அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேட்டில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, நீங்கள் திரித்துவத்தை நம்ப வேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது?, (ஆங்கிலம்) வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில். பொருத்தமான சமயங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) ஆகிய சிற்றேடுகளை அளிக்கலாம். செப்டம்பர்: உயிர்—அது எப்படி வந்தது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? (ஆங்கிலம்). அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள். மறுசந்திப்பு செய்யும்போது ஆர்வம் காட்டினால், பத்திரிகைகளுக்கான சந்தா பற்றி சொல்லவும்.
◼ செப்டம்பரிலிருந்து, “மனித ஆட்சி—தராசில் நிறுக்கப்பட்டுள்ளது” என்ற தலைப்பில் வட்டாரக் கண்காணிகள் பொதுப் பேச்சை கொடுப்பார்கள்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
நம் வாழ்க்கையில் விதி விளையாடுகிறதா? அல்லது நம்மிடம் கடவுள் கணக்கு கேட்பாரா? (துண்டுப்பிரதி எண் 71), மிக மகத்தான பெயர் (துண்டுப்பிரதி எண் 72), யெகோவாவின் சாட்சிகள் யார்? (துண்டுப்பிரதி எண் 73), நரக தண்டனை தேவ நீதியா? (துண்டுப்பிரதி எண் 74)—ஒரியா
◼ ஒரு மாதத்திற்கு ஒரேவொரு லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபாம் (S-14) மட்டுமே சங்கத்திற்கு அனுப்பும்படி சபைகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. இந்தப் படிவத்தை சங்கத்திற்கு அனுப்பிய பிறகு, யாராவது பிரசுரங்கள் கேட்டால் அவற்றை அடுத்த மாத லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட்டோடு சேர்த்தனுப்ப வேண்டும்.
◼ சபைகள் தங்களுக்குத் தேவையான சர்வீஸ் ஃபாம்களின் ஆர்டரை பிரசுரங்களோடு சேர்த்து, லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபாமில் (S-14) குறிப்பிட வேண்டும்.