ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
நவம்பர் 13-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
13 நிமி: ராஜ்ய செய்தி எண் 36-ஐ அளித்ததில் கிடைத்த அனுபவங்கள். ராஜ்ய செய்தி எண் 36-ஐ விநியோகிக்கையில் கிடைத்த உற்சாகமூட்டும் அனுபவங்களை பிரஸ்தாபிகளில் பலதரப்பினர் சொல்லும்படி கேளுங்கள். ஒழுங்கான பயனியர்களும் துணை பயனியர்களும் இந்த விசேஷ விநியோகிப்பால் அடைந்த நன்மையை தெரிவிக்கச் சொல்லுங்கள். இந்த விநியோகிப்பின்போது ஊழியத்தில் அதிக நேரம் செலவழிக்கப்பட்டதற்காகவும் வெவ்வேறு பிரஸ்தாபிகளோடு சேர்ந்து ஊழியம் செய்ய கிடைத்த வாய்ப்பிற்காகவும் அவர்கள் நன்றி தெரிவிப்பர்.
22 நிமி: நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை நன்கு உபயோகியுங்கள். பக்கங்கள் 7, 8-ஐ கேள்வி பதில் முறையில் கலந்தாலோசிக்கவும். ஊழியத்தை இன்னும் திறமையாக செய்ய உதவும் நோக்கத்தில் இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுங்கள். தொலைபேசி மூலம் சாட்சிகொடுக்க இந்தப் புத்தகத்தை எப்படி உபயோகிக்கலாம் என்பதை விளக்குங்கள். கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிக்க உதவும் பயனுள்ள தகவலை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதை நடித்துக்காட்டுங்கள். இந்தப் புத்தகத்திலுள்ள தகவல்களை நன்கு அறிந்திருக்கும்படியும், அதை ஊழியத்திற்கு எடுத்து செல்லும் பையில் வைத்திருக்கும்படியும், தவறாமல் பயன்படுத்தும்படியும் அனைவரையும் ஊக்குவியுங்கள்.
பாட்டு 175, முடிவு ஜெபம்.
நவம்பர் 20-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. இதுவரை எந்தளவுக்கு துண்டுப்பிரதி விநியோகிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நவம்பர் 30-க்குள் முழுமையாய் செய்து முடிப்பதற்கு என்ன செய்யப்பட வேண்டும் என்பதையும் சுருக்கமாக அறிவியுங்கள்.
13 நிமி: கேள்விப் பெட்டி. மூப்பரின் பேச்சு.
20 நிமி: “தொடர்ந்து பிரசங்கியுங்கள்!” பேச்சும் பேட்டியும். சிலர் யெகோவாவின் அமைப்போடு தொடர்புகொள்ள ஆரம்பித்தது முதல் தங்கள் ஊழியத்தில் விடாமுயற்சியைக் காட்டி வந்திருக்கின்றனர். நம்பிக்கையான மனநிலையோடு ஊழியம் செய்ததால் சந்தோஷத்தை அடைந்திருக்கின்றனர். (அறிவு புத்தகத்தில், பக்கம் 179, பாரா 20-ஐயும் 1992, ஆகஸ்ட் 1, காவற்கோபுரத்தில் பக்கங்கள் 21-2, பாராக்கள் 14-15-ஐயும் காண்க.) விடாமுயற்சியுடன் பல ஆண்டுகளாக ஊழியத்தில் ஈடுபட்டு வரும் பிரஸ்தாபியை பேட்டி காணுங்கள்.
பாட்டு 141, முடிவு ஜெபம்.
நவம்பர் 27-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நவம்பர் மாத ஊழிய அறிக்கையைப் போடும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். டிசம்பர் மாத பிரசுர அளிப்பு, அறிவு புத்தகத்துடன் புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிள். அநேக மொழிகளில் பைபிளை வெளியிடுவதில் யெகோவாவின் சாட்சிகளின் முக்கிய பங்கை விளக்குங்கள்.—1997, அக்டோபர் 15, காவற்கோபுரம், பக்கங்கள் 11-12-ஐக் காண்க.
20 நிமி: “ராஜ்ய செய்தி எண் 36-க்குக் காட்டிய ஆர்வத்தை வளர்த்தல்.” கேள்வி பதில் முறையில் பாராக்கள் 1-5-ன் கலந்தாலோசிப்பு. இன்னும் துண்டுப்பிரதி விநியோகிக்கப்படாத இடத்தில் ஊழியம் செய்ய சபை திட்டமிட்டிருந்தால் அதை அறிவியுங்கள். மறுசந்திப்புகள் செய்வதற்கு, பாராக்கள் 7, 8-ல் கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்களை மறுபார்வை செய்து, அவை ஒவ்வொன்றையும் நடித்துக் காட்ட செய்யுங்கள். ஆர்வம் காட்டிய அனைவரையும் சென்று சந்திப்பதும், பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதற்கு முயற்சி எடுப்பதும் எந்தளவு முக்கியம் என்பதை வலியுறுத்துங்கள். பாரா 9-ஐயும் அதிலுள்ள வசனங்களையும் கலந்தாலோசிப்பதுடன் முடியுங்கள்.
15 நிமி: டெலிவிஷன் பார்க்கும் பழக்கத்தை நான் எப்படிக் கட்டுப்படுத்தலாம்? ஒவ்வொரு நாளும் பல மணிநேரத்தை டிவி பார்ப்பதில் செலவழிக்கும் இளம் சகோதரனுடன் மூப்பர் பேசுகிறார். அதில் ஆபத்து ஒன்றுமில்லை என ஆரம்பத்தில் அந்தச் சகோதரன் பிடிவாதமாக சொல்கிறார். அதுவும் ஒருவகை ஓய்வுநேர பொழுதுபோக்குதான், தான் எந்த விதத்திலும் அதனால் பாதிக்கப்படவில்லை என்பதாக அவன் சொல்கிறான். இளைஞர் கேட்கின்றனர் புத்தகத்தில் 36-ம் அதிகாரத்திலுள்ள முக்கிய குறிப்புகளை மூப்பர் மறுபார்வை செய்கிறார். தனிப்பட்ட படிப்புக்கோ, ஊழியத்திற்கோ, சபை தேவைகளுக்கோ செலவழிக்க முடிந்த மதிப்புமிக்க நேரத்தை, அதிகப்படியாக டிவி பார்ப்பது உறிஞ்சிக்கொள்கிறது என்பதாக அவர் விளக்குகிறார். அந்தப் புத்திமதிக்கு இளம் சகோதரன் நன்றி தெரிவிக்கிறான்; ஆன்மீக ரீதியில் தான் பயனடையும் நோக்கத்தோடு டிவி பார்க்கும் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்வதாக சொல்கிறான்.
பாட்டு 63, முடிவு ஜெபம்.
டிசம்பர் 4-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை தேவைகள். “பதிலளிக்கும் கருவியிடம் என்ன சொல்வீர்கள்?”
15 நிமி: ராஜ்ய செய்தி எண் 36-ன் விநியோகிப்பில் கிடைத்த அனுபவங்கள். எந்தளவுக்கு வெற்றிகரமாக அது விநியோகிக்கப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை தெரிவியுங்கள். முதன்முறையாக சபையில் யாரேனும் ஊழியத்தில் கலந்துகொண்டார்களா? வீட்டுக்காரர்கள் தெரிவித்த பாராட்டு குறிப்புகளைப் பற்றி சொல்லுங்கள். பிரஸ்தாபிகள் யாரேனும் பைபிள் படிப்புகளை ஆரம்பித்தார்களா? அப்படியென்றால், அதை விளக்கும்படி அல்லது அதையே நடித்துக் காட்டும்படி சொல்லுங்கள். அவர்களுடைய ஆர்வத்தை வளர்க்கும்படி அனைவருக்கும் நினைப்பூட்டுங்கள்.
20 நிமி: “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை.” சபையாருடன் கலந்தாலோசிப்பும் நடிப்புகளும். உரையாடலைத் துவங்க தங்களால் முடியாது, நல்ல பலன்கள் கிடைக்க ஏதோ விசேஷித்த திறமை தேவை என பலர் தங்கள் மனதில் தப்புக்கணக்குப் போட்டிருக்கின்றனர். புதியவர்கள், இளம் பிரஸ்தாபிகள் உட்பட நாம் அனைவருமே ஓரளவு முயற்சி செய்தால் உரையாடல்களை ஆரம்பிப்பது எளிது என்பதை விளக்குங்கள். கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிமுகங்களை மறுபார்வை செய்யுங்கள், அவற்றின் எளிய நடையை வலியுறுத்திக் காட்டுங்கள், அவற்றை இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகள் நடித்துக் காட்ட சொல்லுங்கள். வேறு அறிமுகங்களைப் பயன்படுத்த விரும்பினால் 1998, மார்ச் மாத நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 8-ஐக் காண்க. ஊழியத்தில் அதிக சந்தோஷத்தை கண்டடைய நம்பிக்கையான மனநிலையுடன் இருக்கும்படி அனைவரையும் ஊக்குவியுங்கள்.
பாட்டு 218, முடிவு ஜெபம்.