உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 11/04 பக். 3
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—2004
  • இதே தகவல்
  • அடக்கமானவர்களாக இருப்பது ஏன் ரொம்ப முக்கியம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • கஷ்டமாக இருந்தாலும் அடக்கமானவர்களாக இருக்க முடியும்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • நியமிப்பில் மாற்றம் ஏற்படும்போது...
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • “அடக்கம் எங்கோ ஞானம் அங்கே”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2004
km 11/04 பக். 3

கேள்விப் பெட்டி

◼ சபையில் கொடுக்கப்படும் பொறுப்புகளை எப்படி சிரத்தையுடன் செய்ய வேண்டும்?

யெகோவாவின் ஜனங்களுடைய சபைகளில் எல்லாமே சீராகவும் முறையாகவும் நடப்பதற்கு முக்கியக் காரணம் அவர்களது ஒன்றுபட்ட முயற்சிதான். (1 கொ. 14:33, 40) ஒரேவொரு சபைக் கூட்டம் நன்கு நடைபெற என்னவெல்லாம் செய்ய வேண்டியுள்ளது என்பதைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி ஒரு புறமிருக்க, சகோதர சகோதரிகள் கூட்டத்திற்கு முன்பும் பின்பும் ஏராளமான பொறுப்புகளை சரிவர செய்ய வேண்டியுள்ளது. வெளிப்படையாக தெரியாத இன்னும் சில பொறுப்புகளையும் செய்ய வேண்டியுள்ளது. அவையும் முக்கியமானவையே. இந்த ஏற்பாட்டிற்கு நாம் ஒவ்வொருவரும் எப்படி ஒத்துழைக்கலாம்?

உதவி செய்ய தயாராய் இருங்கள். நமக்கு மனமிருந்தால் மற்றவர்களுக்குப் பல வழிகளில் நம்மால் உதவ முடியும். (சங். 110:3) நோயுற்றவர்களுக்கும் முதியவர்களுக்கும் கரிசனை காட்டுங்கள். ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்வதில் ஒத்துழையுங்கள். யாரும் கேட்காமலே எத்தனையோ காரியங்களை நாம் செய்யலாம். உதவும் ஆவல் இருந்தாலே போதும்.

பணிவுடன் செய்யுங்கள். பணிவானவர்கள் மற்றவர்களுக்கு சேவை செய்வதில் சந்தோஷப்படுவார்கள். (லூக். 9:48) பணிவு என்ற பண்பிருந்தால் நம் திறமைக்கு அப்பாற்பட்ட பொறுப்புகளை ஏற்றுச் செய்ய மாட்டோம். அத்துடன், நமக்குரிய அதிகாரத்தின் வரம்பையும் மீறமாட்டோம்.​—⁠நீதி. 11:⁠2.

நம்பகமானவராய் இருங்கள். பண்டைய இஸ்ரவேலில் பொறுப்பான வேலைகளைச் செய்வதற்காக ‘உண்மையுள்ளவர்களை,’ அதாவது நம்பகமான ஆண்களை தெரிந்தெடுக்கும்படி மோசேக்கு அறிவுறுத்தப்பட்டது. (யாத். 18:21) இதே குணம் இன்றும் தேவைப்படுகிறது. உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு பொறுப்பையும் மிகவும் கவனமாக செய்யுங்கள். (லூக். 16:10) உங்களால் ஒரு பொறுப்பை செய்ய முடியாமல் போனால் உங்களுக்குப் பதிலாக வேறு எவராவது அதைச் செய்வதற்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.

உங்களால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்யுங்கள். வெளி உலக வேலையையே மனப்பூர்வமாய்ச் செய்யும்படி நமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (கொலோ. 3:22-24) அப்படியிருக்க, மெய் வணக்கம் செழித்தோங்குவதற்காக செய்யும் வேலைகளை எவ்வளவு மனப்பூர்வமாய்ச் செய்ய வேண்டும்! ஒரு வேலை அற்பமானதாய் அல்லது முக்கியமற்றதாய்த் தோன்றினாலும், அதை நன்றாய்ச் செய்தால் சபைக்குத்தான் நன்மை.

நாம் செய்யும் ஒவ்வொரு வேலையும், யெகோவா மீதும் சகோதரர்கள் மீதும் நமக்கு எந்தளவு அன்பு இருக்கிறது என்பதைக் காட்ட ஒரு வாய்ப்பை அளிக்கிறது. (மத். 22:37-39) எனவே, நமக்குக் கொடுக்கப்படும் எந்தவொரு பொறுப்பையும் சிரத்தையுடன் செய்வோமாக.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்