தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஜனவரி 7 முதல் ஏப்ரல் 22, 2002 வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: எழுத்துமுறை மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுர மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் சரியா தவறா என்று விடையளியுங்கள்:
1. நகைப்பையும் சந்தோஷத்தையும் தவிர்க்கும்படியே சாலொமோன் பிரசங்கி 2:2-ல் குறிப்பிடுகிறார். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL87 12/1 பக். 28 பாரா 5-ஐக் காண்க.]
2. பிரசங்கி புத்தகம், எதிர்மறையான, நம்பிக்கையற்ற மனநிலையை உருவாக்கும் புத்தகமாக சிறிதேனும் இல்லை; மாறாக, கடவுளுடைய ஞானத்தின் ஒளிமிகுந்த மணிக்கற்கள் நிறைந்ததாக, கடவுளைப் புறக்கணிப்பவையே தீங்கான செயல்கள் என காட்டுவதாக உள்ளது. [si-TL பக். 114 பாரா 15]
3. ஏசாயா 1:7-ல் ஆகாஸின் ஆட்சிகாலத்தில் நடக்கும் பாழ்க்கடிப்பைப் பற்றி தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார். [வாராந்தர பைபிள் வாசிப்பு; ip-1-TL பக். 17 பாரா 16-ஐக் காண்க.]
4. வெளிப்படுத்துதல் 7:9-ல் “சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்”பதாக சொல்வது பரலோகத்தைக் குறிக்கிறது. [rs-TL பக். 167 பாரா 4]
5. நேரம், திறமைகள், சக்தி, பொருளுடைமைகள் ஆகிய நம்முடைய வளங்களை, ‘யெகோவாவைக் கனம்பண்ணுவதற்கு’ தாராளமாக உபயோகிப்பது யெகோவாவின் அபரிமிதமான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தருகிறது. (நீதி. 3:9, 10, தி.மொ.) [w-TL00 1/15 பக். 25 பாரா 1]
6. ஏசாயா 28:21-ல் (பொ.மொ.) முன்னறிவிக்கப்பட்ட இன்றைய ‘விந்தையான செயலும் புதிரான பணியும்’ அர்மகெதோனில் தேசங்கள் அழிக்கப்படுவதைக் குறிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; காண்க: ip-1-TL பக். 295 பாரா 16; பக். 301 பாரா 28.]
7. மத்தேயு 24:38, 39 காட்டுவதுபோல் புசிப்பதிலும் குடிப்பதிலும் மற்ற சொந்த காரியங்களிலும் மூழ்கியிருந்ததாலேயே நோவாவின் நாளைய ஜனங்கள் ஜலப்பிரளயத்தில் அழிந்தார்கள். [w-TL00 2/15 பக். 6 பாரா 6]
8. தன்னலமின்றி தம்மை சேவிக்கும் தாழ்மையான ஊழியர்களின் வேண்டுதல்களை யெகோவா எப்போதும் நிறைவு செய்கிறார். [w-TL00 3/1 பக். 4 பாரா 3]
9. கடவுள் கொடுத்த வெளிச்சத்திடம் ஈர்க்கப்படும் தனிப்பட்ட அரசாங்கங்களே ஏசாயா 60:3-ல் (NW) குறிப்பிடப்பட்டுள்ள ‘தேசத்தார்.’ [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL00 1/1 பக். 12 பாரா 4-ஐக் காண்க.]
10. எரேமியா பிறப்பதற்கு முன்னமே யெகோவா அவரை ‘பரிசுத்தம் பண்ணுவதன்’ மூலம் எரேமியாவின் நித்திய எதிர்காலத்தை ஏற்கெனவே முன்தீர்மானித்தார். (எரே. 1:5) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL88 5/1 பக். 20 பாரா 2-ஐக் காண்க.]
பின்வரும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்:
11. பிரசங்கி 11:1-ல் ‘ஆகாரத்தை [“அப்பத்தை,” NW] போடுவது’ என்பது எதை அர்த்தப்படுத்துகிறது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL87 12/1 பக். 30 பாரா 8-ஐக் காண்க.]
12. ஏசாயா 6:8-ல் “நமது” என யெகோவா யாரை தம்மோடு சேர்த்துக் குறிப்பிடுகிறார்? [வாராந்தர பைபிள் வாசிப்பு; ip-1-TL பக். 94 பாரா 13-ஐக் காண்க.]
13. ஏசாயா 9:2-ன் நிறைவேற்றமாக, ‘பெரிய வெளிச்சம்’ எப்படி கலிலேயாவில் பிரகாசித்தது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; ip-1-TL பக். 126 பாரா 17-ஐக் காண்க.]
14. பொ.ச.மு. 539-ல் ஏற்பட்ட பாபிலோனின் வீழ்ச்சிக்கும் அதன் நித்திய பாழ்க்கடிப்புக்கும் என்ன நவீன நாளைய ஒப்புமையை காணலாம்? (ஏசா. 13:19, 20; 14:22, 23) [வாராந்தர பைபிள் வாசிப்பு; ip-1-TL பக். 188 பாரா. 30-1-ஐக் காண்க.]
15. “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” எப்படி ஏசாயா 21:6-ல் (NW) விவரிக்கப்பட்டுள்ள ‘காவல்காரனை’ போல் செயல்பட்டிருக்கிறது? (மத். 24:25, NW) [வாராந்தர பைபிள் வாசிப்பு; ip-1-TL பக். 221-2 பாரா 11-ஐக் காண்க.]
16. மனைவியைத் தேடும் இளம் மனிதனுக்கு என்ன ஞானமான அறிவுரை நீதிமொழிகள் 31:10-ல் காணப்படுகிறது? [w-TL00 2/1 பக். 31 பாரா 1]
17. ஏசாயா 43:9-ல் (தி.மொ.) தேசங்களின் தெய்வங்களுக்கு என்ன சவால் விடப்படுகிறது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL88 9/1 பக். 17 பாரா 3-ஐக் காண்க.]
18. கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்போரின் பாதங்கள் எவ்வகையில் “அழகாயிருக்கின்றன”? (ஏசா. 52:7) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL97 4/15 பக். 27 பாரா 6-ஐக் காண்க.]
19. நம் இருதயம் நம்மை வஞ்சியாதபடி காத்துக்கொள்ள எது நமக்குத் தேவை? (எரே. 17:9) [w-TL00 3/1 பக். 30 பாரா 4]
20. ‘யெகோவாவின் வழியில் நடப்பவர்கள்’ என்ன செய்ய வேண்டும்? (எரே. 7:23, NW) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL99 8/15 பக். 29 பாரா 6-ஐக் காண்க.]
பின்வரும் வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் சொல் (சொற்கள்) அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
21. “ஞானியின் இருதயம் வலதுகையி”லிருக்கிறது என்பதில், “வலது கை” அநேகமாக _________________________ அர்த்தப்படுத்துகிறது; இவ்வாறு, அவருடைய _________________________ தகுந்த நல்வழியில் செல்ல அவரைத் தூண்டுவதை இது அர்த்தப்படுத்துகிறது. (பிர. 10:2; மத். 25:33) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL87 12/1 பக். 30 பாரா 6-ஐக் காண்க.]
22. சாலொமோனின் உன்னதப்பாட்டு கற்பிக்கும் நன்மையளிக்கும் பாடங்களில் _________________________ , _________________________ , கடவுளுடைய நியமங்களுக்கு _________________________ ஆகியவை உள்ளன. [si-TL பக். 117 பாரா 16]
23. யூதாவின் பட்டணங்களைக் கொள்ளையிடுவதாக ஏசாயா 33:1-ல் விவரிக்கப்பட்டிருப்பது _________________________ ; ஆனால் அதுவே பொ.ச.மு. 632-ல் தோல்வி கண்டு, _________________________ குடிகளுக்கு மிகுதியான கொள்ளைப் பொருளை விட்டுச் செல்லும். அக்குடிகள் ‘வெட்டுக்கிளிகள் சேர்ப்பதைப் போல் அவற்றை’ சேர்ப்பார்கள். (ஏசா. 33:4) [வாராந்தர பைபிள் வாசிப்பு; காண்க: ip-1-TL பக். 343 பாரா 4; பக். 345 பாரா 6.]
24. ஏசாயா 54:1-ஐ (NW)கலாத்தியர் 4:26, 27-உடன் ஒப்பிடுகையில், ‘பிள்ளைப் பெறாத மலடி,’ _________________________ ‘நாயகரையுடைய ஸ்திரீ’ _________________________ படமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL95 8/1 பக். 11 பாரா 8-ஐக் காண்க.]
25. வெளி ஊழியத்தில் ஜனங்கள் நம்மை ஏளனம் செய்து, வெறுத்து ஒதுக்குகையில், _________________________ அல்ல, நம் செய்தியின் காரணகர்த்தாவாகிய _________________________ எதிர்க்கிறார்கள் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். (2 கொ. 4:1, 7) [w-TL00 1/15 பக். 21 பாரா 2]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:
26. இயேசுவை பரலோக மகிமையில் கண்ட தரிசனத்தைப் பற்றி பவுல் எழுதுகையில், தன்னை “அகாலப்பிறவி” என குறிப்பிட்டபோது, (புதிதாக ஆவியால் பிறப்பிக்கப்பட்டதை; புறதேசத்தாருக்கு அப்போஸ்தலராக சீக்கிரத்தில் நியமிக்கப்பட்டதை; உரிய காலத்திற்கு முன்பாகவே ஆவியின் வாழ்க்கைக்குப் பிறப்பிக்கப்படும் அல்லது உயிர்த்தெழுப்பப்படும் மேன்மை பெற்றுவிட்டதைப் போல் இருந்ததை) அர்த்தப்படுத்தினார். (1 கொ. 9:1; 15:8) [w-TL00 1/15 பக். 29 பாரா 6]
27. “நித்திய பிதா” என்ற பட்டப்பெயர், மனிதர்களுக்கு (ஆவிக்குரிய சக்தியை; பரலோகத்தில் அழியாமையுள்ள வாழ்க்கையை; பூமியில் நித்திய வாழ்க்கையை) வழங்க மேசியானிய ராஜா அதிகாரமும் வல்லமையும் பெற்றிருப்பதைக் காட்டுகிறது. (ஏசா. 9:6; யோவா. 11:25, 26) [வாராந்தர பைபிள் வாசிப்பு; ip-1-TL பக். 131 பாரா 26-ஐக் காண்க.]
28. ஏசாயா 66:7-ன் இன்றைய நிறைவேற்றத்தில் பெற்றெடுக்கப்பட்ட அந்த “ஆண்பிள்ளை” (இயேசு கிறிஸ்துவை; மேசியானிய ராஜ்யத்தை; 1919-ன் புதிய ஆவிக்குரிய ஜனத்தை) குறிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL95 1/1 பக். 11 பாரா 3-ஐக் காண்க.]
29. மத்தேயு 10:28-ஐ கவனமாக வாசிக்கையில், அக்கினிமயமான கெஹென்னா என்பது (சுயநினைவுடன் வாதிக்கப்படும் இடத்தை; நித்திய அழிவை பிரதிநிதித்துவம் செய்வதை; கடவுளிடமிருந்து விலகியிருப்பதை) குறிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. [rs-TL பக். 173 பாரா 3]
30. ‘கர்த்தருடைய சத்தத்தைக் கேளாது இருக்கிற ஜாதி’ என எரேமியா 7:28-ல் சொல்லப்பட்டது இன்றைய நிறைவேற்றத்தில் (மகா பாபிலோனை; கிறிஸ்தவமண்டலத்தை; ஏழாவது உலக வல்லரசை) குறிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL88 5/1 பக். 29 பாரா 10-ஐக் காண்க.]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்:
நீதி. 24:16; பிர. 3:11; ஏசா. 40:8; ரோ. 10:15; 1 பே. 4:6
31. ஒவ்வொரு செயலும் கடவுளுடைய நோக்கத்தில் எங்கே சரியாக பொருந்துகிறது என்பது ஏற்ற காலத்தில் வெளிப்படுத்தப்படும். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL87 12/1 பக். 28 பாரா 8-ஐக் காண்க.]
32. ஆவிக்குரிய விதமாக மரித்திருப்பவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பது அவர்கள் மனந்திரும்ப வாய்ப்பளிக்கிறது. [rs-TL பக். 163 பாரா 4]
33. வாழ்க்கையில் தோல்விகளை சந்திப்பது தவிர்க்க முடியாததாக இருந்தாலும் கடவுள் பக்தியுள்ளவர்கள் நன்மை செய்வதில் தளராமல் இருப்பார்கள். [w-TL00 2/1 பக். 5 பாரா 1]
34. கடவுளுடைய வார்த்தைகளை வீணாக்க முடியாது அல்லது அவரது வெளிப்படுத்தப்பட்ட நோக்கத்தை தடுத்து நிறுத்த முடியாது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; ip-1-TL பக். 401-2 பாரா 10-ஐக் காண்க.]
35. இயேசுவின் அப்போஸ்தலர்கள் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை ஊழியத்துக்குப் பொருத்தி, நன்றாக பயன்படுத்தினர். [si-TL பக். 123 பாரா 37]