அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் நவம்பர்: திருப்தியான வாழ்க்கை சிற்றேடு. இது உங்கள் மொழியில் இல்லையென்றால், என்னுடைய பைபிள் கதை புத்தகம் அல்லது மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். இது கைவசம் இல்லாவிட்டால் என்னுடைய பைபிள் கதை புத்தகம், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் ஆகிய புத்தகங்களையோ வேறு புத்தகங்களையோ அளியுங்கள். ஜனவரி: பழுப்பேறியோ நிறம் மாறியோ உள்ளதும், 1990-ம் வருடத்திற்கு முன்பு வெளியிடப்பட்டதுமான 192 பக்க புத்தகம் ஏதாவது இருந்தால் அவற்றை அளிக்கலாம். இதுபோன்ற பழைய புத்தகங்கள் எதுவும் இல்லாத சபைகள் கடவுளைத் தேடி (ஆங்கிலம்) அல்லது குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தை அளிக்கலாம்.
◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் டிசம்பர் 1 அல்லது அதற்குப் பிறகு கூடுமானவரை சீக்கிரத்திலேயே சபையின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை முடிந்ததும் அடுத்த முறை சபையில் கணக்கு அறிக்கை வாசிக்கப்பட்ட பிறகு, இதையும் சபையாருக்கு அறிவிக்க வேண்டும்.
◼ அனைத்து நடத்தும் கண்காணி, செயலர் ஆகியோரின் தற்போதைய விலாசங்களும் தொலைபேசி எண்களும் கிளை அலுவலகத்திடம் இருப்பது அவசியம். எப்போதாவது இவற்றில் மாற்றம் ஏதாவது இருந்தால், நடத்தும் கண்காணி/செயலர் விலாச மாற்ற படிவத்தை (S-29) சபையின் ஊழியக்குழு பூர்த்தி செய்து, கையெழுத்திட்டு உடனடியாக கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தொலைபேசி ஏரியா கோட் நம்பரில் மாற்றம் இருந்தால் அதையும் இப்படிவத்தின் மூலம் தெரிவிக்க வேண்டும்.
◼ புனே நகரில் நவம்பர் 12-14, 2004-ல் நடக்கவிருக்கும் மாவட்ட மாநாட்டில், காது கேளாதோருக்காக சைகை மொழியிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
◼ மதுரையில் டிசம்பர் 24-26, 2004-ல் நடக்கவிருக்கும் மாவட்ட மாநாட்டு மன்ற விலாசம் மாற்றப்பட்டிருப்பதை தயவுசெய்து கவனியுங்கள்: Devasagayam Higher Matriculation School Grounds, Pasumalai, Madurai 625 004.
◼ போர்ட் ப்ளேயரில் நவம்பர் 12-14, 2004-ல் நடக்கவிருக்கும் மாவட்ட மாநாட்டு மன்றத்தின் விலாசம் மாற்றப்பட்டிருப்பதை தயவுசெய்து கவனியுங்கள்: Andaman Tamizhar Sangam, Phoenix Bay, Port Blair.
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் —ஆங்கிலம், நேப்பாளி
உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்? —தமிழ், மலையாளம்
வாழ்க்கையின் நோக்கம் என்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? —குஜராத்தி, பஞ்சாபி
கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருட்கள் (திருத்திய பதிப்பு) —தெலுங்கு, வங்காளி
சுவனத்திற்கு செல்லும் பாதையை கண்டடைவது எப்படி (முஸ்லீம்களுக்காக) —உருது
யெகோவாவின் சாட்சிகள் நம்புவதென்ன? (துண்டுப்பிரதி எண் 14) —அஸ்ஸாமீஸ், ஆங்கிலம், உருது, ஒரியா, கன்னடம், குஜராத்தி, கொங்கணி (கன்னடம் மற்றும் ரோமன் எழுத்துக்களில்), சிந்தி, தமிழ், தெலுங்கு, நேப்பாளி, மணிப்புரி, மராத்தி, மலையாளம், மிசோ, ஹிந்தி