அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் செப்டம்பர்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக” அல்லது இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? புத்தகத்தை அளிக்கலாம்; அது இல்லாவிட்டால், பழுப்பேறக்கூடிய அல்லது நிறம் மாறக்கூடிய பேப்பரில் அச்சடிக்கப்பட்டிருக்கும் 192 பக்க புத்தகங்களில் ஒன்றையோ நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தையோ அளிக்கலாம். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள். அக்கறை காட்டுகிறவர்களிடம் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளித்து பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். நவம்பர்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையோ நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தையோ அளியுங்கள். வீட்டுக்காரர்களிடம் இப்பிரசுரங்கள் ஏற்கெனவே இருந்தால், ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் புத்தகத்தையோ, பழைய பிரசுரம் ஒன்றையோ அளியுங்கள். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர். இது இல்லையென்றால், என்னுடைய பைபிள் கதை புத்தகம் அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை அளிக்கலாம்.
◼ தனிப்பட்ட பிரஸ்தாபிகள் கிளை அலுவலகத்திற்கு கேட்டெழுதும் பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்படாது. மாதாந்தர பிரசுர ஆர்டரை சபை கிளை அலுவலகத்திற்கு அனுப்புவதற்கு முன்பு ஒவ்வொரு மாதமும் அதை சபையாருக்கு அறிவிக்க நடத்தும் கண்காணி ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான், பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிற அனைவரும் பிரசுர ஊழியரிடம் முன்னதாகவே ஆர்டர் செய்ய முடியும். விசேஷ ஆர்டரின் பேரில் அனுப்பப்படும் ஐட்டங்கள் எவை என்பதை தயவுசெய்து அறிந்திருங்கள்.
◼ சபைநீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது அமைப்பிலிருந்து தொடர்பறுத்துக் கொண்டவர்கள் மீண்டும் சபைக்குள் வர விரும்பினால், அவர்களுக்கு உதவ பிப்ரவரி 1, 1992, காவற்கோபுரம், 20-1 பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றும்படி மூப்பர்களுக்கு நினைவூட்டப்படுகிறது.
◼ நம் ராஜ்ய ஊழியத்தின் இந்த இதழின் உட்சேர்க்கையில் அறிவு புத்தகத்தை அளிப்பதற்கான ஆலோசனைகள் உள்ளன. பிரசங்கிக்கையில் உங்களுக்கு விருப்பமானவற்றை எல்லாம் உபயோகித்து, கிடைக்கும் பலன்களை கவனியுங்கள்.
◼ லோனாவாலா விலாசத்திற்கு எழுதப்பட்ட அநேக தபால்கள் பெங்களூரிலுள்ள கிளை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. நம் பிரசுரங்களை வாசித்து அதிகம் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிற, ஆனால் மறுபடியும் சந்திக்கப்படாத ஆட்களிடமிருந்தே முக்கியமாக அவை வருகின்றன. சமீபத்திய பத்திரிகைகள் அல்லது பிரசுரங்கள் தவிர பெரும்பாலானவற்றில் லோனாவாலா விலாசமே உள்ளது. சபைகளிடமும் பிரஸ்தாபிகளிடமும் முடங்கிக் கிடக்கும் பிரசுரங்களிலும் அந்த விலாசமே உள்ளது. ஆகவே, கையிருப்பிலுள்ள பிரசுரங்கள் தீர்ந்துபோய் மறுபடியும் பிரசுரிக்கப்படும் வரை, இப்படிப்பட்ட பிரசுரங்களை அளிக்கையில் தயவுசெய்து பழைய விலாசத்தை அடித்துவிட்டு பெங்களூர் கிளை அலுவலகத்தின் புதிய விலாசத்தை எழுதிக் கொடுக்குமாறு எல்லா பிரஸ்தாபிகளையும் கேட்டுக்கொள்கிறோம். லோனாவாலாவிற்குப் போகும் தபால்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கும், அந்தக் கடிதங்களுக்கு பதில் எழுதுவதில் காலதாமதம் ஏற்படுவதை குறைப்பதற்கும் இது உதவும்.
◼ 2004-ம் ஆண்டு நினைவு ஆசரிப்பு கால விசேஷ பொதுப் பேச்சு ஞாயிறு, ஏப்ரல் 18 அன்று கொடுக்கப்படும். பேச்சின் பொருள் பின்னர் அறிவிக்கப்படும். அந்த வாரத்தில் வட்டார கண்காணியின் சந்திப்போ அசெம்பிளியோ இருந்தால், அந்தச் சபைகளில் அதற்கு அடுத்த வாரத்தில் விசேஷ பேச்சு கொடுக்கப்படும். ஏப்ரல் 18, 2004-க்கு முன்பு எந்தச் சபையிலும் விசேஷ பேச்சு கொடுக்கப்படக் கூடாது.
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
யெகோவாவின் சாட்சிகளும் கல்வியும் —ஹிந்தி
வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? —மராத்தி, வங்காளி, ஹிந்தி
கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? —கன்னடம், குஜராத்தி, மராத்தி, வங்காளி, ஹிந்தி
நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? —ஆங்கிலம்
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் (29 பாடல்கள்) —ஹிந்தி
குருசேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும்—நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதற்கும் —கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளி, ஹிந்தி
மரணத்தின் மேல் வெற்றி—உங்களுக்குச் சாத்தியமா? —நேப்பாளி
நம் வாழ்க்கையில் விதி விளையாடுகிறதா? அல்லது நம்மிடம் கடவுள் கணக்கு கேட்பாரா? (முஸ்லீம்களுக்காக) (துண்டுப்பிரதி எண் 71) —உருது