தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஜனவரி 3 முதல் ஏப்ரல் 17, 2000, வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: எழுத்துமுறை மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுர மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் சரியா தவறா என்று விடையளியுங்கள்:
1. சிலநேரங்களில் யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற நாம் காத்திருக்க வேண்டும், ஏனெனில் யெகோவா நம் நிலையை அறிந்து நமக்கு ஏற்ற சிறந்த சமயத்தில் ஒவ்வொரு தேவையையும் பூர்த்திசெய்கிறார். (சங். 145:16; யாக். 1:17) [w-TL98 1/1 பக். 23 பாரா 6]
2. பாலியலைப் பற்றி நம் பிள்ளைகளுக்கு போதியளவு போதிப்பது சரியானது மட்டுமல்ல, அன்பானதும்கூட. [w-TL98 2/15 பக். 8]
3. யெகோவாவின் வார்த்தைகளை வெறுமனே வாசிப்பதால் இன்று நாம் ஆவிக்குரிய விதத்தில் போஷிக்கப்படுகிறோம். (உபா. 8:3) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w85 6/15 பக். 17 பாரா. 15, 17-ஐக் காண்க.]
4. கடன்கொடுக்கையில் ஒரு கிறிஸ்தவன் வட்டி வாங்குவது அன்பற்றது என உபாகமம் 23:20-ல் உள்ள நியாயப்பிரமாண சட்டத்தின் நியதி காட்டுகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; it-1, பக். 1212 பாரா 5; it-2, பக். 259 பாரா 11; w86 10/15 பக். 12 பாரா 9-ஐக் காண்க.]
5. யோசுவாவும் காலேபும் நம்பிக்கையான அறிக்கை அளித்ததற்கு, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் தடைகளை மீறி செல்வதற்கு இஸ்ரவேலர்களுக்கு இருந்த திறமையை அவர்கள் முழுமையாக நம்பியதே காரணம். (எண். 13:30) [w-TL98 2/1 பக். 5 பாரா 4]
6. 1 தீமோத்தேயுவில் ‘வரத்தைப்’ பற்றி பவுல் குறிப்பிடுகையில், பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டதையும் அவருக்காக காத்திருக்கும் பரலோக வெகுமதியையும் பற்றி தீமோத்தேயுவுக்கு நினைப்பூட்டினார். (1 தீ. 4:14) [w-TL98 2/15 பக். 25 பாரா 1]
7. விபச்சாரம் ஒருவேளை மன்னிக்கப்பட்டாலும், குற்றமற்ற துணைவர் விவாகரத்து செய்வதற்கு இது நியாயமான வேதப்பூர்வ காரணமாகும். (மத். 5:32) [kl-TL அதி. 13 பாரா 13]
8. மிகவும் மென்மையோடும், அன்போடும், நியாயத்தன்மையோடும் இயேசு எப்போதும் சபையை நடத்திவந்தது போலவே கணவன் தன் மனைவியை நடத்தும்போது கிறிஸ்துவுக்குத் தன்னுடைய கீழ்ப்படிதலை காண்பிக்கிறார். (1 யோ. 2:6; மத். 20:25-28) [kl-TL அதி. 14 பாரா 12]
9. நியாயாதிபதிகள் 6:37-39-ல் விவரிக்கப்பட்டபடி, கிதியோன் அதிக முன்ஜாக்கிரதை உள்ளவரென்றும் சந்தேகப் பேர்வழி என்றும் அவருடைய வேண்டுகோள் காட்டுகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w88 4/1 பக். 30 பாரா 6-ஐக் காண்க.]
10. ‘வழியில் வாழ்த்துவதற்காக யாரையும் கட்டித் தழுவ வேண்டாம்’ என தம்முடைய சீஷர்களுக்கு இயேசு அறிவுரை கொடுக்கையில், பிரசங்க வேலையின் அவசரத்தன்மையையும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புக்கு முழுக் கவனம் செலுத்த வேண்டிய தேவையையும் வலுயுறுத்தினார். (லூக். 10:4, NW) [w-TL98 3/1 பக். 30 பாரா 5]
பின்வரும் கேள்விகளுக்கு விடையளியுங்கள்:
11. யெகோவாவின் வார்த்தை பெற்றோரின் இதயத்தில் இருக்க வேண்டியது ஏன் முக்கியம்? (உபா. 6:5, 6) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL98 6/1 பக். 20 பாரா 4-ஐக் காண்க.]
12. உபாகமம் 11:18, 19-ல் உள்ள நியமத்தை குடும்பத் தலைவர் எவ்வாறு பொருத்தலாம்? [வாராந்தர பைபிள் வாசிப்பு; fy-TL பக். 70 பாரா 14-ஐக் காண்க.]
13. ஓடிவந்த அடிமை ஒநேசிமு, பிலேமோனுக்கு பவுல் ஒரு நிருபம் எழுதுவதற்கு முன்பே அப்போஸ்தலன் பவுலோடு சில காலம் இருந்தார் என்பதற்கு என்ன வேதப்பூர்வ குறிப்பு உள்ளது? [w-TL98 1/15 பக். 30 பாரா 2]
14. அநியாயங்களை பார்க்கும்போதோ அல்லது அவற்றை நாமே அனுபவிக்கும்போதோ, மனச்சோர்வையோ நம்பிக்கையற்ற மனநிலையையோ வளர்க்காமல் இருக்க நாம் என்ன செய்யலாம்? [w-TL98 2/1 பக். 6 பாரா. 2-3]
15. இந்த ஒழுங்குமுறை எப்படி முடிவடையும்? [kl-TL அதி. 11 பாரா 15]
16. அர்மகெதோன் சமயத்தில் நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ, அதற்கு யோசுவா 10:10-14-ல் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் எப்படி இணையாக உள்ளன? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL87 1/1 பக். 23 பாரா 12-பக். 24 பாரா 14-ஐக் காண்க.]
17. மெச்சத்தகுந்த நடத்தைக்காக மனப்பூர்வமாக பாராட்டுவதன் மூன்று நன்மைகளை குறிப்பிடவும். (நீதிமொழிகள் 15:23-ஐ ஒப்பிடுக.) [w-TL98 2/1 பக். 31 பாரா. 5-6]
18. யோசுவா 20:4-க்கு இசைய, அடையாள குறிப்பான அடைக்கலப் பட்டணத்திற்கு ஒருவர் எவ்வாறு ஓடலாம்? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL87 1/1 பக். 24 பாரா 16-ஐக் காண்க.]
19. செசராவின் உயர்ந்த சேனைகள்மீது கீசோன் நதிப் பள்ளத்தாக்கில் நியாயாதிபதி பாராக் வெற்றிவாகை சூடியது நம்முடைய நாளுக்கு ஆழ்ந்த அர்த்தமுடையது என்பதை நியாயாதிபதிகள் 5:31 (NW) எவ்வாறு சுட்டிக்காட்டுகிறது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL87 3/1 பக். 27 பாரா 4-ஐக் காண்க.]
20. நியாயாதிபதிகள் 7:21-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி, “அவரவர் தங்கள் நிலையிலே நின்றார்கள்” என்ற வார்த்தைகளில் பொதிந்துள்ள நியமத்திற்கு நாம் எவ்வாறு மதிப்புக் கொடுக்கலாம்? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w82 6/1 பக். 25 பாரா 17-ஐக் காண்க.]
பின்வரும் வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் சொல் (சொற்கள்) அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
21. யெகோவாவின் ஆசீர்வாதங்களை இன்னும் முழுமையாக அனுபவித்து மகிழ, தொடர்ந்து _________________________. மேலும், யெகோவாவின் ஏவப்பட்ட வார்த்தையின் போதனைகளை _________________________, _________________________ அவரது உதவியை நாடி வேண்டுதல் செய்யுங்கள். (1 தீ. 4:8, 9) [w-TL98 1/1 பக். 24 பாரா 6]
22. முகஸ்துதியை யெகோவா மிகவும் வெறுப்பதற்கான காரணம், அது _________________________ தூண்டப்படுகிறது, அது _________________________, மேலும் _________________________, எல்லாவற்றிற்கும் மேலாக _________________________. [w-TL98 2/1 பக். 30 பாரா. 2-3]
23. ஆவியுலகத் தொடர்பு என்பது நேரடியாகவோ அல்லது ஒரு _________________________ மூலமாகவோ _________________________ அல்லது _________________________ உடன் கொள்ளும் ஈடுபாடாகும். [kl-TL அதி. 12 பாரா 6]
24. மத்தேயு 7:24-27-ல் உள்ள இயேசுவின் உவமைக்கு இசைவாக, புத்தியுள்ள பெற்றோர், தங்கள் பிள்ளைகள் புயலைப் போன்ற அழுத்தங்களை எதிர்த்து _________________________ நிற்பதற்கு உதவி செய்யக்கூடிய _________________________, _________________________ தந்து அவர்களை பலப்படுத்துகிறார்கள். [w-TL98 2/15 பக். 9 பாரா 1]
25. பைபிளில் _________________________-க்கும் மேற்பட்ட தடவை யெகோவா _________________________ என அழைக்கப்படுகிறார். _________________________ படைத்தவரே உன்னத அரசதிகாரமுள்ளவர் ஆவார். [kl-TL அதி. 14 பாரா 3]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:
26. மரணம் நேரிட்டால் உங்கள் சொத்து என்ன செய்யப்பட வேண்டும் என்பதன்பேரில் சட்டப்பூர்வ ஏற்பாடுகளை செய்வது (சபை விஷயம்; சொந்த விஷயம்; உண்மை கிறிஸ்தவர்களுக்கான தேவை). (கலா. 6:5) [w-TL98 1/15 பக். 19 பாரா 6]
27. (ஓனாமை; ஒநேசிப்போருவை; ஒநேசிமுவை) அன்போடு ஏற்றுக்கொள்ளும்படி பிலேமோனை பவுல் ஊக்கமூட்டினார், ஆனால், தன்னுடைய அப்போஸ்தல அதிகாரத்தைப் பயன்படுத்தி அவ்விதம் செய்யவோ அல்லது விடுதலை செய்யவோ கட்டளையிடவில்லை. (பிலே. 21) [w-TL98 1/15 பக். 31 பாரா 1]
28. இயேசுவால் சுகப்படுத்தப்பட்ட குஷ்டரோகிகளைப் பற்றிய விவரப்பதிவில் மறைமுகமாக தெரிவிக்கப்படும் பெரிய குறைபாடு (விசுவாசமின்மை; கீழ்ப்படியாமை; நன்றிகெட்டதன்மை). (லூக். 17:11-19) [w-TL98 2/15 பக். 5 பாரா 1]
29. ராகாபின் செயலை கடவுள் அங்கீகரித்ததால், இஸ்ரவேல் வேவுகாரர்களை விரட்டிவந்த எரிகோவின் ஆட்களிடம் அவள் சொன்ன வார்த்தைகள், (பொய் சொல்வது தனிப்பட்டவருடைய தீர்மானம்; உண்மையை தெரியவேண்டிய அவசியமில்லாதவரிடம் அதை வெளிப்படுத்த வேண்டியதில்லை; அவள் தன்னுடைய உலகப்பிரகாரமான வழிகளை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை) என்பதைக் காட்டுகின்றன. (யோசு. 2:3-5; ஒப்பிடுக: ரோமர் 14:4.) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL93 12/15 பக். 25 பாரா 1-ஐக் காண்க.]
30. யோவான் 13:5-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி, இயேசு கற்பித்த பாடம் முக்கியப்படுத்திக் காட்டும் குணம் (தயவு; பரிவிரக்கம்; மனத்தாழ்மை). இது மற்றவர்களுக்காக மிகத் தாழ்வான வேலைகளைச் செய்வதற்கு ஒருவருடைய மனதை தூண்டுவிக்கிறது. [w-TL98 3/15 பக். 7 பாரா 6]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்:
உபா. 7:3, 4; 25:11, 12; 28:3; எரே. 15:20; எபே. 1:22, 23
31. இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றி படைப்பாளர் வைத்துள்ள உயர்ந்த மதிப்பு, குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமாக தகுந்த முறையை தெரிந்தெடுப்பதற்கு ஒரு கிறிஸ்தவன் எடுக்கும் தீர்மானத்தை செல்வாக்கு செலுத்த வேண்டும். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL99 6/15 பக். 28 பாரா. 1-4-ஐக் காண்க.]
32. கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையில் யெகோவாவின் ஆதரவு இருக்கும் என்பதில் நாம் நம்பிக்கையோடு இருக்கலாம். [w-TL98 3/1 பக். 28 பாரா 1]
33. பைபிளின் எச்சரிப்புக்கு செவிகொடுப்பது, ஒரு கிறிஸ்தவன் அவிசுவாசியை மணமுடிப்பதால் வரும் வேதனையான விளைவுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL90 6/1 பக். 14 பாரா 11-ஐக் காண்க.]
34. கடவுளுடைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பது, நாம் எங்கு வாழ்கிறோம், சேவைசெய்கிறோம் அல்லது கடவுளுடைய சேவையில் நமக்கு எந்த நியமிப்பு கொடுக்கப்படுகிறது என்பதன் அடிப்படையில் அல்ல. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL96 6/15 பக். 15 பாரா 15-ஐ காண்க.]
35. சபை இயேசு கிறிஸ்துவினுடையது, ஆவிக்குரிய நலத்திற்கும் சமாதானத்திற்கும் அச்சுறுத்தலைக் கொண்டுவரும் எந்தப் பிரச்சினைகளையும், கொரிந்துவில் செய்ததுபோல, ஏற்ற வேளையில் அவர் சரிசெய்வார். [w-TL96 6/15 பக். 30]