ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
குறிப்பு: மாவட்ட மாநாடு நடைபெறும் மாதங்களின்போது, ஒவ்வொரு வாரத்திற்குமுரிய ஊழியக் கூட்ட அட்டவணை நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்படும். “கடவுளுக்குக் கீழ்ப்படிதல்” மாவட்ட மாநாட்டுக்குச் செல்வதற்கு வசதியாக தேவையான மாற்றங்களை சபைகள் செய்துகொள்ளலாம். பொருத்தமாயிருந்தால், இந்த மாத உட்சேர்க்கையிலுள்ள, உள்ளூருக்குப் பொருந்துகிற குறிப்பிட்ட ஆலோசனைகளையும் நினைப்பூட்டுதல்களையும் மாநாட்டுக்குச் செல்வதற்கு முந்தின வார ஊழியக் கூட்டத்தில் மறுபடியும் கலந்தாலோசிக்க 15 நிமிடத்தை ஒதுக்குங்கள். மாநாடு முடிந்து ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, பிரஸ்தாபிகள் ஊழியத்தில் பயனுள்ளதாக கண்ட மாநாட்டு சிறப்புக் குறிப்புகளை மறுபார்வை செய்வதற்கு 15 முதல் 20 நிமிடங்களை ஊழியக் கூட்டப் பகுதியில் (ஒருவேளை உள்ளூர் தேவைகள் பகுதியில்) ஒதுக்குங்கள். இந்த விசேஷ ஊழியக் கூட்டப் பகுதி, மாநாட்டில் கற்றுக்கொண்டவற்றை எப்படிப் பயன்படுத்துகிறோம், அது ஊழியத்தை இன்னும் திறம்பட்ட முறையில் செய்ய எப்படி உதவியிருக்கிறது என்பதை சொல்ல நமக்கு வாய்ப்பளிக்கும்.
ஏப்ரல் 11-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளை (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருந்தால்) பயன்படுத்தி, ஏப்ரல் 15 காவற்கோபுரத்தையும் ஏப்ரல் 8 விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். நடைமுறைக்கு உதவும் வேறு பிரசங்கங்கள் இருந்தால் அவற்றையும் பயன்படுத்தலாம். தெரு ஊழியம் செய்வது போல் ஒரு நடிப்பு இருக்கட்டும்.
15 நிமி: “தொடர்ந்து பிரசங்கியுங்கள்.”a நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து கொடுக்கப்பட்டுள்ள வேதவசனங்களின் பேரில் சபையாரைக் குறிப்பு சொல்லச் சொல்லுங்கள்.
20 நிமி: “புதிய சிற்றேட்டின் விசேஷ விநியோகிப்பு.”b ஊழியக் கண்காணி நடத்த வேண்டும். ஆலோசனையாகக் கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்களை நடித்துக் காட்ட செய்யுங்கள். வேத வசனங்களை உபயோகிக்கும்போது வீட்டுக்காரர் துளி ஆர்வத்தையே காட்டுவதால் அவருக்குச் சிற்றேட்டை அளிப்பதற்குப் பதிலாக ஒரு துண்டுப்பிரதியை அளிப்பதுபோல் ஒரு நடிப்பு இருக்கட்டும்.
பாட்டு 219, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 18-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். புதிய சிற்றேட்டின் விசேஷ விநியோகிப்புக்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பற்றி சுருக்கமாகச் சொல்லுங்கள். சபை பிராந்தியத்தில் புதிய சிற்றேட்டை அளிப்பதில் நல்ல பலன்களைத் தந்துள்ள ஒரு பிரசங்கத்தை நடித்துக் காட்ட செய்யுங்கள்.
20 நிமி: “முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்—பகுதி 8.”c யெகோவாவின் சாட்சிகள்—அவர்கள் யார்? அவர்களது நம்பிக்கை என்ன? சிற்றேட்டை புதிதாக பைபிள் படிக்கும் மாணாக்கருக்குப் பிரஸ்தாபி அளிப்பதைச் சுருக்கமாக நடித்துக் காட்ட செய்யுங்கள். பிரஸ்தாபி, சிற்றேட்டில் பக்கம் 20-லுள்ள படத்திடம் கவனத்தைத் திருப்பி, பொதுப் பேச்சைப் பற்றி சுருக்கமாக விளக்குகிறார். அடுத்த வாரப் பொதுப் பேச்சின் தலைப்பைச் சொல்லிவிட்டு அதற்கு மாணாக்கரை வரும்படி அழைக்கிறார்.
15 நிமி: ஊழிய அனுபவங்கள். புதிய சிற்றேட்டின் விசேஷ விநியோகிப்பில் இதுவரை பெற்றுள்ள அனுபவங்களைச் சபையார் சொல்லும்படி கேளுங்கள். அருமையான அனுபவங்களை நிஜ சம்பவ நடிப்புகளாக நடித்துக் காட்ட முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள். சபை கையிருப்பில் சிற்றேடுகள் தீர்ந்துபோகும்போது, சபையாரிடம் அதிகப் பிரதிகள் மீதமிருந்தால் அதை பிரசுர இலாக்காவில் திருப்பித் தருமாறு கேளுங்கள்.
பாட்டு 169, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 25-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் பெற்றுக்கொண்ட நன்கொடைக்கு சொஸைட்டி அனுப்பிய கடிதங்களையும் வாசியுங்கள். ஏப்ரல் மாத வெளி ஊழிய அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளை (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருந்தால்) பயன்படுத்தி, மே 1 காவற்கோபுரத்தையும் மே 8 விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்ட செய்யுங்கள். நடைமுறைக்கு உதவும் வேறு பிரசங்கங்கள் இருந்தால் அவற்றையும் பயன்படுத்தலாம். ஒரு நடிப்பு, ‘எனக்கு அதில் அக்கறையில்லை’ என உரையாடலை நிறுத்த முயலுபவர்களுக்கு எப்படிப் பதிலளிக்கலாம் என்பதைப் போல் இருக்கட்டும். (நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக். 16-ஐக் காண்க.) எந்தக் கட்டுரைகள் பிராந்தியத்தில் உள்ளவர்களின் மனதைக் கவருகின்றன என்பதைக் குறிப்பிடுங்கள்.
30 நிமி: “மகா சபையில் யெகோவாவைத் துதியுங்கள்.”d சபை செயலர் நடத்த வேண்டும். சபை எந்த மாநாட்டில் கலந்துகொள்ளும்படி நியமிக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லுங்கள். எண்கள் கொடுக்கப்பட்டுள்ள பாராக்களை காவற்கோபுர படிப்பைப் போல கலந்தாலோசியுங்கள். ஒருவரை நியமித்து பாராக்களை வாசிக்கச் சொல்லுங்கள். “மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்” என்ற பெட்டியைக் கலந்தாலோசியுங்கள்.
பாட்டு 8, முடிவு ஜெபம்.
மே 2-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். “விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டைப் படித்தல்” என்ற தலைப்பில் பக்கம் 6-லுள்ள கட்டுரையைச் சுருக்கமாகக் கலந்தாலோசியுங்கள். சிற்றேட்டை கலந்தாலோசிப்பதற்கான அட்டவணை இந்தக் கட்டுரையில் உள்ளது என்பதைச் சொல்லுங்கள். மே 23-ல் துவங்கும் வாரத்திலிருந்து நடைபெறும் இப்படிப்பில் ஒவ்வொரு வாரமும் நன்கு தயாரித்து வந்து, பங்கு கொள்ளுமாறு எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: புதிய சிற்றேட்டைப் பயன்படுத்தி ஆர்வத்தை வளருங்கள். ஊழியக் கண்காணியின் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டில் உள்ள பல்வேறு பெட்டிகளைச் சிறப்பித்துக் காட்டுங்கள், மறுசந்திப்புகள் செய்கையில் அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை விளக்குங்கள். எந்தப் பெட்டிகளிலுள்ள தகவல் சபை பிராந்தியத்தில் உள்ளவர்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்துமென நினைக்கிறார்கள் என சபையாரிடம் கேளுங்கள். அதிலுள்ள ஒரு பெட்டியை உபயோகித்து மறுசந்திப்பு செய்வதுபோல் நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். அதன் முடிவில், பிரஸ்தாபி மற்றொரு பெட்டியை வீட்டுக்காரரிடம் சுட்டிக்காட்டி அதை அடுத்த வாரம் கலந்தாலோசிப்பதாகச் சொல்ல சொல்லுங்கள். இனி வரும் ஓர் ஊழியக் கூட்டத்தில் அந்த மறுசந்திப்பைப் பற்றிய நடிப்பு இடம்பெறும்.
15 நிமி: “நன்மை செய்யுங்கள், பகிர்ந்து வாழுங்கள்.”e நடைமுறையான விதத்தில் மற்றவர்களுக்கு நாம் எப்படி உதவலாம் என்பதை குறிப்பிட்டு, இக்கட்டுரையைச் சபைக்குப் பொருத்திக் காட்டுங்கள்.
பாட்டு 47, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
e ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.