தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
பிப்ரவரி 28, 2005-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாய்மொழியாக கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது ஜனவரி 3 முதல் பிப்ரவரி 28, 2005 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சுப் பண்புகள்
1. கேட்போருக்கு நன்றாக புரியும்படி நாம் எப்படி பேச்சை கொடுப்பது? [be-TL பக். 226 பாரா 1–பக். 227 பாரா 1]
2. எப்படிப்பட்ட சில வார்த்தைகளுக்கு கூடுதலான விளக்கம் தேவைப்படலாம்? [be-TL பக். 227 பாரா 2–பக். 228 பாரா 1]
3. உண்மையில் தகவல் நிறைந்த பேச்சைக் கொடுக்க என்ன செய்ய வேண்டும்? [be-TL பக். 231 பாரா. 1-3]
4. பழக்கப்பட்ட வசனத்தை வாசிக்கும்போது அதை எப்படி கேட்போருக்கு தகவல் நிறைந்ததாக ஆக்க முடியும்? [be-TL பக். 231 பாரா. 4-5]
5. பழக்கப்பட்ட பைபிள் பதிவிலுள்ள கூடுதல் விவரங்களுக்கு கவனம் செலுத்த கேட்போரை உற்சாகப்படுத்துவதால் வரும் பலன் என்ன? [be-TL பக். 232 பாரா. 2-4]
பேச்சு நியமிப்பு எண் 1
6. “தேவனுக்கு பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்” என்று ஜனங்களுக்கு போதிப்பதில் என்னென்ன விஷயங்கள் உட்பட்டுள்ளன? (பிர. 12:13) [be-TL பக். 272 பாரா. 3-4]
7. யெகோவா என்ற பெயரிடம் மட்டுமன்றி அந்தப் பெயருக்குச் சொந்தமானவரிடமும் நாம் எவ்வாறு கவனத்தை ஒருமுகப்படுத்தலாம்? (யோவே. 2:32) [be-TL பக். 274 பாரா. 2-4]
8. இயேசுவைப் பற்றி அறிவதும் அவரைக் குறித்து சாட்சி கொடுப்பதும் எவ்வளவு முக்கியம்? (யோவா. 17:3) [be-TL பக். 275 பாரா 4]
9. கடவுளோடு உள்ள அங்கீகரிக்கப்பட்ட உறவும், பைபிளை பற்றிய புரிந்துகொள்ளுதலும் இயேசுவுக்கு போற்றுதலை காண்பிப்பதோடு எப்படி நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளன? [be-TL பக். 276 பாரா 1]
10. இயேசு கிறிஸ்துவே அரசரென நாம் உண்மையிலேயே நம்புகிறோம் என்பதை எப்படி காட்டலாம்? [be-TL பக். 277 பாரா 4]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. ஆபிரகாமின் தகப்பனான தேராகு விக்கிரக வணக்கத்தாராக இருந்தாரா? (யோசு. 24:2)
12. யெகோவா கொடுத்த பொறுப்பை நிறைவேற்ற கிதியோனுக்கு தைரியம் இல்லாதிருந்ததா? ஏன் அவ்வாறு பதிலளிக்கிறீர்கள்? (நியா. 6:25-27)
13. எப்பிராயீம் கோத்திரத்தாருடன் கிதியோன் பேசிய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (நியா. 8:1-3)
14. கிபியாவின் மக்கள் உபசரிக்க விரும்பாதது எதைக் காட்டுகிறது? (நியா. 19:14, 15)
15. ‘அவனவன் தன்தன் பார்வைக்கு சரியானபடி செய்து வந்தது,’ அராஜகத்தை முன்னேற்றுவித்ததா? (நியா. 21:25)