யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தை அளிக்க ஆலோசனைகள்
◼ பைபிளை கையில் வைத்தவாறே சொல்லுங்கள்: “கடவுள் நம்பிக்கையுள்ள அநேகர் அவரிடம் நெருங்கி வர விரும்புவார்கள். தம்மிடம் நெருங்கி வரும்படி கடவுள் நம்மை அழைக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? [யாக்கோபு 4:8-ஐ வாசியுங்கள்.] தங்களிடமுள்ள பைபிளையே பயன்படுத்தி கடவுளிடம் நெருங்கி வருவதற்கு உதவும் விதத்தில் இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.” பக்கம் 16-ல் காணப்படும் பாரா 1-ஐ வாசியுங்கள்.
◼ பைபிளை கையில் வைத்தவாறே சொல்லுங்கள்: “இன்று எங்கு பார்த்தாலும் அநீதியே நிறைந்திருக்கிறது. இங்கு சொல்லப்பட்டிருப்பதைப் போலவே இருப்பதைப் பாருங்கள். [பிரசங்கி 8:9-ன் பிற்பகுதியை வாசியுங்கள்.] கடவுளுக்கு நம்மீது கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா என்றே அநேகர் நினைக்கிறார்கள். [பக்கம் 119-லுள்ள பாரா 4-ல் இருந்து முதல் இரண்டு வாக்கியங்களை வாசியுங்கள்.] சிறிது காலத்திற்கு அநீதியை கடவுள் அனுமதித்திருப்பதற்கான காரணத்தை இந்த அதிகாரம் விளக்குகிறது.”