உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 8/04 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2004
நம் ராஜ்ய ஊழியம்—2004
km 8/04 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் இறக்கும்போது என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில். செப்டம்பர்: திருப்தியான வாழ்க்கைக்கு வழி. இந்த சிற்றேடு உங்கள் மொழியில் இல்லையென்றால், என்னுடைய பைபிள் கதை புத்தகம் அல்லது மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை சிறப்பித்துக் காட்டுங்கள். அக்கறை காட்டுவோரிடம் தயவுசெய்து தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அறிமுகப்படுத்துங்கள்; பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கும் நோக்கத்துடன் மறுசந்திப்பு செய்யுங்கள். நவம்பர்: திருப்தியான வாழ்க்கைக்கு வழி. இந்த சிற்றேடு உங்கள் மொழியில் இல்லையென்றால், என்னுடைய பைபிள் கதை புத்தகம் அல்லது மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள்.

◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் செப்டம்பர் 1 அல்லது அதற்குப் பிறகு கூடுமானவரை சீக்கிரத்திலேயே சபையின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை முடிந்ததும் அடுத்த முறை சபையில் கணக்கு அறிக்கை வாசிக்கப்பட்ட பிறகு, இதையும் சபையாருக்கு அறிவிக்க வேண்டும்.

◼ ஆகஸ்ட்டில் ஒவ்வொரு சபைக்கும் காங்கிரிகேஷன் அனாலிஸிஸ் ரிப்போர்ட் ஃபார்ம்ஸ் (S-AB-10) இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கப்படும். இதை சபையின் ஆகஸ்ட் மாத ஊழிய அறிக்கையை தொகுத்த பிறகு நிரப்ப வேண்டும். சபையின் செயலரும் ஊழியக் கண்காணியும் சேர்ந்து இதை நிரப்புவர்; இவ்வாறு திருத்தமாக இது நிரப்பப்படுவதை உறுதி செய்துகொள்வர். ஒழுங்கான பயனியர்கள் பற்றிய தகவலை இந்த ஃபார்மின் பின்பக்கத்தில் எழுதுவர். தயவுசெய்து இதன் ஒரிஜினலை செப்டம்பர் 10 தேதிக்குள் கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வையுங்கள். நகலை உங்கள் ஃபைல் காப்பியாக வைத்துக்கொள்ளுங்கள்.

◼ முடிந்தவரை ஆகஸ்ட் 31, 2004 தேதிக்குள் கையிருப்பிலுள்ள எல்லா பிரசுரங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் வருடாந்தர இன்வென்ட்ரி எடுக்க வேண்டும். பிரசுர ஒருங்கிணைப்பாளர் ஒவ்வொரு மாதமும் எண்ணிக்கையை சரிபார்ப்பதைப் போலவே இதையும் சரிபார்த்து மொத்த எண்ணிக்கையை லிட்ரேச்சர் இன்வென்ட்ரி (S-18-TL) ஃபார்மில் எழுத வேண்டும். கையிருப்பிலுள்ள மொத்த பத்திரிகைகளின் எண்ணிக்கையை பத்திரிகை ஊழியர்(கள்) வாயிலாக தெரிந்துகொள்ளலாம். ஒருங்கிணைப்பு சபையின் செயலர், இன்வென்ட்ரி எடுப்பதை மேற்பார்வை செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பு சபையின் செயலரும் நடத்தும் கண்காணியும் ஃபார்மில் கையொப்பமிடுவார்கள். ஒவ்வொரு ஒருங்கிணைக்கும் சபைக்கும் மூன்று லிட்ரேச்சர் இன்வென்ட்ரி (S-18-TL) ஃபார்ம்கள் அனுப்பி வைக்கப்படும். தயவுசெய்து செப்டம்பர் 6-⁠ம் தேதிக்குள் ஒரிஜினலை சொஸைட்டிக்கு அனுப்பவும். நகல் ஒன்றை உங்களுடைய ஃபைல்களில் வைத்துக்கொள்ளவும். மூன்றாவது நகலை ‘ஒர்க்’ ஷீட்டாக பயன்படுத்திக் கொள்ளவும்.

◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:

யெகோவாவின் சாட்சிகள்​—⁠அவர்கள் யார்? அவர்களது நம்பிக்கை என்ன? ​—⁠பெங்காலி

நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் ​—⁠குஜராத்தி, பஞ்சாபி

கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? ​—⁠மராத்தி

வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? ​—⁠மராத்தி

சுவனத்திற்கு செல்லும் பாதையை கண்டடைவது எப்படி (முஸ்லிம்களுக்காக) ​—⁠தமிழ்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்