நீங்கள் சகிக்கிறீர்களா?
1 யோவானின் ஆவிக்குரிய பிள்ளைகள் சகித்து, நிலைத்திருந்தது அவருக்கு அளவற்ற சந்தோஷத்தை அளித்தது. எனவே அவர் சொன்னதாவது: “என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்[ற] . . . சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.” (3 யோ. 4) எதிர்காலத்தில் தம்முடைய பிள்ளைகளாக போகும் லட்சக்கணக்கானோர் இன்று, “சத்தியத்திலே நட”ப்பதை நம்முடைய பரலோக தகப்பன் காண்டு எவ்வளவு சந்தோஷம் அடைகிறார்!—நீதி. 23:15, 16; 27:11.
2 மொத்தத்தில் கடவுளுடைய ஜனங்கள் கிறிஸ்தவர்களாக தாங்கள் செய்ய வேண்டிய காரியங்களை வைராக்கியத்தோடு தொடருகின்றனர்; ஆனால் சிலருடைய வைராக்கியம் மெல்ல மெல்ல தணிந்து வருகிறது. இவர்கள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கையில் படுசுறுசுறுப்பாக செயல்பட்டனர்; ஆனால் வருடங்கள் உருண்டோடுகையில் ஓரளவுக்கு அல்லது அவ்வப்போது ஊழியத்தில் கலந்துகொண்டால் போதும் என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு திருப்தியடைந்துவிட்டனர்.
3 சுகவீனத்தினாலும் முதுமையின் கொடுமையை அனுபவிப்பதினாலும் முன்புபோல் சிலரால் ஊழியத்தில் ஈடுபட முடியாதது புரிந்துகொள்ளத்தக்கதே. எனினும், அவர்கள் சகித்து நிலைத்திருப்பதால் பாராட்டுக்குரியவர்களே. அவர்களால் முடிந்ததை அவர்கள் இன்னும் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே, கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த ஒவ்வொருவரும் இவ்வாறு தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்: ‘என் சொந்தக் காரியங்களைக் குறித்தே சிந்தித்துக்கொண்டிருப்பதால் ராஜ்யம் சம்பந்தப்பட்டவற்றிற்கு என் வாழ்க்கையில் கொஞ்ச நேரத்தையே ஒதுக்குகிறேனா? ஊழியத்தைப் பொறுத்ததில் “வெதுவெதுப்பாக” ஆகிவிட்டேனா அல்லது ‘மும்முரமாக’ ஈடுபடுகிறேனா? (வெளி. 3:15, 16; லூக். 13:24, NW) “எவன் நன்மை செய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்” என யெகோவா வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆகவே, நாம் இப்போது எந்தளவுக்கு செய்கிறோம் என்பதை யோசித்துபார்த்து, தேவையான முன்னேற்றம் செய்வதைக் குறித்து ஜெபத்தோடு நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.—ரோ. 2:10.
4 எப்படி சகித்திருப்பது: சகித்திருக்க இயேசுவுக்கு எது உதவியது? “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்” என பவுல் விளக்கினார். (எபி. 12:1-3) இயேசுவுக்கு முன் வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்தோடு ஒப்பிட, தற்காலிகமாக அவர் எதிர்ப்பட வேண்டியிருந்த சோதனைகள் ஒன்றுமே இல்லை. நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் சந்தோஷத்தை நாம் மனதில் வைப்பது நாமும் சகித்திருக்க உதவலாம். (வெளி. 21:4, 7; 22:12) நம்முடைய தனிப்பட்ட படிப்பு, தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்ளுதல், ஜெபத்தில் தரித்திருத்தல் போன்றவற்றின் மூலம் நம்மை பலப்படுத்தும்படி யெகோவாவிடம் கேட்கையில் அவர் நம்மிடம் ஒப்படைத்திருக்கும் வேலையை நம்மால் நிச்சயம் தொடர முடியும்.
5 தம்முடைய உண்மையுள்ள ஊழியர்கள் சகித்திருக்கையில் யெகோவா சந்தோஷப்படுகிறார். ‘சத்தியத்தில் நடப்பதன்மூலம்’ தொடர்ந்து நாம் அவருடைய இருதயத்தை மகிழ்விப்போமாக.