கேள்விப் பெட்டி
◼ குடும்ப பைபிள் படிப்பை சபை வெளி ஊழிய அறிக்கையில் குறிப்பிட வேண்டுமா?
முழுக்காட்டப்படாத பிள்ளைகளுக்கு ஒரு கிறிஸ்தவ பெற்றோர் குடும்ப பைபிள் படிப்பு நடத்துகையில், அதிகப்பட்சமாக வாரத்துக்கு ஒரு மணிநேரத்தையும், வாரத்துக்கு ஒரு மறுசந்திப்பையும், மாதத்திற்கு ஒரு பைபிள் படிப்பையும் அறிக்கை செய்யலாம். படிப்பை ஒரு மணிநேரத்துக்கு அதிகமாகவோ, வாரத்தில் பலமுறையோ, அல்லது குழந்தைகளுக்குத் தனித்தனியாகவோ நடத்தினாலும் இப்படித்தான் அறிக்கை செய்ய வேண்டும்.—நம் ஊழியம் புத்தகம் பக். 104-ஐக் காண்க.
வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாக இருக்கையில், (முழுக்காட்டுதலுக்குப் பிறகு பிள்ளை இரண்டாவது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தால் தவிர) நேரத்தையும் படிப்பையும் வெளி ஊழிய அறிக்கையில் சேர்க்கக்கூடாது. காரணம், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறாத ஆட்களிடம் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கும் பைபிள் சத்தியத்தை போதிப்பதற்கும் என்ன செய்கிறோம் என்பதையே சபை வெளி ஊழிய அறிக்கை முக்கியமாக காட்டுகிறது. (மத். 24:14; 28:19, 20) எனினும், அத்தகைய படிப்பை தவறாமல் நடத்துவதன் முக்கியத்துவத்தை எவ்விதத்திலும் குறைத்துப் போடாது.
தங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பு நடத்துவது கிறிஸ்தவ பெற்றோரின் கடமை. குடும்ப படிப்பை ஆரம்பிப்பதற்கு அல்லது அதில் முன்னேற்றம் செய்வதற்கு யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் மூப்பர்களை அணுகலாம். சூழ்நிலைகளின் காரணமாக, சபையோடு கூட்டுறவு கொள்ளும் ஒரு கிறிஸ்தவ குடும்பத்திலுள்ள முழுக்காட்டப்படாத மகனுக்கோ மகளுக்கோ வேறொரு பிரஸ்தாபி பைபிள் படிப்பு நடத்த வேண்டியிருந்தால் அதைக் குறித்து நடத்தும் கண்காணியிடம் அல்லது ஊழியக் கண்காணியிடம் பேச வேண்டும். அப்படி படிப்பு நடத்த ஒப்புதல் கிடைத்தால் நடத்துபவர் ஒரு பைபிள் படிப்பை அறிக்கை செய்வது போல் இதையும் அறிக்கை செய்யலாம்.
யெகோவாவின் வழிகளில் பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதற்கு வெளி ஊழிய அறிக்கையில் குறிப்பிடுவதைவிட அதிகமான நேரமும் முயற்சியும் தேவைப்படுகிறது. (உபா. 6:6-9; நீதி. 22:6) பிள்ளைகளை ‘யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்’ வளர்க்கும் கனமான பொறுப்பை ஏற்றிருப்பதற்கு கிறிஸ்தவ பெற்றோரைப் பாராட்ட வேண்டும்.—எபே. 6:4.