உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 2/04 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2004
நம் ராஜ்ய ஊழியம்—2004
km 2/04 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் பிப்ரவரி: யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள். இந்தப் புத்தகம் இல்லாவிட்டால் அதற்கு பதிலாக உயிர்​—⁠எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? அல்லது வெளிப்படுத்துதல்​—⁠அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகத்தை அளிக்கலாம். மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுக்க வேண்டும். இந்தப் புத்தகம் ஏற்கெனவே ஜனங்களிடம் இருந்தால் தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! புத்தகத்தை அளிக்கலாம். ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளையும் அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களை மறுசந்திப்பு செய்கையில், அமைப்புடன் நிரந்தர தொடர்பு வைத்திராமல், நினைவு ஆசரிப்புக்கோ வேறு ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகளுக்கோ மட்டும் வந்து போகும் நபர்களையும் சந்தியுங்கள். கடவுளை வணங்குங்கள் புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் சந்திப்போரிடம், முக்கியமாக அறிவு புத்தகத்தையும் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் ஏற்கெனவே படித்திருக்கும் சிலரிடம் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க விசேஷ முயற்சி செய்ய வேண்டும்.

◼ நடத்தும் கண்காணியோ அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ மார்ச் 1 அல்லது அதற்குப் பின் சீக்கிரத்தில் சபைக் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். பிறகு அடுத்த முறை கணக்கு அறிக்கையை வாசிக்கையில் அதை சபைக்கு அறிவிக்க வேண்டும். உலகளாவிய வேலைக்காக அல்லது அமைப்பு ஆதரிக்கும் வேறு நிதிக்காக சபை நன்கொடைகளை அனுப்பியதற்கு நன்றிக் கடிதம் வந்திருந்தால் அதையும் வாசியுங்கள்.

◼ செயலரும் ஊழியக் கண்காணியும் எல்லா ஒழுங்கான பயனியர்களின் ஊழிய நடவடிக்கையை மறுபார்வை செய்ய வேண்டும். தேவைப்படும் மணிநேரத்தை எட்டுவதற்கு யாருக்கேனும் கஷ்டமிருந்தால் தேவையான உதவி அளிக்க மூப்பர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆலோசனைகளுக்கு S-201-TL வருடாந்தர கடிதங்களைப் பாருங்கள்.

◼ 2004-⁠ல் நினைவு ஆசரிப்புக் காலத்தில் கொடுக்கப்படும் விசேஷ பொதுப் பேச்சின் தலைப்பு “தைரியமாயிருங்கள், யெகோவா மீது நம்பிக்கை வையுங்கள்.” இது சம்பந்தப்பட்ட அறிவிப்புக்கு செப்டம்பர் 2003 நம் ராஜ்ய ஊழியத்தைக் காண்க.

◼ குறைந்த எண்ணிக்கையில் (1) கிங்டம் மெலடீஸ் [1 முதல் 9 வரை], (2) ராஜ்ய பாடல்களைப் பாடுதல் ஆகிய காம்பாக்ட் டிஸ்க்குகள் உள்ளன. ராஜ்ய மன்றத்தில் உபயோகிப்பதற்கு கிங்டம் மெலடீஸ் செட்டை வாங்க விரும்பும் சபைகள் தயவுசெய்து தங்கள் ஆர்டரை உடனடியாக அனுப்பவும். ராஜ்ய பாடல்களைப் பாடுதல் பிரதிகளை தனிப்பட்ட பிரஸ்தாபிகளும் ஆர்டர் செய்யலாம்.

◼ பிப்ரவரி முதல் வட்டாரக் கண்காணிகள் கொடுக்கும் புதிய பொதுப் பேச்சின் தலைப்பு, “யாருடைய தராதரங்களை நீங்கள் மதிக்கிறீர்கள்?”

◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:

பைபிள் கலந்துரையாடலை ஆரம்பித்து நடத்துவது எப்படி ​—⁠கன்னடம்

வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? ​—⁠ஆங்கிலம், நேப்பாளி

கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? ​—⁠நேப்பாளி, பஞ்சாபி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்