சுத்தம் யெகோவாவிற்கு மகிமை சேர்க்கிறது
1 “எல்லா ஆண்களும் சுத்தமாகவும் டை அணிந்தவர்களாகவும் இருந்தார்கள். பெண்கள் அடக்கமாக, அதேசமயம் நளினமாக உடுத்தியிருந்தார்கள்.” மற்றொரு பார்வையாளரான ஒரு பாதுகாவலர் இவ்வாறு சொன்னார்: “அவர்கள் கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்கிறவர்கள், சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருப்பவர்கள். இவர்களைப் பார்க்கப் பார்க்க அழகாக இருக்கிறது. அசுத்தமான இந்த உலகில், அழுக்கை அப்புறப்படுத்தி விட்டீர்கள்.” எப்படிப்பட்ட கூட்டத்தைப் பற்றி இது விவரித்தது? அரசியல் கூட்டத்தையா? கிரிக்கெட் விளையாட்டையா? திருமண வரவேற்பு நிகழ்ச்சியையா? இவை எதுவுமே இல்லை! கடந்த வருடம் பெரிய மாவட்ட மாநாட்டுக்கு கூடிவந்திருந்த சகோதர சகோதரிகளையே இது விவரித்தது.
2 நமக்குக் கிடைத்த எத்தகைய அருமையான நற்சான்று! நம் சகோதரத்துவம் இவ்வளவு உயர்வாக பாராட்டப்படுவதற்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம் அல்லவா? சொல்லப்போனால், அரங்கத்தை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு தங்கள் உழைப்பாலும், முன்மாதிரியான நடத்தையாலும் நற்சான்று பெற்றுத் தந்த சாட்சிகள் அனைவருக்கும் இதில் பங்குண்டு. நம்முடைய நடத்தையில் நாம் வெகு வித்தியாசமாய் இருப்பது உலகறிந்த விஷயமாக ஆகிவருகிறது. (மல். 3:18) ஏன்? ஏனெனில், “நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” என்ற யெகோவாவின் கட்டளையை நாம் பின்பற்றுகிறோம்.—1 பே. 1:16.
3 “அசுத்தம்” சுத்தம் ஆக்கப்படுகிறதா? பொதுவாக, மாநாடுகளுக்கென நாம் வாடகைக்கு எடுக்கும் மன்றங்கள் ஆண்டாண்டு காலமாக துஷ்பிரயோகத்திற்கும், நாசப்படுத்துதலுக்கும், குப்பையாக்குதலுக்கும், இன்னும் வேறு விதமான அசிங்கப்படுத்துதலுக்கும் உள்ளாகி, பார்க்க சகிக்காத நிலையில் விடப்பட்டிருக்கும். கழிப்பறைகள், ஓய்வெடுக்கும் அறைகள், அத்துடன் சேர்ந்த கட்டடங்கள் நம் பரிசுத்த கடவுளின் தராதரத்திலிருந்து வெகுவாக குறைவுபடுகின்றன. அவை இந்தக் காரிய ஒழுங்குமுறையின் “அசுத்த” கடவுளை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றன. (2 கொ. 4:4) இந்நிலையை மாற்ற நாம் என்ன செய்யலாம்?
4 கொச்சி, சென்னை, மும்பை ஆகிய மாநகரங்களில் மாநாடு ஆரம்பிப்பதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே சுத்தம் செய்வதற்காக ஒவ்வொன்றிலும் 1,000-க்கும் அதிக வாலண்டியர்கள் தேவைப்படுவார்கள்; அவர்கள் அந்த மன்றங்களை இந்நகரங்கள் இதற்கு முன் கண்டிராத அளவிற்கு பளிச்சென்று ஆக்க முயலுவார்கள். அந்த மூன்று நாட்களும் இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கும், காலரிகளை பெருக்குவதற்கும், இருக்கைகளை கழுவுவதற்கும், இன்னும் இதுபோன்ற பிற அத்தியாவசியமான வேலைகளுக்கும் நியமிக்கப்படுவார்கள். வேலை செய்கையில் அணிவதற்கு உகந்த உடையையும் எடுத்து வாருங்கள்; யெகோவாவை கனப்படுத்தக் கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பில் நீங்களும் பங்களிக்க முடியும்.
5 முன்பெல்லாம் தரையைக் கூட்டுவது, கழுவுவது, துடைப்பது, இருக்கைகளை துடைப்பது போன்ற வேலைகளை மட்டுமே நாம் செய்து வந்திருக்கலாம். இந்த வருடம், மாநாட்டு அரங்கத்தின் மூலைமுடுக்கெல்லாம் நம் சுத்தமான கடவுளின் பண்பை படம்பிடித்துக் காட்டுவதை நிச்சயப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். எல்லாரும் இதில் பங்கு கொள்ளலாம். ஏதாவது குப்பையை தரையில் கண்டால் அதை உடனே எடுத்து குப்பைத் தொட்டியில் போடுவதற்கு பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம். ஏதாவது சிந்திவிட்டாலோ, உடைந்துவிட்டாலோ உடனே அதை அப்புறப்படுத்த சுத்தம் செய்யும் இலாகாவுக்கு தெரிவிக்க வேண்டும். குளியலறைகளை நம் சகோதரர்கள் நன்றாக தேய்த்து கழுவி பளிச்சென்று சுத்தம் செய்த பிறகு அழுக்கு படியாதவாறு அவற்றை வைத்துக்கொள்ள எல்லாருமே தங்கள் பங்கைச் செய்யலாம்.
6 ஆடை அலங்காரம்: இது எதை சுட்டிக்காட்டுகிறது? சுத்தமான, ஒழுங்கான தோற்றத்திற்கு சிறந்த முன்மாதிரியை ஒவ்வொரு வருடமும் நம் சகோதர சகோதரிகள் தவறாமல் வைத்திருக்கிறார்கள். தங்களிடம் உள்ள சிறந்த ஆடைகளை மாநாட்டிற்கென உடுத்துவது நம் எல்லாருக்குமே வழக்கம்; நம் சகோதரிகள் சேலை, சல்வார்-கமீஸ், ஸ்கர்ட் என எதை உடுத்தினாலும் அடக்கத்துடன் உடுத்துவதை நாம் பெரிதும் பாராட்டுகிறோம். சிறுவர்களும்கூட இவ்வுலகின் அதிநவீன போக்கை அல்லது பாணியை எடுத்துக்காட்டும் ஆடைகளை அணியாதிருப்பதால் பாராட்டுக்குரியவர்கள். (ரோ. 12:2) இந்த தராதரத்தைக் காத்துக்கொள்வதன் மூலம் நாம் உண்மையில் ‘தேவனை மகிமைப்படுத்த’ விரும்புவதைக் காட்டுகிறோம்.—1 பே. 2:12.
7 மும்பை மாநாட்டில் சேர்கள் இருக்காது; இதை மனதில் வைத்து அரங்க படிக்கட்டுகளில் சௌகரியமாக உட்காருவதற்கு வசதியாக ஆடை அணிந்து வர வேண்டியிருக்கலாம். பாய் அல்லது சிறிய குஷன் விரிப்பை கொண்டுவருவது சிறந்தது. கொச்சியிலும், மூடிய அரங்கத்தில் அநேகர் கூடிவருவதால், நம் ஆடை சௌகரியமாக இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்வது ஞானமானது.
8 “வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போர்” மாவட்ட மாநாட்டில், நம் “கடவுளாகிய யெகோவாவின் பரிசுத்த ஜனமாக” நிரூபிக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோமாக. அதனால் விளையும் நல்லெண்ணம் “புகழையும் நற்பெயரையும் அழகையும்” யெகோவாவுக்கு சேர்க்கும்.—உபா. 26:19, NW.
[பக்கம் 6-ன் பெட்டி]
யெகோவாவை எப்படி மகிமைப்படுத்தலாம்:
■ மாநாடு நடக்கும் இடத்தை சுத்தப்படுத்த வாலண்டியராக செல்லுங்கள்.
■ எல்லாவற்றையும் சுத்தமாக வைப்பதில் ஒத்துழையுங்கள்.
■ கடவுளுடைய ஊழியருக்குப் பொருத்தமான விதத்தில் உடுத்துங்கள்.