அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் செப்டம்பர்: உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? இதற்கு பதிலாக எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் அல்லது இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகத்தை உபயோகிக்கலாம். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள். மறுசந்திப்பு ஒன்றை செய்கையில், யெகோவாவின் சாட்சிகள் ஒற்றுமையுடன் உலகம் முழுவதிலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறார்கள் சிற்றேட்டை அளியுங்கள். ஆரம்பத்திலிருந்தே வீட்டுக்காரரை நம் சபை கூட்டங்களுக்கு அழைத்துக்கொண்டே இருங்கள். நவம்பர்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? அல்லது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. ஜனங்களிடம் இவை ஏற்கெனவே இருந்தால், ஏதாவதொரு பழைய பிரசுரத்தை அளிக்கலாம். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர். அதற்குப் பதிலாக என்னுடைய பைபிள் கதை புத்தகம், பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? (ஆங்கிலம்), அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் ஆகியவற்றை அளிக்கலாம்.
◼ சபைநீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது அமைப்பிலிருந்து விலகிவிட்டவர்கள் மீண்டும் சபைக்குள் வர விரும்பினால், அவர்களுக்கு உதவ பிப்ரவரி 1, 1992, காவற்கோபுரம், 20-1 பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றும்படி மூப்பர்களுக்கு நினைவூட்டப்படுகிறது.
◼ பிரஸ்தாபிகள் கிளை அலுவலகத்திற்கு தனிப்பட்ட விதத்தில் கேட்டெழுதும் பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்பட மாட்டா. சபையின் மாதாந்தர பிரசுர ஆர்டரை கிளை அலுவலகத்திற்கு அனுப்புவதற்கு முன்பு ஒவ்வொரு மாதமும் அதை சபைக்கு அறிவிக்க நடத்தும் கண்காணி ஏற்பாடு செய்ய வேண்டும். இது, தங்களுக்கென பிரசுரங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறவர்கள் பிரசுர ஊழியரிடம் முன்னதாகவே ஆர்டர் செய்ய உதவும். விசேஷ ஆர்டரின் பேரில் அனுப்பப்படும் ஐட்டங்கள் எவை என்பதை தயவுசெய்து அறிந்திருங்கள்.
◼ 2003-ம் ஆண்டு நினைவு ஆசரிப்பு கால விசேஷ பொதுப் பேச்சு ஞாயிறு, ஏப்ரல் 27 அன்று கொடுக்கப்படும். பேச்சின் பொருளும் அதற்கான குறிப்புத்தாளும் பின்னர் அளிக்கப்படும். அந்த வாரத்தில் வட்டார கண்காணியின் சந்திப்போ அசெம்பிளியோ இருந்தால், அந்தச் சபைகளில் அதற்கு அடுத்த வாரத்தில் விசேஷ பேச்சு கொடுக்கப்படும். ஏப்ரல் 27, 2003-க்கு முன்பு எந்தச் சபையிலும் விசேஷ பொதுப் பேச்சு கொடுக்கப்படக் கூடாது.