அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் தனிப்பட்ட பிரதிகள். ஆர்வம் காட்டுவோருக்கு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளித்து, வீட்டு பைபிள் படிப்புகளை துவங்க முயற்சி செய்யுங்கள். ஜூன்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? வீட்டு பைபிள் படிப்பு துவங்குவதில் கவனம் செலுத்துங்கள். ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேட்டில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? கடவுளுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில் போன்றவற்றை அளியுங்கள். பொருத்தமான சமயங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்), போன்ற சிற்றேடுகளை அளிக்கலாம்.
◼ 1951-1959, 1982-1984, 1992, 1997-98 ஆண்டுகளுக்கான ஆங்கில காவற்கோபுரம் பவுண்ட் வால்யூம்களும் 1992, 1997-98 ஆண்டுகளுக்கான ஆங்கில விழித்தெழு! பவுண்ட் வால்யூம்களும் சங்கத்திடம் இருப்பில் உள்ளன. பிரஸ்தாபிகளோ அல்லது புதிய சபைகளோ இந்த பிரசுரங்களை இப்பொழுது பெற்றுக்கொள்ள விருப்பம் இருந்தால் தங்களுடைய புத்தக இலாகா ஊழியர் மூலமாக ஆர்டர் செய்யலாம்.
◼ எதிர்காலத்தில், உவாட்ச்டவர் லைப்ரரி—1999 பதிப்பு சிடி-ராம் கிடைக்கும். லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்ம் (S-14)-ஐ பயன்படுத்தி சபைகள் தங்களுடைய ஆர்டர்களை செய்யலாம். இதை பள்ளி நூலகத்திலோ அல்லது பொதுவிடங்களிலோ விநியோகிக்கக்கூடாது என்பதை தயவுசெய்து ஞாபகத்தில் வையுங்கள். மேலும் யெகோவாவின் சாட்சிகளிடத்தில் ஏதோ பேருக்காக ஆர்வம் காண்பிப்பவர்களுக்கும் கொடுக்கக் கூடாது. உவாட்ச்டவர் லைப்ரரி—1999 சபையின் உறுப்பினர்களுக்கான ஒரு ஏற்பாடாகும். இது சபையின் மூலமாக மாத்திரம்தான் தருவிக்கப்படும். இந்த காம்பாக்ட் டிஸ்க்குகள் கிடைக்கப் பெற்று, அனுப்பப்படும் வரைக்கும் சபையின் பேக்கிங் லிஸ்ட்டில் “பென்டிங்” என்பதாகவே குறிக்கப்பட்டிருக்கும்.
◼ ஜனவரி ஸ்டேட்மென்ட்டுகளோடு எல்லா சபைகளுக்கும் வருடாந்தர ஐட்டங்களில், ஸ்பெஷல் ரிக்வெஸ்ட் ஃபார்ம்கள் அனுப்பப்பட்டுள்ளன. 2000 மாவட்ட மாநாட்டிற்கான பேட்ஜ் கார்டுகளையும் வருடம் 2001-ற்கான மற்ற வருடாந்தர ஐட்டங்களையும் இதுவரை ஆர்டர் செய்திராத சபைகள் உடனடியாக தங்களுடைய ஆர்டர்களை செய்யவேண்டும். இருப்பினும் உங்களுக்கு பேட்ஜ் கார்டு ஹோல்டர் (பிளாஸ்டிக்) தேவையெனில், நீங்கள் வழக்கமாக லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்ம் (S-14)-ல் அதை ஆர்டர் செய்யலாம். கூடுமானவரை மற்ற லிட்ரேச்சர் ஐட்டங்களை ஆர்டர் செய்யும்போது இவற்றையும் சேர்த்துக்கொள்வது நல்லது. ஏனெனில் சிறிய பாக்கெட்டுகள் அனுப்புகையில் அடிக்கடி தொலைந்துவிடுகின்றன.
◼ புதிதாக கிடைக்கும் பிரசுரங்கள்:
யெகோவா—யார்? (துண்டுப்பிரதி எண் 23)—அசாமீஸ், வங்காளி, ஆங்கிலம், குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், மிசோ, நேப்பாளி, ஒரியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு.
நம் வாழ்க்கையில் விதி விளையாடுகிறதா? அல்லது நம்மிடம் கடவுள் கணக்கு கேட்பாரா? (துண்டுப்பிரதி எண் 71)—அசாமீஸ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு.
மிக மகத்தான பெயர் (துண்டுப்பிரதி எண் 72)—அசாமீஸ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு.
யெகோவாவின் சாட்சிகள் யார்? (துண்டுப்பிரதி எண் 73)—அசாமீஸ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு.
நரக தண்டனை தேவ நீதியா? (துண்டுப்பிரதி எண் 74)—அசாமீஸ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு.