட்டு எண் 164 [*எசேக்கியேல் 46-தானியேல் 2]
எண் 1: பெற்றோரே—உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்திடுங்கள்! (w-TL98 2/15 பக். 8-11)
எண் 3: td-TL 5அ இரத்தம் ஏற்றிக்கொள்ளுதல் அதன் புனிதத் தன்மையை சீர்குலைக்கின்றது
எண் 4: ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள்—பொருள்: #உபசரிப்பு குணத்துடன் ஆர்வமாக பிரசங்கியுங்கள் (w-TL96 12/15 பக். 22-24)
மார்ச் 13 பைபிள் வாசிப்பு: யோசுவா 10-13
பாட்டு எண் 138 [*தானியேல் 3-7]
எண் 1: கரிஸ்மாவைப் பற்றி பைபிள் சொல்வது (w-TL98 2/15 பக். 23-7)
எண் 3: td-TL 5ஆ உயிரை பாதுகாக்க எதையும் செய்யலாமா?
எண் 4: எலியேசர்—பொருள்: #யெகோவாவில் நம்பிக்கை வைத்து உங்களால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்யுங்கள் (w-TL97 1/1 பக். 30-1)
மார்ச் 20 பைபிள் வாசிப்பு: யோசுவா 14-17
பாட்டு எண் 10 [*தானியேல் 8-ஓசியா 2]
எண் 1: “நம்மைப் போல உணர்வுகளுள்ள” மனிதர்கள் (w-TL98 3/1 பக். 26-9)
எண் 3: td-TL 6அ புறஜாதிகளின் காலங்கள் எப்பொழுது முடிவடைகின்றன?
எண் 4: ஏனோக்கு—பொருள்: #குற்றஞ்சாட்டப்படாதவர்களாய் கடவுள் பயத்துடன் இருங்கள் (w-TL97 1/15 பக். 29-31)
மார்ச் 27 பைபிள் வாசிப்பு: யோசுவா 18-20
பாட்டு எண் 105 [*ஓசியா 3-14]
எண் 1: பூமியில் இயேசுவின் கடைசி நாட்களை மனத்திரையில் காணல் (w-TL98 3/15 பக். 3-9)
எண் 3: td-TL 7அ கிறிஸ்தவ ஆலயம் என்பது என்ன?
எண் 4: ஏகூத்—பொருள்: #மனோதிடத்துடன் தைரியமாய் இருங்கள் (w-TL97 3/15 பக். 29-31)
ஏப். 3 பைபிள் வாசிப்பு: யோசுவா 21-24
பாட்டு எண் 144 [*யோவேல் 1-ஆமோஸ் 7]
எண் 1: தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்வது ஏன் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது (kl-TL அதி. 13)
எண் 3: td-TL 7ஆ பேதுரு ‘கன்மலையா’?
எண் 4: அம்ராம், யோகெபேத்—பொருள்: பிள்ளையைப் பயிற்றுவிப்பதன் பலன்கள் (w-TL97 5/1 பக். 30-1)
ஏப். 10 பைபிள் வாசிப்பு: நியாயாதிபதிகள் 1-4
பாட்டு எண் 43 [*ஆமோஸ் 8-மீகா 5]
எண் 1: யாருடைய அதிகாரத்தை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்? (kl-TL அதி. 14)
எண் 2: நியாயாதிபதிகள் 3:1-11
எண் 3: td-TL 8அ படைப்பு பற்றிய பைபிள் பதிவு நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்தோடு ஒத்திருக்கிறது
எண் 4: எப்பாப்பிரா—பொருள்: #உங்கள் சகோதரருக்காக ஜெபம்பண்ணி அவர்களுக்கு ஊழியக்காரராய் இருங்கள் (w-TL97 5/15 பக். 30-1)
ஏப். 17 பைபிள் வாசிப்பு: நியாயாதிபதிகள் 5-7
பாட்டு எண் 193 [*மீகா 6-செப்பனியா 1]
எண் 1: 70 பேருக்கு இயேசு கொடுத்த அறிவுரையிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள் (w-TL98 3/1 பக். 30-1)
எண் 2: நியாயாதிபதிகள் 5:24-31
எண் 3: td-TL 8ஆ படைப்பின் ஒவ்வொரு நாட்களும் 24 மணிநேரம் கொண்ட நாட்களா?
எண் 4: அபிகாயில்—பொருள்: யெகோவாவை கனப்படுத்தும் பண்புகளை காட்டுங்கள் (w-TL97 7/1 பக். 14-5)
ஏப். 24 எழுத்துமுறை மறுபார்வை. உபாகமம் 4-நியாயாதிபதிகள் 7 முழுவதும்
பாட்டு எண் 91 [*செப்பனியா 2-சகரியா 7]
மே 1 பைபிள் வாசிப்பு: நியாயாதிபதிகள் 8-10
பாட்டு எண் 38 [*சகரியா 8-மல்கியா 4]
எண் 1: மற்றவர்களுடைய மதிப்புக்குரிய நிலைக்கு மரியாதை கொடுங்கள் (w-TL98 4/1 பக். 28-31)
எண் 2: நியாயாதிபதிகள் 9:7-21
எண் 3: td-TL 9அ இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா?
எண் 4: தெர்தியு—பொருள்: #முன்னின்று வழிநடத்துபவர்களிடம் உண்மைத்தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள் (w-TL97 7/15 பக். 29-31)
மே 8 பைபிள் வாசிப்பு: நியாயாதிபதிகள் 11-14
பாட்டு எண் 82 [*மத்தேயு 1-8]
எண் 1: பர்னபா, “ஆறுதலின் மகன்” (w-TL98 4/15 பக். 20-3)
எண் 2: நியாயாதிபதிகள் 13:2-10, 24
எண் 3: td-TL 9ஆ கிறிஸ்தவர்கள் சிலுவையை வழிபடலாமா?
எண் 4: குடும்ப நபர்கள்மீது சலிப்புடன் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள் (w-TL97 9/1 பக். 30-1)
மே 15 பைபிள் வாசிப்பு: நியாயாதிபதிகள் 15-18
பாட்டு எண் 26 [*மத்தேயு 9-14]
எண் 1: சேனைகளே தேவைப்படாத பாதுகாப்பான ஓர் உலகம் (w-TL98 4/15 பக். 28-30)
எண் 2: நியாயாதிபதிகள் 17:1-13
எண் 3: td-TL 10அ மரணத்திற்கான காரணம் என்ன?
எண் 4: அரிஸ்தர்க்கு—பொருள்: #கடவுளுடைய அமைப்புக்கு பற்றுமாறாமல் இருங்கள் (w-TL97 9/15 பக். 29-31)
மே 22 பைபிள் வாசிப்பு: நியாயாதிபதிகள் 19-21
பாட்டு எண் 42 [*மத்தேயு 15-21]
எண் 1: கடவுளைக் கனப்படுத்தும் ஒரு குடும்பத்தைக் கட்டுதல் (kl-TL அதி. 15)
எண் 2: நியாயாதிபதிகள் 19:11-21
எண் 3: td-TL 10ஆ இறந்தவர்கள் உங்களுக்கு தீங்கு செய்யமுடியுமா?
எண் 4: எலிசா—பொருள்: #கடவுளின் சேவையில் சுயதியாக மனப்பான்மையை காட்டுங்கள் (w-TL97 11/1 பக். 30-1)
மே 29 பைபிள் வாசிப்பு: ரூத் 1-4
பாட்டு எண் 120 [*மத்தேயு 22-26]
எண் 1: கடவுளிடம் நீங்கள் எவ்வாறு நெருங்கி வரலாம் (kl-TL அதி. 16)
எண் 3: td-TL 10இ மனிதர் இறந்தவர்களுடன் பேசமுடியுமா?
எண் 4: ஒநேசிப்போரு—பொருள்: #உபத்திரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் அளியுங்கள் (w-TL97 11/15 பக். 29-31)
ஜூன் 5 பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 1-3
பாட்டு எண் 191 [*மத்தேயு 27-மாற்கு 4]
எண் 1: கடவுளுடைய மக்களின் மத்தியில் பாதுகாப்பை கண்டடையுங்கள் (kl-TL அதி. 17)
எண் 3: td-TL 11அ பிசாசு நிஜமான ஓர் ஆளா?
எண் 4: மரியாள்—“நல்ல பங்கைத்” தெரிவுசெய்யுங்கள் (w-TL99 9/1 பக். 30-1)
ஜூன் 12 பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 4-7
பாட்டு எண் 85 [*மாற்கு 5-9]
எண் 1: யெகோவா யார்? (w-TL98 5/1 பக். 5-7)
எண் 3: td-TL 11ஆ பிசாசு உலகத்தின் கண்ணுக்குத் தெரியாத அதிபதி
எண் 4: #உலக ஞானம் உங்கள் சிந்தனையை செல்வாக்கு செலுத்த அனுமதியாதீர்கள் (w-TL96 7/15 பக். 26-9)
ஜூன் 19 பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 8-11
பாட்டு எண் 160 [*மாற்கு 10-14]
எண் 1: உத்தமத்தன்மை பலனளிக்கப்பட்டது (w-TL98 5/1 பக். 30-1)
எண் 3: td-TL 11இ கலகம் பண்ணின தூதர்களைப் பற்றி பைபிள் சொல்வது
எண் 4: பெல்ஷாத்சார்—பொருள்: #யெகோவாவை விசனப்படுத்தாதீர்கள் (w-TL98 9/15 பக். 8-9)
ஜூன் 26 பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 12-14
பாட்டு எண் 172 [*மாற்கு 15-லூக்கா 3]
எண் 1: செல்வங்கள் உங்களை சந்தோஷப்படுத்துமா? (w-TL98 5/15 பக். 4-6)
எண் 3: td-TL 12அ பூமி—பரதீஸாக இருக்கும்படி படைக்கப்பட்டது
எண் 4: பிலேமோனும் ஒநேசிமுவும்—பொருள்: #நாம் கிறிஸ்தவ சகோதரத்துவத்தில் ஒன்றுபட்டவர்கள் (w-TL98 1/15 பக். 29-31)
ஜூலை 3 பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 15-17
பாட்டு எண் 8 [*லூக்கா 4-8]
எண் 1: ஐனிக்கேயாளும் லோவிசாளும்—பின்பற்றத்தக்க போதனையாளர்கள் (w-TL98 5/15 பக். 7-9)
எண் 3: td-TL 12ஆ பூமியில் வாழ்க்கைக்கு முடிவில்லை
எண் 4: #நற்செய்தியைப் பிரசங்கித்தே ஆகவேண்டும் (w-TL97 3/1 பக். 30-1)
ஜூலை 10 பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 18-20
பாட்டு எண் 156 [*லூக்கா 9-12]
எண் 1: அறிவுறுத்தி உந்துவிக்கும் கலையினால் இருதயத்தை எட்டுங்கள் (w-TL98 5/15 பக். 21-3)
எண் 3: td-TL 13அ போலி தீர்க்கதரிசிகளை கண்டுபிடித்துவிடுவீர்களா?
எண் 4: தீகிக்கு—பொருள்: #உண்மையுள்ள, நம்பிக்கைக்குப் பாத்திரமான கிறிஸ்தவராய் இருங்கள் (w-TL98 7/15 பக். 7-8)
ஜூலை 17 பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 21-24
பாட்டு எண் 33 [*லூக்கா 13-19]
எண் 1: குடும்பத்தை கவனிப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் (w-TL98 6/1 பக். 20-3)
எண் 3: td-TL 14அ ஆவிக்குரிய சுகப்படுத்துதல் எந்தளவு முக்கியம்?
எண் 4: பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்குங்கள் (w-TL98 11/1 பக். 30-1)
ஜூலை 24 பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 25-27
பாட்டு எண் 60 [*லூக்கா 20-24]
எண் 1: உண்மையான நீதி—எப்போது, எவ்வாறு? (w-TL98 6/15 பக். 26-9)
எண் 3: td-TL 14ஆ கடவுளுடைய ராஜ்யம் நிரந்தர சரீர சுகப்படுத்துதலை கொண்டுவரும்
எண் 4: #மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு மரியாதை காட்ட வேண்டும் (w-TL98 11/15 பக். 8-9)
ஜூலை 31 பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 28-31
பாட்டு எண் 170 [*யோவான் 1-6]
எண் 1: கடவுளை என்றென்றுமாக சேவிப்பதை உங்களுடைய குறிக்கோளாக்குங்கள் (kl-TL அதி. 18)
எண் 3: td-TL 14இ இன்றைய விசுவாச சுகப்படுத்துதலுக்கு கடவுளின் அங்கீகாரத்திற்கான சான்று இல்லை
எண் 4: தீத்து—பொருள்: #“இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ணுங்கள்” (w-TL98 11/15 பக். 29-31)
ஆக. 7 பைபிள் வாசிப்பு: 2 சாமுவேல் 1-4
பாட்டு எண் 22 [*யோவான் 7-11]
எண் 1: தேவனை அறியும் அறிவு பூமியை நிரப்பும்போது (kl-TL அதி. 19)
எண் 3: td-TL 14ஈ அந்நிய பாஷைகளில் பேசுவது கடவுளின் தயவுக்கு நிச்சயமான சான்றா?
எண் 4: யோசேப்பு—பொருள்: ஒருவரையொருவர் தாராளமாய் மன்னித்துக்கொண்டே இருங்கள் (w-TL99 1/1 பக். 30-1)
ஆக. 14 பைபிள் வாசிப்பு: 2 சாமுவேல் 5-8
பாட்டு எண் 174 [*யோவான் 12-18]
எண் 1: “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்” (w-TL98 6/15 பக். 30-1)
எண் 3: td-TL 15அ யார் பரலோகத்திற்கு செல்வார்கள்?
எண் 4: சீலா—பொருள்: #உற்சாகத்தின் ஊற்றாய் இருங்கள் (w-TL99 2/15 பக். 26-9)
ஆக. 21 பைபிள் வாசிப்பு: 2 சாமுவேல் 9-12
பாட்டு எண் 107 [*யோவான் 19-அப்போஸ்தலர் 4]
எண் 1: அன்புள்ள அயலானாக நடந்துகொள்ளுங்கள் (w-TL98 7/1 பக். 30-1)
எண் 3: td-TL 16அ நரகம் நெருப்பில் வதைப்பதற்குரிய இடமல்ல
எண் 4: #மனத்தாழ்மையுடன் இருங்கள்—மதிப்பையும் கௌரவத்தையும் நாடித்தேடாதீர்கள் (w-TL99 3/1 பக். 30-1)
ஆக. 28 பைபிள் வாசிப்பு: எழுத்துமுறை மறுபார்வை. நியாயாதிபதிகள் 8-2 சாமுவேல் 12 முழுவதும்
பாட்டு எண் 177 [*அப்போஸ்தலர் 5-10]
செப். 4 பைபிள் வாசிப்பு: 2 சாமுவேல் 13-15
பாட்டு எண் 183 [*அப்போஸ்தலர் 11-16]
எண் 1: உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொடுங்கள் (w-TL98 7/15 பக். 4-6)
எண் 3: td-TL 16ஆ நெருப்பு நிரந்தர அழிவிற்கான அடையாளம்
எண் 4: யெகோவாவின் மேல் பாரத்தைப் போடுங்கள் (w-TL99 5/1 பக். 30-1)
செப். 11 பைபிள் வாசிப்பு: 2 சாமுவேல் 16-18
பாட்டு எண் 129 [*அப்போஸ்தலர் 17-22]
எண் 1: சவ அடக்க பழக்கவழக்கங்களைப் பற்றிய கிறிஸ்தவ கருத்து (w-TL98 7/15 பக். 20-4)
எண் 3: td-TL 16இ ஐசுவரியவானையும் லாசருவையும் பற்றிய பைபிளின் உவமை நித்திய வாதைக்கான சான்றல்ல
எண் 4: #தன்னிச்சையாக செயல்பட நினைக்காதீர்கள் (w-TL99 6/1 பக். 28-31)
செப். 18 பைபிள் வாசிப்பு: 2 சாமுவேல் 19-21
பாட்டு எண் 19 [*அப்போஸ்தலர் 23-ரோமர் 1]
எண் 1: மனசாட்சியை நம்ப முடியுமா? (w-TL98 9/1 பக். 4-7)
எண் 2: 2 சாமுவேல் 20:1, 2, 14-22
எண் 3: td-TL 17அ பண்டிகை கொண்டாடுவது பற்றிய கிறிஸ்தவ நோக்கு
எண் 4: பவுல்—பொருள்: சத்தியத்தைப் பகைத்தவர்களும் மாறலாம் (w-TL99 6/15 பக். 29-31)
செப். 25 பைபிள் வாசிப்பு: 2 சாமுவேல் 22-24
பாட்டு எண் 98 [*ரோமர் 2-9]
எண் 1: சகாக்களின் சகவாசம் சகாயமளிக்குமா? (w-TL99 8/1 பக். 22-5)
எண் 3: td-TL 18அ வழிபாட்டில் உருவங்களை பயன்படுத்துவது கடவுளுக்கு நிந்தனை
எண் 4: #மெய்யறிவை தேடிக்கொண்டே இருங்கள் (w-TL99 7/1 பக். 30-1)
அக். 2 பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 1-2
பாட்டு எண் 36 [*ரோமர் 10-1 கொரிந்தியர் 3]
எண் 1: கோபத்தால் இடறலடையாதீர்கள் (w-TL99 8/15 பக். 8, 9)
எண் 3: td-TL 18ஆ உருவ வழிபாட்டால் வந்த விளைவு
எண் 4: பிலிப்பு—பொருள்: #‘எல்லாருக்கும்’ பிரசங்கியுங்கள் (w-TL99 7/15 பக். 24-5)
அக். 9 பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 3-6
பாட்டு எண் 106 [*1 கொரிந்தியர் 4-13]
எண் 1: முக்கியமானதற்கே முதலிடம் (w-TL98 9/1 பக். 19-21)
எண் 3: td-TL 18இ யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும்
எண் 4: td-TL 19அ #மற்ற மதங்களுடன் சேருவது கடவுளின் வழியல்ல
அக். 16 பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 7-8
பாட்டு எண் 76 [*1 கொரிந்தியர் 14-2 கொரிந்தியர் 7]
எண் 1: மதிப்புக்குரியோர் முன்பு தைரியமாய் சாட்சி கொடுத்தல் (w-TL98 9/1 பக். 30-1)
எண் 3: td-TL 19ஆ “எம்மதமும் சம்மதம்”—சரிதானா?
எண் 4: td-TL 20அ கிறிஸ்தவர்கள் கடவுளின் பெயரை பயன்படுத்த வேண்டும்
அக். 23 பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 9-11
பாட்டு எண் 97 [*2 கொரிந்தியர் 8-கலாத்தியர் 4]
எண் 1: மணமகள் விலை பற்றிய பைபிள் நோக்குநிலை (w-TL98 9/15 பக். 24-7)
எண் 3: td-TL 20ஆ கடவுள் இருப்பது பற்றிய உண்மை
எண் 4: td-TL 20இ #கடவுளின் குணங்களைக் கண்டுகொள்ளுதல்
அக். 30 பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 12-14
பாட்டு எண் 113 [*கலாத்தியர் 5-பிலிப்பியர் 2]
எண் 1: கடவுள் உங்களுக்கு நிஜமானவரா? (w-TL98 9/15 பக். 21-3)
எண் 3: td-TL 20ஈ எல்லாரும் ஒரே கடவுளை சேவிக்கிறதில்லை
எண் 4: td-TL 21அ யெகோவாவின் சாட்சிகளது மதம் புதிதாய் முளைத்த ஒன்றா?
நவ. 6 பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 15-17
பாட்டு எண் 123 [*பிலிப்பியர் 3-1 தெசலோனிக்கேயர் 5]
எண் 1: தொடர்ந்து ஆவிக்குரிய முன்னேற்றம் செய்யுங்கள்! (w-TL98 10/1 பக். 28-31)
எண் 3: td-TL 22அ இயேசு கிறிஸ்து—கடவுளின் குமாரன், நியமிக்கப்பட்ட அரசர்
எண் 4: td-TL 22ஆ இயேசு கிறிஸ்துவை நம்புவது ஏன் இரட்சிப்புக்கு இன்றியமையாதது
நவ. 13 பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 18-20
பாட்டு எண் 159 [*2 தெசலோனிக்கேயர் 1-2 தீமோத்தேயு 3]
எண் 1: அமைதியாக சச்சரவுகளை தீர்ப்பதெப்படி? (w-TL98 11/1 பக். 4-7)
எண் 2: 1 இராஜாக்கள் 20:1, 13-22
எண் 3: td-TL 22இ கிறிஸ்துவை வெறுமனே விசுவாசித்தால் இரட்சிப்பு கிடைத்துவிடுமா?
எண் 4: td-TL 23அ கடவுளுடைய ராஜ்யத்தால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
நவ. 20 பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 21-22
பாட்டு எண் 179 [*2 தீமோத்தேயு 4-எபிரெயர் 7]
எண் 1: ‘வானத்தின் தானியம்’ நமக்கு பயன் (w-TL99 8/15 பக். 25-8)
எண் 3: td-TL 23ஆ கிறிஸ்துவின் எதிரிகள் செயல்படுகையிலேயே ராஜ்ய ஆட்சி ஆரம்பிக்கிறது
எண் 4: td-TL 23இ கடவுளுடைய ராஜ்யம் மனிதரின் முயற்சிகளினால் உருவாக்கப்பட்டதல்ல
நவ. 27 பைபிள் வாசிப்பு: 2 இராஜாக்கள் 1-3
பாட்டு எண் 148 [*எபிரெயர் 8-யாக்கோபு 2]
எண் 1: திருமண நிச்சயத்தை கிறிஸ்தவர்கள் எவ்வாறு கருதவேண்டும்? (w-TL99 8/15 பக். 30, 31)
எண் 3: td-TL 24அ “உலகத்தின் முடிவு” என்பதன் அர்த்தமென்ன
எண் 4: td-TL 24ஆ #கடைசி நாட்களின் அடையாளங்களைக் குறித்து விழிப்புடன் இருத்தல்
டிச. 4 பைபிள் வாசிப்பு: 2 இராஜாக்கள் 4-6
பாட்டு எண் 109 [*யாக்கோபு 3-2 பேதுரு 3]
எண் 1: பதவியை விலைபேசுவோரே, ஜாக்கிரதை! (w-TL98 11/15 பக். 28)
எண் 3: td-TL 25அ நித்திய ஜீவன் வெறும் ஒரு கனவல்ல
எண் 4: td-TL 25ஆ பரலோகத்திற்கு செல்வது யார்?
டிச. 11 பைபிள் வாசிப்பு: 2 இராஜாக்கள் 7-9
பாட்டு எண் 117 [*1 யோவான் 1-வெளிப்படுத்துதல் 1]
எண் 1: கடன் பணம் கொடுக்கல் வாங்கலில் பின்பற்ற வேண்டிய பைபிள் நியமங்கள் (w-TL98 11/15 பக். 24-7)
எண் 2: 2 இராஜாக்கள் 7:1, 2, 6, 7, 16-20
எண் 3: td-TL 25இ பூமியில் நித்திய ஜீவனைப் பெறுவோருக்கு எண்ணிக்கையில்லை
எண் 4: td-TL 26அ #திருமண பந்தம் கனம்பொருந்தினதாக இருக்கவேண்டும்
டிச. 18 பைபிள் வாசிப்பு: 2 இராஜாக்கள் 10-12
பாட்டு எண் 181 [*வெளிப்படுத்துதல் 2-12]
எண் 1: இயேசுவின் பிறப்பு—உண்மை வரலாறு (w-TL98 12/15 பக். 5-9)
எண் 2: 2 இராஜாக்கள் 11:1-3, 9-16
எண் 3: td-TL 26ஆ தலைமைத்துவம் என்ற நியமத்தைக் கிறிஸ்தவர்கள் மதிக்க வேண்டும்
எண் 4: td-TL 26இ பிள்ளைகளிடமாக கிறிஸ்தவ பெற்றோரின் கடமை
டிச. 25 எழுத்துமுறை மறுபார்வை. 2 சாமுவேல் 13-24; 1 இராஜாக்கள் 1-22-2 இராஜாக்கள் 1-12 முழுவதும்
பாட்டு எண் 217 [*வெளிப்படுத்துதல் 13-22]