அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஜூன்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? அல்லது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. வீட்டு பைபிள் படிப்புகளைத் துவங்குவதில் கவனம் செலுத்துங்கள். ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் இறக்கும்போது என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில். பொருத்தமான சமயங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) ஆகிய சிற்றேடுகளை அளிக்கலாம். செப்டம்பர்: இருபதாம் நூற்றாண்டில் யெகோவாவின் சாட்சிகள் சிற்றேடும் உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? (ஆங்கிலம்) புத்தகமும்.
◼ 2001, ஜூலை 30-ல் துவங்கும் வாரத்திலிருந்து இந்தியாவிலுள்ள அனைவரும் ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I புத்தகத்தை சபை புத்தகப் படிப்பில் படிக்கப் போகிறோம். இந்த அட்டவணை மராத்தி, நேப்பாளி, தெலுங்கு மொழி புத்தகப் படிப்பு குழுக்களுக்கும் பொருந்தும்.
◼ பிப்ரவரி மாத ஸ்டேட்மென்டுடன் வருடாந்தர ஐட்டங்களுக்கான விசேஷ ஆர்டர் படிவம் (Special Request Form for Annual Items) ஒவ்வொரு சபைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 2001-ற்கான மாநாட்டு பேட்ஜ் கார்ட்டுகளையும் 2002-ற்கான வேதவாக்கியங்களை ஆராய்தல், இயர்புக், காலண்டர், நினைவு ஆசரிப்பு அழைப்பிதழ்கள் போன்ற வருடாந்தர ஐட்டங்களையும் இது வரை ஆர்டர் செய்திராத சபைகள் தங்கள் ஆர்டர்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த வருடத்திற்கு உங்களுக்குத் தேவையானவற்றை சொஸைட்டியால் அனுப்பி வைக்க முடியாது. ராஜ்ய மன்ற பிரசுர விவரப்பட்டியல் ஏற்பாட்டின் (Kingdom Hall Literature Inventory Arrangement) கீழுள்ள சபைகள் தங்கள் ஆர்டர்களை “ஒருங்கிணைக்கும் சபை” மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். ஒருங்கிணைக்கும் சபையின் பிரசுர ஒருங்கிணைப்பாளரும் செயலரும் தங்கள் பிரசுர தொகுதியிலுள்ள ஒவ்வொரு சபைக்கும் தேவையான பிரசுரங்களை ஆர்டர் செய்துவிட்டார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.