உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 11/03 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2003
நம் ராஜ்ய ஊழியம்—2003
km 11/03 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் நவம்பர்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையோ நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தையோ அளியுங்கள். வீட்டுக்காரர்களிடம் இப்பிரசுரங்கள் ஏற்கெனவே இருந்தால், ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் புத்தகத்தையோ, பழைய பிரசுரம் ஒன்றையோ அளியுங்கள். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர். இது இல்லையென்றால், என்னுடைய பைபிள் கதை புத்தகம் அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை அளிக்கலாம். ஜனவரி: 1988-⁠க்கு முன் பிரசுரிக்கப்பட்ட, சபையின் கையிருப்பில் உள்ள ஏதாவதொரு புத்தகம். இந்தப் பழைய பிரசுரங்கள் எதுவும் கையிருப்பில் இல்லாவிட்டால் நீங்கள் உபயோகிப்பதற்கு பக்கத்து சபைகளில் இவை அதிகம் உள்ளனவா என்பதை தயவுசெய்து கேட்டுப் பாருங்கள். பழைய புத்தகங்கள் கையிருப்பில் இல்லாத சபைகள் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தையோ இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தையோ அளிக்கலாம். பிப்ரவரி: யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள். இந்தப் புத்தகம் இல்லாவிட்டால் அதற்கு பதிலாக உயிர்​—⁠எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? அல்லது வெளிப்படுத்துதல்​—⁠அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகத்தை அளிக்கலாம்.

◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் டிசம்பர் 1 அல்லது அதற்குப் பிறகு கூடுமானவரை சீக்கிரத்திலேயே சபையின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை முடிந்ததும் அடுத்த முறை சபையில் கணக்கு அறிக்கை வாசிக்கப்பட்ட பிறகு, இதையும் சபையாருக்கு அறிவிக்க வேண்டும்.

◼ சபைகள் தங்கள் நூலகத்துக்காக ஆர்டர் செய்திருந்த உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ் 2001-ஐ அனுப்பிய பிறகு அவற்றில் இன்னும் சில பிரதிகள் கையிருப்பில் உள்ளன. சொந்த உபயோகத்துக்காக இந்த இன்டெக்ஸை பெற விரும்பும் பிரஸ்தாபிகள் இப்போது சபை மூலமாக ஆர்டர் செய்யலாம்.

◼ சபைகளிலிருந்து பெறும் பிரசுர ஆர்டர்களை கிளை அலுவலகம் ஒவ்வொரு மாதமும் பின்வரும் வரிசை முறையில் அனுப்பி வைக்கும்: முதல் வாரத்தில் கர்னாடகம், தமிழ் நாடு ஆகியவற்றிலுள்ள சபைகளுக்கும்; இரண்டாவது வாரத்தில் ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்ரம் ஆகியவற்றிலுள்ள சபைகளுக்கும்; மூன்றாவது வாரத்தில் கேரளத்திலுள்ள சபைகளுக்கும்; நான்காவது வாரத்தில் இந்தியாவிலுள்ள எஞ்சிய மாநிலங்களின் சபைகளுக்கும் ஆர்டர் பேரில் பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்படும். உங்கள் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள வாரத்திற்கு முன்பே பிரசுர ஆர்டர்கள் கிளை அலுவலகத்துக்கு கிடைக்கும்படி பிரசுர ஒருங்கிணைப்பாளர் (அல்லது ஊழியர்) ஏற்பாடு செய்ய வேண்டும்.

◼ உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் 2002 பிரதிகள் ஆங்கிலத்தில் உள்ளன. சபை நூலகத்திற்காக ஒவ்வொரு சபையும் ஒரேவொரு பிரதிக்கு ஆர்டர் செய்யலாம். பிரசுர ரிக்வெஸ்ட் படிவத்தில் ‘சபை உபயோகத்திற்கு’ என்ற கட்டத்தில் அதை தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் 2002 ​—⁠ஆங்கிலம்

ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் ​—⁠கன்னடம், தெலுங்கு

◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:

உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? ​—⁠ஆங்கிலம்

உயிர்​—⁠எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? (சிறியது) ​—⁠ஆங்கிலம்

நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு ​—⁠நேப்பாளி, வங்காளி

வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் முயலுங்கள் ​—⁠ஆங்கிலம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்