உங்கள் நூலகத்தில் ஏதாவது இயர்புக் இல்லாமல் இருக்கிறதா?
யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகம் (இயர்புக்) ஒவ்வொன்றும் வாசித்து மகிழ்வதற்கான அரும்பெரும் பொக்கிஷங்களின் தொகுப்பு எனலாம். உலகெங்கும் நடைபெறும் ராஜ்ய பிரசங்க வேலையைப் பற்றிய உற்சாகமூட்டும் அறிக்கைகள், யெகோவாவின் வழிநடத்துதல், பாதுகாப்பு, ஆசீர்வாதம் ஆகியவற்றின்மீது நம் நம்பிக்கையைப் பலப்படுத்துகின்றன. 1997 முதல் 2000 வருடத்திற்கான இயர்புக்குகளின் ஆங்கில பதிப்புகள் நம் கையிருப்பில் உள்ளன. உருகுவே, செக் குடியரசு, பராகுவே, பிரிட்டன், பிரேஸில், பெனின், மடகாஸ்கர், மலாவி, மார்ட்டினிக், மைக்ரோனீஷியா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடைபெறும் ராஜ்ய வேலை பற்றிய ஆர்வமூட்டும் சரித்திரம் இந்த இயர்புக்குகளில் புதைந்துள்ளன. உங்கள் நூலகத்தில் இந்த இயர்புக்கில் ஏதாவது இல்லாமல் இருக்கிறதா என ஏன் சற்று பார்க்கக்கூடாது? அதே போல தேவராஜ்ய ஊழியப் பள்ளி கண்காணியும் ராஜ்ய மன்ற நூலகத்திற்கு கவனம் செலுத்த வேண்டும். இந்த இயர்புக்குகளை பெற விரும்பும் பிரஸ்தாபிகளோ சபைகளோ சபை பிரசுர ஊழியர் மூலம் அதற்காக இப்போது ஆர்டர் செய்யலாம்.