தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
பிப்ரவரி 23, 2004-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாய்மொழியாக கலந்தாலோசிக்கப்படும். பள்ளிக் கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது ஜனவரி 5 முதல் பிப்ரவரி 23, 2004 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. பேச்சின் நடைமுறைப் பொருத்தம் சபையாருக்குத் தெளிவாக தெரிவதற்கும் அவர்களுக்கு உண்மையிலேயே பயனுள்ளதாக இருப்பதற்கும் நாம் என்ன செய்யலாம்? [be-TL பக். 158 பாரா. 2-4]
2. வார்த்தைகளை நாம் ஏன் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்? [be-TL பக். 160 பாரா 1 மற்றும் இரண்டாவது பெட்டி]
3. நல்ல பேச்சிற்கான எந்த அடிப்படைத் தேவை 1 கொரிந்தியர் 14:9-ல் வலியுறுத்தப்படுகிறது, போதிக்கையில் இந்த நியமத்தை நாம் எப்படி பின்பற்றலாம்? [be-TL பக். 161 பாரா. 1-4]
4. மத்தேயு 5:3-12-லும் மாற்கு 10:17-21-லும் பார்த்தபடி, இயேசுவின் போதனையில் நாம் பின்பற்றத்தக்க தனிச்சிறப்புமிக்க ஒரு பண்பு எது? [be-TL பக். 162 பாரா 4]
5. நாம் ஊழியம் செய்கையிலோ சபைக் கூட்டங்களில் பதில் சொல்லுகையிலோ வலிமை, உணர்ச்சி, தத்ரூபம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் ஏன் கவனமாக இருக்க வேண்டும்? (மத். 23:37, 38) [be-TL பக். 163 பாரா 3 – பக். 164 பாரா 1]
பேச்சு நியமிப்பு எண் 1
6. பேச்சின் மையப்பொருள் என்பது எது, பேச்சுப் பொருளை தேர்ந்தெடுத்து ஒழுங்கமைக்கையில் இதை மனதில் வைப்பது எப்படி பயனளிக்கும்? [be-TL பக். 39 பாரா 6 – பக். 40 பாரா 1]
7. (அ) ஆன்மீக சுத்தம் எதை அர்த்தப்படுத்துகிறது, எந்த சுத்தத்தையும்விட ஆன்மீக சுத்தம் ஏன் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது? (ஆ) இவ்வுலகில் பரவலாக காணப்படும் ஒழுக்கப்பிரகாரமான அசுத்தத்தை கிறிஸ்தவர்கள் எப்படி தவிர்க்கலாம்? [w-TL02 2/1 பக். 5-6]
8. பைபிளிலுள்ள நெறிகள் அனைத்திலும் முக்கியமான நெறிகள் யாவை? [w-TL02 2/15 பக். 5 பாரா. 1, 4, 6]
9. ஒற்றுணர்வு என்றால் என்ன, இந்த குணத்தை இயேசு எப்படி வெளிக்காட்டியிருக்கிறார்? [w-TL02 4/15 பக். 25 பாரா. 4-5]
10. யெகோவாவின் ஜனங்களுடைய சபைகளுக்கு நீதிமொழிகள் 11:11 எப்படி பொருந்துகிறது? [w-TL02 5/15 பக். 27, பாரா. 1-3]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. ஆதியாகமம் 2:9-ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஜீவவிருட்சம்’ எதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது?
12. லோத்துவின் மனைவி ஏன் ஜீவனை இழந்தாள்? (ஆதி. 19:26) [w-TL90 4/15 பக். 18 பாரா 10]
13. ஆதியாகமம் 24-ம் அதிகாரத்திலுள்ள தீர்க்கதரிசன நாடகத்தில் பின்வருபவர்களுக்கு படமாக இருப்பவர்கள் யாவர்: (அ) ஆபிரகாம், (ஆ) ஈசாக்கு, (இ) ஆபிரகாமின் ஊழியக்காரரான எலியேசர், (ஈ) பத்து ஒட்டகங்கள், (உ) ரெபேக்காள்?
14. யாக்கோபையும் ஏசாவையும் குறித்து கடவுள் முன்விதித்திருந்தாரா? (ஆதி. 25:23)
15. யெகோவா ஆசீர்வதிக்குமளவுக்கு ஊக்கமான முயற்சியெடுத்த ராகேல் எந்த விதத்தில் சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தாள்? (ஆதி. 30:1-8) [w-TL02 8/1 பக். 29-30]