அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு நவம்பர்: ராஜ்ய செய்தி எண் 36-ன் விநியோகிப்பு. சபைகள் தங்கள் பிராந்தியத்திலுள்ள எல்லா வீடுகளிலும் ராஜ்ய செய்தி எண் 36-ஐ விநியோகித்து முடித்துவிட்டால், தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையோ அறிவு புத்தகத்தையோ அளிக்கலாம். இப்பிரசுரங்கள் அவர்களிடம் ஏற்கெனவே இருந்தால் என்றும் வாழலாம் புத்தகத்தையோ படைப்பு (ஆங்கிலம்) புத்தகத்தையோ அளிக்கலாம். டிசம்பர்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தோடு புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிளும். ஜனவரி: சிற்றேடுகள்: இருபதாம் நூற்றாண்டில் யெகோவாவின் சாட்சிகள், யெகோவாவின் சாட்சிகள்—ஒற்றுமையுடன் உலகம் முழுவதிலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறார்கள். அதோடு 192 பக்க பழைய புத்தகங்களையும் அளிக்கலாம். பிப்ரவரி: உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? (ஆங்கிலம்), வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! அல்லது சபையின் கையிருப்பிலிருக்கும் ஏதேனும் 192 பக்க புத்தகம்.
◼ ராஜ்ய செய்தி எண் 36 அநேக மொழிகளில் கிடைக்கிறது. இன்னும் அதிகமான துண்டுப்பிரதிகள் தேவைப்படும் சபைகள் அதற்கான ஆர்டர்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். ராஜ்ய செய்தி எண் 36-ன் விநியோகிப்பிற்குப் பின்பும் அது சபைகளின் கையிருப்பில் மீதமிருந்தால், மற்ற துண்டுப்பிரதிகளை விநியோகிப்பதைப் போலவே வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் வேறு விதத்திலும் அவற்றைக் கொடுக்கும்படி பிரஸ்தாபிகளை ஊக்குவியுங்கள். வீடு பூட்டப்பட்டிருந்தால், அந்த வழியாக போகிறவர்களின் கண்ணில் படாத விதத்தில் ஒரு துண்டுப்பிரதியைப் பிரஸ்தாபிகள் போட்டுவிட்டு வருவது நல்லது. முக்கிய செய்தி அடங்கிய இந்தத் துண்டுப்பிரதி இன்னும் மீதமிருந்தால் அவற்றையும் விநியோகித்து முடிப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.
◼ நடத்தும் கண்காணியோ அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ டிசம்பர் 1 அல்லது அதற்குப் பின் சீக்கிரத்தில் சபையின் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை முடிந்த பின்பு, அடுத்த முறை கணக்கு அறிக்கை வாசிக்கையில் இதுவும் அறிவிக்கப்பட வேண்டும்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? —உருது
◼ கிடைக்கும் புதிய வீடியோ கேஸட்:
இளைஞர் கேட்கின்றனர்—உண்மையான நண்பர்களை நான் எப்படி கண்டடையலாம்? —ஆங்கிலம்
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
குருசேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும்—நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதற்கும் —கன்னடம், தமிழ், தெலுங்கு
◼ கிடைக்கும் ஆடியோகேஸட்டுகள்:
மியூஸிக்-ஆர்கெஸ்ட்ரா: கிங்டம் மெலடீஸ், எண் 1 முதல் 8 (எட்டு ஆடியோ கேஸட்டுகள்)
(மேற்குறிப்பிடப்பட்ட ஆடியோ கேஸட்டுகளுக்கான ஆல்பம் கவர் கையிருப்பில் இல்லை)