ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஜனவரி 8-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஜனவரி 22-ல் துவங்கும் வாரத்தில் ஊழியக் கூட்டத்தில் கலந்தாலோசிப்பதற்கு வசதியாக இரத்தமின்றி சிகிச்சை—மருத்துவம் இந்தச் சவாலை சந்திக்கிறது என்ற ஆங்கில வீடியோவை பார்த்து வரும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். பக்கம் 4-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ, ஜனவரி 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் ஜனவரி மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். ஒரு நடிப்பில், ‘நான் மிகவும் வேலையாயிருக்கிறேன்’ என்று சொல்லி உரையாடலை நிறுத்துபவர்களுக்கு எவ்வாறு பதிலளிக்கலாம் என்பதைக் காட்டுங்கள்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 19-20-ஐக் காண்க.
15 நிமி: தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் புத்தகத்திலிருந்து பயனடையுங்கள். தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல்—2007-ன் முகவுரையிலிருந்து பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். ஒவ்வொரு நாளும் தினவசனத்தையும் குறிப்புகளையும் சிந்திப்பதற்கு எல்லாருமே சில நிமிடங்களை ஒதுக்க வேண்டியதன் அவசியத்தைக் கலந்தாலோசியுங்கள். தினவசனத்தை வழக்கமாக சிந்திக்கும் விதத்தைப் பற்றியும் அதனால் அடைந்த நன்மைகளைப் பற்றியும் குறிப்புகள் சொல்லுவதற்கு ஓரிரு பிரஸ்தாபிகளை முன்னதாகவே ஏற்பாடு செய்யுங்கள். 2007-ம் ஆண்டிற்கான வருடாந்தர வசனத்தைச் சுருக்கமாகக் கலந்தாலோசித்து நிறைவு செய்யுங்கள்.
20 நிமி: நற்செய்தியை அனைவருக்கும் அறிவியுங்கள். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் என்ற புத்தகத்தில் பக்கம் 92-லிருந்து பக்கம் 102-ல் உள்ள உபதலைப்பு வரையுள்ள விஷயங்களைப் பற்றிய பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும்.
பாட்டு 165, முடிவு ஜெபம்.
ஜனவரி 15-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
15 நிமி: உங்களை ஏதாவது தடுத்து நிறுத்துகிறதா? ஏப்ரல் 1, 2002 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 13-15-ன் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சு.
20 நிமி: “எனக்கு அதில் அக்கறையில்லை.” a பாரா 4-ஐ கலந்தாலோசிக்கையில், உள்ளூர் பிராந்தியத்தில் வசிக்கும் மக்கள் என்னென்ன விஷயங்களில் அக்கறைக் காட்டுகிறார்கள் என்பதைத் தெரிவிக்கும்படி சபையாரிடம் கேளுங்கள். உரையாடலை நிறுத்தும் நோக்கத்துடன், “எனக்கு அதில் அக்கறையில்லை” என்பவர்களிடம் எவ்வாறு பதிலளிக்கலாம் என்பதைக் காட்டுகிற இரண்டு சுருக்கமான நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கம் 16-ஐக் காண்க.
பாட்டு 135, முடிவு ஜெபம்.
ஜனவரி 22-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைப் பெற்றுக் கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். பக்கம் 4-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ பிப்ரவரி 1 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் பிப்ரவரி மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்ட சொல்லுங்கள். ஒரு நடிப்பில், பத்திரிகை மார்க்கத்தில் உள்ள ஒருவரை மறுசந்திப்பு செய்வதாகக் காட்டுங்கள்.
10 நிமி: சபை தேவைகள்.
25 நிமி: “மிகச் சிறந்த சிகிச்சை—அது என்ன?” மூப்பர் கையாளும் பகுதி. கட்டுரையில் கொடுக்கப்பட்ட கேள்விகளைப் பயன்படுத்தி இரத்தமின்றி சிகிச்சை வீடியோவைப் பற்றிய கலந்துரையாடலை நேரடியாக துவக்குங்கள். நிறைவாக, கடைசி பாராவை வாசியுங்கள்; குறிப்பிடப்பட்ட காவற்கோபுர கட்டுரைகளை கவனமாக மறுபார்வை செய்யும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 188, முடிவு ஜெபம்.
ஜனவரி 29-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஜனவரி மாத ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைவுபடுத்துங்கள். பிப்ரவரி மாத பிரசுர அளிப்பைக் குறிப்பிட்டு, அதை அளிக்கிற ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: “இயற்கை பேரழிவைச் சமாளிக்க நீங்கள் தயாரா?” b மூப்பர் கையாள வேண்டும். நவம்பர் 2005 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 3-ல் உள்ள குறிப்புகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
15 நிமி: மறுபடியும் சந்திப்பதாக சொன்ன வாக்கைக் காப்பாற்றுங்கள். செப்டம்பர் 15, 1999, காவற்கோபுரத்தில் பக்கம் 11-ன் அடிப்படையில் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். மறுசந்திப்புக்குச் சொன்னபடியே சென்றதால் எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டார்கள் என்பதைக் குறித்த அனுபவங்களைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 137, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 5-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: நீங்கள் யார் என்பதைத் தெரிவியுங்கள். பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். சில இளைஞர்கள் தங்களுடைய சகாக்கள் கேலி செய்வார்களோ என்ற பயத்தில் தங்களை யெகோவாவின் சாட்சிகளாக அடையாளம் காட்ட தயங்குகிறார்கள். இருந்தபோதிலும், நீங்கள் யார் என்பதை தெரிவிப்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. உங்களுடைய நம்பிக்கைகளை அறிந்திருக்கிற ஆசிரியர்கள் அவற்றிற்கு மதிப்பு கொடுப்பதோடு, கிறிஸ்தவருக்கு தகுதியற்ற ஏதோவொன்றில் கலந்துகொள்ளும்படி உங்களை வற்புறுத்தாமலும் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒழுக்கமற்ற இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து மோசமான நடத்தையில் ஈடுபடும்படி உங்களை அழைப்பதற்கு தயங்குவார்கள். டேட்டிங் செய்வது, ஸ்கூல் விளையாட்டுக்களில் கலந்து கொள்வது, பாடத்திட்டம் சாராத நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் உங்களுடைய தீர்மானங்களை மற்றவர்கள் எளிதாக புரிந்துகொள்வார்கள். பள்ளியில் சாட்சி கொடுப்பதற்கோ சக மாணவரை ஊழியத்தில் சந்திப்பதற்கோ ரொம்பவும் பயந்துவிடாமல் இருக்க உதவுகிறது. (g-TL02 4/8 பக்கம் 12) ஸ்கூலில் யெகோவாவின் சாட்சிகளாக தங்களை அடையாளங் காட்டியதால், பயனடைந்த பிரஸ்தாபிகளைக் குறிப்பு சொல்ல சொல்லுங்கள். ஓரிரு குறிப்புகள் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்படலாம்.
20 நிமி: “அன்பு—பலன்தருகிற ஊழியத்தின் திறவுகோல்.” c காவற்கோபுரம், பிப்ரவரி 1, 2003, பக்கம் 23 பாராக்கள் 16-17-லுள்ள குறிப்புகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பாட்டு 83, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.