நடைமுறையான குடும்ப அட்டவணை போடுங்கள்
1 மலைப் பிரசங்கத்தில் தாம் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தோரிடம் ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்’ என இயேசு ஊக்குவித்தார். (மத். 6:33) ஓர் அட்டவணையை எழுதி வைப்பதே குடும்பத்தில் ஆன்மீக விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்க திட்டமிடுவதற்கான நடைமுறை வழியாகும். இந்த உட்சேர்க்கையில், 6-ம் பக்கத்திலுள்ள அட்டவணையைப் பயன்படுத்தி உங்கள் குடும்பத்திற்கான வாராந்தர அட்டவணையைப் போடுவதற்கு சில நிமிடங்களை ஒதுக்குங்கள். குடும்பமாகச் சேர்ந்து அட்டவணை போடும்போது, சிலர் 6-ம் பக்கத்திலுள்ள பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ளவற்றை வெட்டி அட்டவணையில் ஒட்ட விரும்பலாம். வேறு சிலர் அவற்றை அட்டவணையில் கைப்பட எழுத விரும்பலாம்.
2 நீங்கள் அட்டவணை போடுவதற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி அட்டவணை பயனுள்ளதாக இருக்கலாம். அதில் பின்வரும் நான்கு அடிப்படை காரியங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்: (1) சபை கூட்டங்களில் கலந்துகொள்வது, (2) குடும்பமாக வெளி ஊழியத்திற்குச் செல்வது, (3) குடும்பப் படிப்பு, (4) தினவசனத்தைக் கலந்தாலோசிப்பது. இவற்றை உங்கள் அட்டவணையில் சேர்த்துக்கொள்வது, “அதிமுக்கியமானவற்றை நிச்சயப்படுத்திக்கொள்ள” உங்களுக்கு உதவலாம். (பிலி. 1:10, NW) இந்த நான்கு அம்சங்களின் பேரில் மேலுமான ஆலோசனைகள் பக்கங்கள் 4-5-ல் காணப்படுகின்றன.
3 உங்கள் குடும்ப அட்டவணையில் இந்த நான்கு காரியங்களுக்கு மட்டுமே இடமளிக்க வேண்டுமென்று இல்லை. சபை கூட்டங்கள் சிலவற்றிற்குக் குடும்பமாகச் சேர்ந்து தயாரிப்பதாக இருந்தால் அதையும் அட்டவணையில் குறித்து வைக்கலாம். தினவசனத்தைக் கலந்தாலோசித்த பின்போ மற்றொரு சமயத்திலோ எல்லாருமாகச் சேர்ந்து பைபிளிலிருந்து ஒரு பகுதியை வாசிப்பதாக இருந்தால் அதையும் குறித்து வைக்கலாம். பொழுதுபோக்கிற்காகக் குடும்பமாகச் சேர்ந்து நேரம் செலவிடுவது பழக்கமாக இருந்தால் அதையும் உங்கள் அட்டவணையில் குறித்து வைக்கலாம்.
4 குடும்பத்திலுள்ள அனைவருடைய சூழ்நிலைகளையும், தேவைகளையும் மனதில் வைத்து, எல்லாருக்கும் வசதிப்படும் விதத்தில் உங்கள் குடும்ப அட்டவணையைப் போடுங்கள். அது எந்தளவுக்குப் பயனுள்ளதாய் இருக்கிறதென அவ்வப்போது ஆராய்ந்து பாருங்கள், தேவைப்படும்போது மாற்றங்களைச் செய்யுங்கள்.
[பக்கம் 3-ன் படம்]
மாதிரி குடும்ப அட்டவணை
காலை மதியம் மாலை
ஞாயிறு தினவசனம்
பொதுப் பேச்சும்
காவற்கோபுர படிப்பும்
திங்கள் தினவசனம் குடும்பப் படிப்பு
செவ்வாய் தினவசனம் சபை
புத்தகப் படிப்பு
புதன் தினவசனம்
வியாழன் தினவசனம் தேவராஜ்ய
ஊழியப் பள்ளியும்
ஊழியக் கூட்டமும்
வெள்ளி தினவசனம்
சனி தினவசனம்
குடும்பமாக
வெளி ஊழியம்
(பத்திரிகை தினம்)
[பக்கம் 6-ன் படம்]
குடும்ப அட்டவணை
காலை மதியம் மாலை
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
..................................................................
தினவசனம் தினவசனம் தினவசனம் தினவசனம் தினவசனம் தினவசனம் தினவசனம்
பொதுப் தேவராஜ்ய சபை குடும்பப் குடும்பமாக குடும்ப குடும்ப
பேச்சும் ஊழியப் புத்தகப் படிப்பு வெளி பைபிள் பொழுதுபோக்கு
காவற்கோபுர பள்ளியும் படிப்பு ஊழியம் வாசிப்பு
படிப்பும் ஊழியக்
கூட்டமும்