ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஜூலை 10-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். பக்கம் 4-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ, உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாயுள்ள வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ ஜூலை 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும், ஜூலை மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். ‘இங்கே நாங்கள் ஏற்கெனவே கிறிஸ்தவர்கள்’ என்று சொல்லி, உரையாடலை நிறுத்த முயலுகிறவர்களுக்கு எவ்வாறு பதில் அளிக்கலாம் என்பதைக் காட்டுவதுபோல் ஒரு நடிப்பு இருக்கட்டும்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக். 19-ஐக் காண்க.
15 நிமி:எவ்வாறு சபை ஒழுங்கமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் என்ற புத்தகத்தில் அதிகாரம் 4-லிருந்து பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும்.
20 நிமி:“யெகோவாவின் நிகரற்ற பண்புகளைப் போற்ற உதவுங்கள்.”a பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் முதல் அதிகாரத்தின் கடைசியில் காணப்படும் மறுபார்வை பெட்டியிலுள்ள குறிப்புகளை ஆழ்ந்து சிந்திக்க பைபிள் மாணாக்கருக்கு உதவுவதற்குக் கேள்விகளைப் பயன்படுத்தும் விதத்தைக் காட்டுகிற ஒரு நடிப்பையும் ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 88, முடிவு ஜெபம்.
ஜூலை 17-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். ஆகஸ்ட் 15, 2000 தேதியிட்ட காவற்கோபுரத்தில், பக்கம் 32-லுள்ள விஷயத்தைச் சுருக்கமாகச் சிந்தியுங்கள். விடுமுறைக்காக வேறு இடங்களுக்குச் சென்றிருக்கும் சமயத்திலும்சரி, தவறாமல் நாம் செய்துவரும் வேலையிலிருந்து ஓய்ந்திருக்கும் சமயத்திலும்சரி, தினமும் பைபிள் படிக்கிற பழக்கத்தால் வரும் நன்மைகளைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.
15 நிமி:மனத்தாழ்மையும் அன்பும்—ஊழியத்திற்குத் தகுதியுள்ளவர்களாக ஆக்கும் முக்கிய குணங்கள். ஆகஸ்ட் 15, 2002 தேதியிட்ட காவற்கோபுரத்தில் 18-20 பக்கங்களில், 13-20 பாராக்களில் காணப்படும் தகவலின் அடிப்படையில் பேச்சு.
20 நிமி:“‘நித்தியானந்த தேவனாகிய’ யெகோவாவைப் பின்பற்றுங்கள்.”b தங்களது பிராந்தியத்தில் சந்தோஷமான, நம்பிக்கையான மனநிலையுடன் பிரசங்கிப்பதற்கு எது உதவுகிறது என்பதைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 189, முடிவு ஜெபம்.
ஜூலை 24-ல் துவங்கும் வாரம்
15 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடையைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். பக்கம் 4-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ, உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாயுள்ள வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ ஆகஸ்ட் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தையும், ஆகஸ்ட் மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். ஒவ்வொரு நடிப்புக்கும் பின்பு வீட்டுக்காரரின் ஆர்வத்தைத் தூண்டிய அந்த ஓரிரு ஆரம்ப வாக்கியங்களை மீண்டும் குறிப்பிடுங்கள்.
10 நிமி:“உண்மைத்தன்மைக்கு அவர்கள் முன்மாதிரி.” பேச்சும் பேட்டிகளும். விசேஷ பயனியர்களைப் பற்றி நம் பிரசுரங்களில் வெளிவந்த அனுபவங்களில் சிலவற்றைச் சொல்லுங்கள்; அல்லது உங்கள் சபையில் விசேஷ பயனியர்கள் இருந்தார்களெனில் அவர்களைப் பேட்டி காணுங்கள்.—ஆங்கிலத்திலுள்ள உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ்-ல், “விசேஷ பயனியர்கள்” என்ற தலைப்பின் கீழுள்ள பிரசுரங்களைக் காண்க.
20 நிமி:உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும் இருங்கள். (1 கொ. 15:58) பல ஆண்டுகளாக உண்மையுடன் சேவை செய்து வந்திருக்கும் பயனியர்கள் அல்லது பிரஸ்தாபிகளில் இரண்டு, மூன்று பேரைப் பேட்டி காணுங்கள். அவர்கள் எப்படி சத்தியத்திற்கு வந்தனர்? அவர்கள் பிரசங்கிக்க ஆரம்பித்த காலத்தில் பிரசங்க வேலை எப்படி நடைபெற்றது? அவர்கள் என்னென்ன கஷ்டங்களை எதிர்ப்பட்டனர்? மெய் வணக்கத்தில் உறுதியுடன் நிலைத்திருப்பதால் என்னென்ன ஆசீர்வாதங்களை அவர்கள் அனுபவித்திருக்கின்றனர்?
பாட்டு 12, முடிவு ஜெபம்.
ஜூலை 31-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். ஜூலை மாத ஊழிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைவுபடுத்துங்கள். ஆகஸ்ட் மாத பிரசுர அளிப்பைக் குறிப்பிடுங்கள்.
15 நிமி:சபை தேவைகள்.
20 நிமி:“சிறந்த ஆன்மீகப் பழக்கங்களை வளர்த்துக்கொள்ளுங்கள், அநேக ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்.”c சிறந்த ஆன்மீகப் பழக்கங்களை வளர்த்துக்கொண்டு, அவற்றைக் கடைப்பிடித்து வருவதற்குத் தாங்கள் எடுத்திருக்கும் முயற்சிகளையும், அதனால் கிடைத்த ஆசீர்வாதங்களையும் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 130, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 7-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மாதிரி பிரசங்கங்களை, சபை பிராந்தியத்திற்கு ஏற்ப எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்பதைச் சுருக்கமாகச் சிந்தியுங்கள்.—நம் ராஜ்ய ஊழியம், ஜனவரி 2005, பக். 8-ஐக் காண்க.
15 நிமி:அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவும் கூட்டங்கள். மார்ச் 15, 2002 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கங்கள் 24-5-ல் காணப்படும் தகவலின் அடிப்படையில் பேச்சு. ஒரு பிரஸ்தாபியைச் சுருக்கமாகப் பேட்டி காணுங்கள்; கூட்டங்களுக்குத் தவறாமல் வருவதற்கு என்னென்ன முயற்சி செய்திருக்கிறார் என்பதையும், அதனால் அவர் என்னென்ன நன்மைகளைப் பெற்றிருக்கிறார் என்பதையும் அவர் சிறப்பித்துக் காட்டட்டும்.
20 நிமி:ஊழியத்தில் முன்னேறுகிறவர்களாயும் வளைந்துகொடுக்கிறவர்களாயும் இருங்கள். டிசம்பர் 1, 2005 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கங்கள் 28-30-ல் காணப்படும் தகவலின் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். பாராக்கள் 6-11-ல் உள்ள தகவலை அடிப்படையாகக் கொண்டு உங்கள் பேச்சைக் கொடுங்கள்; பிரசங்கிப்பதிலும் போதிப்பதிலும் பவுல் கவனமுள்ளவராக, வளைந்துகொடுப்பவராக, சாமர்த்தியசாலியாக இருந்த விதத்தை அதில் சிறப்பித்துக் காட்டுங்கள். பிறகு 12-14 பாராக்களுக்கான கேள்விகளைக் கலந்தாலோசிக்கையில், பிராந்தியத்திற்குப் பொருந்துகிற விஷயத்தின்பேரில் குறிப்புகளைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். தங்கள் பிராந்தியத்திலுள்ளவர்களின் தேவைகள், சூழ்நிலைகள், கலாச்சாரப் பின்னணிகள் ஆகியவற்றுக்கேற்ப பிரஸ்தாபிகள் தங்கள் அணுகுமுறையை எவ்வாறு மாற்றிக்கொள்ளலாம் என்பதைக் காட்டுகிற ஒரு நடிப்பிற்கும் ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 83, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.