அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஏப்ரல், மே: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள். மறுசந்திப்பு செய்கையில் ஆர்வம் தென்பட்டால் பத்திரிகை மார்க்க பட்டியலில் அந்நபரையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கும் நோக்கத்தில் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளியுங்கள். ஜூன்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? அல்லது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. வீட்டுக்காரர்களிடம் இந்தப் பிரசுரங்கள் இருந்தால், சபையின் கையிருப்பிலிருக்கும் ஏதாவதொரு பொருத்தமான சிற்றேட்டை அளியுங்கள். ஜூலை: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில். பொருத்தமான சமயங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) ஆகிய சிற்றேடுகளை அளிக்கலாம்.
◼ ஜனவரி மாதாந்தர ஸ்டேட்மெண்டுடன் வருடாந்தர ஐட்டங்களுக்கான விசேஷ தருவிப்பு படிவமும் ஒவ்வொரு சபைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 2002 மாநாட்டு பேட்ஜ் கார்டுகள், 2003-ம் ஆண்டுக்கான வருடாந்தர ஐட்டங்கள் ஆகியவற்றை இதுவரை ஆர்டர் செய்திராத சபைகள் உடனடியாக தங்கள் ஆர்டர்களை அனுப்ப வேண்டும். ராஜ்ய மன்ற பிரசுர இன்வென்டரி ஏற்பாட்டின்கீழ் செயல்படும் சபைகள் “ஒருங்கிணைக்கும் சபை” மூலமாக மட்டுமே தங்கள் ஆர்டர்களை அனுப்ப வேண்டும். ஒருங்கிணைக்கும் சபையின் செயலர் தங்கள் பிரசுர தொகுதியின் கீழுள்ள ஒவ்வொரு சபைக்கும் தேவைப்படும் பிரசுரங்கள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
◼ அனைத்து நடத்தும் கண்காணிகள், செயலர்கள் ஆகியோரின் சரியான விலாசங்களையும், தொலைபேசி எண்களையும் கிளை அலுவலகம் கைவசம் வைத்திருப்பது அவசியம். ஆகவே இவற்றில் எந்த சமயம் மாற்றம் செய்யப்பட்டாலும், நடத்தும் கண்காணி/செயலர் விலாச மாற்றம் (S-29) என்ற படிவத்தை சபை ஊழிய குழு முழுமையாக பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு உடனடியாக கிளை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். பின்கோடு மாற்றத்துக்கும் இது பொருந்தும்.
◼ ஒழுங்கான பயனியர் சேவைக்கான விண்ணப்பம் (S-205-TL), துணைப் பயனியர் சேவைக்கான விண்ணப்பம் (S-205b-TL) ஆகிய படிவங்கள் போதுமானளவு கைவசம் இருக்கும்படி சபை செயலர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இவற்றை லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்மில் (S-14) ஆர்டர் செய்யலாம். அவற்றை முடிந்த மட்டும் ஒரு வருடத்திற்குத் தேவைப்படும் அளவு வைத்திருங்கள். ஒழுங்கான பயனியர் விண்ணப்ப படிவங்கள் அனைத்தையும் பரிசீலித்து எல்லாம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். விண்ணப்பிப்பவருக்கு முழுக்காட்டுதல் பெற்ற தேதி சரியாக ஞாபகமில்லாதிருந்தால் அவர்கள் உத்தேசமாக ஒரு தேதியை எழுதி, பின்பு அதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
◼ வேறு நாட்டில் நடைபெறும் சபை கூட்டங்களில், வட்டார மாநாட்டில், அல்லது மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள தனிப்பட்ட விதமாக திட்டமிடுகையில், அது சம்பந்தப்பட்ட தேதிகள், நேரங்கள், இடங்கள் போன்ற தகவல்களை அறிய அந்த நாட்டில் ஊழியத்தை மேற்பார்வை செய்யும் கிளை அலுவலகத்துக்கு எழுத வேண்டும். கிளை அலுவலகங்களின் சமீப விலாசங்கள் இயர்புக்கின் கடைசி பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ —தமிழ்
நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் —தமிழ்