பதிலளிக்கும் கருவியிடம் என்ன சொல்வீர்கள்?
ஊழியத்திற்கு செல்கையில் சிலரை வீட்டில் காண முடியாமல் போகலாம் அல்லது நேரில் சென்று சந்திக்க முடியாத இடங்களில் சிலர் வசிக்கலாம்; இவர்களுக்கு சாட்சி கொடுக்க நாம் டெலிபோனை பயன்படுத்துகிறோம். அப்படி நாம் பேசுகையில் சில சந்தர்ப்பங்களில் அந்த வீட்டுக்காரர் அல்ல, டெலிபோனில் பொருத்தப்பட்ட கருவியே அவர்கள் சார்பில் நம்மிடம் பதிலளிக்கும், ஏனெனில் அநேகர் இந்தக் கருவியை இப்போது உபயோகிக்கிறார்கள். நீங்கள் டெலிபோனில் ஜனங்களிடம் பேச முயற்சி செய்யும்போது அக்கருவி உங்களுக்குப் பதிலளித்தால் என்ன செய்வீர்கள்? அப்போது ரிசீவரை வைத்துவிட வேண்டாம். நீங்கள் சொல்வதை பதிவுசெய்யும் வசதியும் அந்த மெஷினில் இருப்பதால் சொல்ல வேண்டிய செய்தியை நன்றாக தயாரித்து எழுதி வைத்து படிக்கவும். இந்த செய்தியை, கனிவான குரலிலும் உரையாடும் விதத்திலும் அளிக்க பயிற்சி செய்யுங்கள். நீங்கள் என்ன சொல்லலாம்?
ராஜ்ய மன்றத்தில் கொடுக்கப்படவிருக்கும் பொதுப் பேச்சுக்கு வரும்படி அன்புடன் அவரை அழையுங்கள். நீங்கள் இவ்விதம் சொல்லலாம்: “சாரி, உங்களிடம் பேச டெலிபோன் செய்தபோது நீங்கள் வீட்டில் இல்லை. [தலைப்பைக் குறிப்பிடவும்] என்ற தலைப்பில் பைபிள் அடிப்படையிலான பொதுப் பேச்சை நீங்கள் கேட்க விரும்பினால் யெகொவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்திற்கு வரும்படி அழைக்கிறோம். யார் வேண்டுமானாலும் வந்து கலந்துகொள்ளலாம். இதற்கு நன்கொடை வசூலிக்கப்படாது.” அந்தக் கூட்டம் நடக்கும் நாளையும் நேரத்தையும் தெளிவாக சொல்லவும்; ராஜ்ய மன்றம் இருக்கும் அந்தத் தெருவின் விலாசத்தையும், இடத்தையும் தெளிவாக விளக்கவும்.
உங்கள் ராஜ்ய மன்றத்திற்கு வரும் புதியவர்களை இன்முகத்துடன் வரவேற்கவும். அவர்களிடம் உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக்கொள்ளவும். பைபிளைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள விரும்பினால் இலவசமாக வீட்டிற்கு வந்து சொல்லிக் கொடுப்பதாக தெரிவிக்கவும்.