அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் பிப்ரவரி: யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தை அளிப்போம். இந்தப் புத்தகம் இல்லாவிட்டால் அதற்குப் பதிலாக படைப்பு அல்லது வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் புத்தகத்தை அளிக்கலாம். மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தை அளியுங்கள்; அந்தப் புத்தகத்தில் பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களையும், சபைக்கு தொடர்ந்து வராமல், நினைவு ஆசரிப்புக்கு அல்லது/மற்றும் வேறு ஏதாவது விசேஷ தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கு வந்து போகும் நபர்களையும் மீண்டும் சந்திக்கையில், கடவுளை வணங்குங்கள் புத்தகத்தை அளிக்க கவனம் செலுத்துங்கள். முக்கியமாக, அறிவு புத்தகத்தையும் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் ஏற்கெனவே படித்திருக்கும் நபர்களுடன் பைபிள் படிப்பை ஆரம்பிப்பதே உங்கள் குறிக்கோளாய் இருக்க வேண்டும்.
◼ நடத்தும் கண்காணியோ அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ மார்ச் 1 அல்லது அதற்குப் பின் சீக்கிரத்தில் சபைக் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். ஏதாவது ரிப்பேர் வேலைக்காக அல்லது கட்டுமான வேலைக்காகத் தனியாக பேங்க் அக்கௌன்ட் இருந்தால் அதையும் தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை(கள்) முடிந்த பிறகு அடுத்த முறை கணக்கு அறிக்கையை வாசிக்கையில் அதை சபைக்கு அறிவிக்க வேண்டும்.
◼ செயலரும் ஊழியக் கண்காணியும் ஒழுங்கான பயனியர்கள் எல்லாருடைய ஊழிய நடவடிக்கையையும் பரிசீலனை செய்ய வேண்டும். தேவைப்படும் மணிநேரத்தை எட்டுவதற்கு யாருக்கேனும் கஷ்டமிருந்தால் அதற்கான உதவி அளிக்க மூப்பர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆலோசனைகளுக்கு S-201-TL வருடாந்தர கடிதங்களைப் பாருங்கள்.
◼ 2005-ல் நினைவு ஆசரிப்புக் காலத்தில் கொடுக்கப்படும் விசேஷ பொதுப் பேச்சின் தலைப்பு: “இயேசு ஏன் பாடுபட்டு மரித்தார்?” இது சம்பந்தப்பட்ட அறிவிப்புக்கு செப்டம்பர் 2004 நம் ராஜ்ய ஊழியத்தைக் காண்க.
◼ பிரஸ்தாபிகளுக்கான ஓர் ஏற்பாட்டைப் பற்றிய விசேஷ அறிவிப்பு மார்ச் 20, ஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டத்தில் செய்யப்படவிருக்கிறது; எனவே அனைவரும் அந்தக் கூட்டத்திற்கு வர வேண்டும்.
◼ தனிப்பட்ட பிரஸ்தாபிகள் கிளை அலுவலகத்திற்கு கேட்டெழுதும் பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்பட மாட்டா. சபை மாதாந்தர பிரசுர ஆர்டரை கிளை அலுவலகத்திற்கு அனுப்புவதற்கு முன் ஒவ்வொரு மாதமும் அதை சபையாருக்கு அறிவிக்க நடத்தும் கண்காணி ஏற்பாடு செய்ய வேண்டும். பிரஸ்தாபிகள் தங்களுக்குத் தேவையான பிரசுரங்களைப் பிரசுர ஊழியரிடம் முன்னதாகவே ஆர்டர் செய்ய இந்த ஏற்பாடு உதவும். விசேஷ ஆர்டரின் பேரில் அனுப்பப்படும் ஐட்டங்கள் எவை என்பதைத் தயவுசெய்து அறிந்திருங்கள்.
◼ நாம் சபை புத்தகப் படிப்பில், மே 23, 2005-ல் துவங்கும் வாரம் முதல் விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டைப் படிப்போம். ஜூன் 27, 2005-ல் துவங்கும் வாரம் முதல் தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! புத்தகத்தைப் படிப்போம்.
◼ மராத்தியில் காவற்கோபுரம், மார்ச் 1, 2005 இதழிலிருந்து மாதம் இருமுறை வெளிவராது; மாதாந்தர பத்திரிகையாக வெளிவரும்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
கடவுளைத் தேடி —தமிழ்
விழிப்புடன் இருங்கள்! —அஸ்ஸாமீஸ், ஆங்கிலம், உருது, கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, நேப்பாளி, பஞ்சாபி, மராத்தி, மலையாளம், மிசோ, வங்காளி, ஹிந்தி
சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி —ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருட்கள் —மராத்தி (திருத்தப்பட்டது)