உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/05 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2005
நம் ராஜ்ய ஊழியம்—2005
km 5/05 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் ஏப்ரல் 18-மே 15: விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டின் விசேஷ வினியோகிப்பு. மே 16-31: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். சபைக்குத் தொடர்ந்து வராமல், நினைவு ஆசரிப்புக்கு அல்லது/மற்றும் வேறு ஏதாவது விசேஷ தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வந்து போகிற நபர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் மீண்டும் சந்திக்கையில், கடவுளை வணங்குங்கள் புத்தகத்தை அளிக்க கவனம் செலுத்துங்கள். முக்கியமாக, அறிவு புத்தகத்தையும் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் ஏற்கெனவே படித்திருக்கும் நபர்களுடன் பைபிள் படிப்பை ஆரம்பிப்பதே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். ஜூன்: பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளியுங்கள். தங்களுக்கு குழந்தைகள் இல்லை என்று வீட்டுக்காரர்கள் சொன்னால் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளியுங்கள். பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்).

◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் ஜூன் 1 அல்லது அதற்குப் பிறகு கூடுமானவரை சீக்கிரத்திலேயே சபையின் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். பராமரிப்பு, கட்டுமானம் போன்ற பணிகளுக்காகத் தனி அக்கௌண்ட் இருந்தால் அவற்றையும் தணிக்கை செய்ய வேண்டும். அடுத்த முறை சபையில் கணக்கு அறிக்கை வாசிக்கப்படும்போது, எல்லா அக்கௌண்ட்டுகளும் தணிக்கை செய்யப்பட்டுவிட்டதையும் சபையாருக்கு அறிவிக்க வேண்டும்.

◼ ஜூன் 27-⁠ல் துவங்கும் வாரம் முதல், அஸ்ஸாமீஸ், மராத்தி மொழி பேசும் சபையார் தங்கள் சபை புத்தகப் படிப்பில் ஹிந்தி மொழியிலுள்ள தானியேல் தீர்க்கதரிசனம் புத்தகத்தைப் பயன்படுத்துவார்கள். வங்காளி, மிசோ/லூஷாய், தெலுங்கு மொழி பேசும் சபையைச் சேர்ந்தவர்களோ கடவுளை வணங்குங்கள் புத்தகத்தைப் பயன்படுத்துவார்கள்.

◼ காங்டாக்கில் (நேப்பாளி) நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த, “கடவுளுக்குக் கீழ்ப்படிதல்” மாவட்ட மாநாட்டுக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. அம்மாநாடு ஆகஸ்ட் 12-14, 2005-⁠ல் நடைபெறும்.

◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:

யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் ​—⁠பெரிய அச்சு, ஆங்கிலத்தில்

இது விசேஷ ஆர்டரின் பேரில் அனுப்பி வைக்கப்படும் பிரசுரமாகும். இது பார்வை மங்கியவர்களுக்கும் சிறிய எழுத்துக்களை வாசிக்க முடியாதவர்களுக்கும் மட்டுமே என்பதைத் தயவுசெய்து மனதில் வையுங்கள். எனவே அத்தகைய நிலையிலுள்ள பிரஸ்தாபிகள் பிரத்தியேகமாகக் கேட்டால் மட்டுமே இதை ஆர்டர் செய்ய வேண்டும். சொஸைட்டிக்கு அனுப்பி வைக்குமுன், உண்மையில் தேவையா என்பதை ஊழியக் குழு உறுதிப்படுத்திக் கொண்டு, பின்னர் லிட்ரெச்சர் ரிக்வெஸ்ட் படிவத்தில் அதை எழுதி அனுப்பி வைக்க வேண்டும்.

◼ கிடைக்கும் புதிய ஆடியோ காம்பேக்ட் டிஸ்குகள்:

கண்களை தெளிவாக வைத்திருங்கள் ​—⁠கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி

குடும்பங்களே​—⁠அன்றாட பைபிள் வாசிப்பை உங்கள் வாழ்க்கை முறை ஆக்குங்கள்! ​—⁠கன்னடம், தமிழ், மலையாளம், ஹிந்தி

யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் (MP3 ஃபார்மட்) ​—⁠ஆங்கிலம்

பதினான்கு பைபிள் நாடகங்கள் (மூன்று CD-⁠க்கள், MP3 ஃபார்மட்) ​—⁠ஆங்கிலம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்