திருப்தியான வாழ்க்கைக்கு வழி சிற்றேட்டை அளித்தல்
◼ “திருப்தியான வாழ்க்கைக்கு நம்பகமான ஒரு வழிகாட்டு நூல் தேவை என அநேகர் நினைக்கிறார்கள். நீங்களும் அப்படித்தான் நினைப்பீர்கள் இல்லையா? (பதிலளிக்க அனுமதியுங்கள்.) ஆமாம், நம்பகமான வழிகாட்டியாகவும், நீண்ட கால வழிகாட்டியாகவும் உள்ள ஒரு நூல் இருக்கிறது என்பதே சந்தோஷமான செய்தியாகும். அந்த வழிகாட்டு நூலிலிருந்தே ஒரு வசனத்தை உங்களுக்கு வாசித்துக் காட்டுகிறேன். (சங்கீதம் 32:8-ஐ வாசியுங்கள்.) உங்கள் மதம் எதுவாய் இருந்தாலும் சரி, அந்த நூலைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ள உங்களுக்கு விருப்பம் இருக்குமல்லவா?” 3-ஆம் அதிகாரத்தின் தலைப்பை எடுத்துக்காட்டி அந்தச் சிற்றேட்டை அளியுங்கள்.
◼ “இந்தக் காலத்தில், ஜனங்களுக்கு வருகிற வியாதிகளுக்கு பெரும்பாலும் மன அழுத்தமே காரணம் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் அல்லவா? (பதில் சொல்லக் காத்திருங்கள்.) நம்பிக்கையான மனநிலையோடு இருந்தால் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று இங்கு சொல்வதை கவனியுங்களேன். (நீதிமொழிகள் 12:25-ஐ வாசியுங்கள்.) திருப்தியான வாழ்க்கைக்கு மிக அருமையான ஆலோசனைகளை இந்தச் சிற்றேடு அளிக்கிறது.” 2-ஆம் அதிகாரத்திலுள்ள படங்களையும் அவற்றின் குறிப்புகளையும் எடுத்துக் காட்டுங்கள்.
◼ “பரலோகத்திற்குப் போனால்தான் திருப்தியான வாழ்க்கை கிடைக்கும் என்று பெரும்பாலும் மக்கள் நினைக்கிறார்கள். அதே வாழ்க்கை இந்தப் பூமியில் கிடைத்தால் நீங்கள் வேண்டாமென்று சொல்வீர்களா? (பதிலளிக்க அனுமதியுங்கள்.) நித்திய காலமாய் பூமியில் திருப்தியாக வாழ முடியும் என்பதாக பைபிள் உறுதியளிக்கிறது; அந்த வாழ்க்கை நமக்குக் கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டுமென்றும் சொல்கிறது. (ஏசாயா 65:17-ஐயும் யோவான் 17:3-ஐயும் வாசியுங்கள்.) அந்த வாழ்க்கை உங்களுக்குக் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியதை இது விளக்குகிறது.” பக்கம் 31-ல் உள்ள படத்தை விவரியுங்கள்.
◼ “இந்தக் காலத்தில் ரொம்ப சுலபமாக கடன் வாங்க முடிகிறது; இதனால் அநேக குடும்பங்கள் கடனில் மூழ்கிவிடுகின்றன. நீங்களும் இதை ஒத்துக்கொள்வீர்கள்தானே? (பதிலளிக்க அனுமதியுங்கள்.) இந்த ஞானமான ஆலோசனையை கொஞ்சம் கேளுங்களேன். (1 தீமோத்தேயு 6:7-9-ஐ வாசியுங்கள்.) பணத்தை ஞானமாக செலவழிப்பது சம்பந்தமாகவும், பணப் பிரச்சினைகளைத் தீர்ப்பது சம்பந்தமாகவும் கடவுள் தரும் ஆலோசனையை இந்தச் சிற்றேடு விளக்குகிறது.” பக்கம் 6, பாரா 6-ல் உள்ள குறிப்புகளில் சிலவற்றைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.