உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/07 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2007
நம் ராஜ்ய ஊழியம்—2007
km 9/07 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் செப்டம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். முடிந்தவரை முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். வீட்டுக்காரரிடம் இந்தப் புத்தகம் ஏற்கெனவே இருந்தால், அதிலிருந்து எப்படிப் பயன் அடையலாம் என்பதை ஒரு சுருக்கமான பைபிள் படிப்பை நடத்துவதன் மூலம் காட்டுங்கள். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளியுங்கள். ஆர்வம் காட்டுகிறவர்களிடம், பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியை அளித்து, பைபிள் படிப்பு ஆரம்பிக்கும் நோக்கோடு அதிலிருந்து கலந்தாலோசியுங்கள். நவம்பர்: பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளியுங்கள். வீட்டுக்காரர் தனக்குப் பிள்ளைகள் இல்லையென்று சொன்னால், விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டை அளியுங்கள். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். இதற்குப் பதிலாக, யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தையோ குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தையோ அளிக்கலாம்.

◼ செப்டம்பர் மாதத்தில் ஐந்து வாரயிறுதி நாட்கள் இருப்பதால் துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்கு இது மிகச் சிறந்த மாதமாகும்.

◼ சபைகள் அடுத்தமுறை பிரசுரங்களை ஆர்டர் செய்யும்போது, ஆங்கிலத்தில் உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன் இன்டெக்ஸ் 2006, சிடி-ரோமில் உவாட்ச்டவர் லைப்ரரி​—⁠2007 ஆகியவற்றையும் ஆர்டர் செய்யலாம். உவாட்ச்டவர் லைப்ரரி​—⁠2007, முழுக்காட்டுதல் பெற்ற பிரஸ்தாபிகளுக்காக தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், சபை மூலமாகத்தான் இதைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் தயவுசெய்து ஞாபகம் வையுங்கள்.

◼ 2008-ஆம் ஆண்டின் நினைவுநாள் ஆசரிப்புக் காலத்திற்குரிய சிறப்புப் பொதுப் பேச்சு, மார்ச் 31-⁠ல் துவங்கும் வாரத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று கொடுக்கப்படும். அந்தப் பேச்சின் தலைப்பு பின்னர் அறிவிக்கப்படும். சபைகளில் வட்டாரக் கண்காணியின் சந்திப்போ மாநாடோ அந்த வாரக் கடைசியில் இருந்தால், அதற்கு மறுவாரத்தில் அந்தச் சிறப்புப் பேச்சு கொடுக்கப்படும். மார்ச் 31-⁠ல் துவங்கும் வாரத்திற்கு முன் எந்தச் சபையிலும் இந்தச் சிறப்புப் பேச்சு கொடுக்கப்படக் கூடாது.

◼ ஜனவரி 2008 முதற்கொண்டு, விழித்தெழு! பத்திரிகை தெலுங்கு, நேப்பாளி, மராத்தி, வங்காளி ஆகிய மொழிகளில் பிரசுரிக்கப்படாது. கன்னடம், குஜராத்தி, தமிழ், பஞ்சாபி, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அது காலாண்டு பத்திரிகையாக பிரசுரிக்கப்படும்.

◼ நடத்தும் கண்காணியோ அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான சபைக் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை முடிந்த பிறகு அடுத்த முறை கணக்கு அறிக்கை வாசிக்கப்பட்டபின் சபைக்கு அதை அறிவிக்க வேண்டும்.​—⁠சபை கணக்குகளுக்கான அறிவுரைகள் (S-27-TL) என்பதைக் காண்க.

◼ டிரஸ்ட்டுகளை வைத்திருக்கும் சபைகள், குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக அவற்றின் வருடாந்தர பொதுக் கூட்டங்களை (AGM) நடத்தும்படி நினைவூட்டப்படுகின்றன. இக்கூட்டங்களிலும், பிற டிரஸ்ட் கூட்டங்களிலும் பேசப்படுகிற விஷயங்களை முறையாகக் குறிப்பெடுத்து அவற்றைக் குறிப்பேட்டில் எழுதிவைக்க வேண்டும். டிரஸ்ட்டின் கணக்குகள் சார்ட்டர்டு அக்கௌண்ட்டன்ட்டாக இருப்பவரால் தணிக்கை செய்யப்பட வேண்டும். தணிக்கை செய்யப்பட்ட டிரஸ்ட் கணக்குகளின் ஒரு நகல் கிளை அலுவலகத்துக்கு அனுப்பப்பட வேண்டும். 2006-2007-⁠ன் நிதி ஆண்டில், செலவினத்திற்கு முன்பாக, டிரஸ்டுக்குக் கிடைத்த மொத்த வருமானத்தின் மதிப்பு ரூபாய் 1,00,000-⁠க்கும் அதிகமாய் இருந்தால், வருமான வரி இலாகாவுக்கு சொத்து அறிக்கையை சமர்ப்பிப்பது அவசியம். 1961 வருமான வரி சட்டத்தில், 12ஏ பிரிவின்கீழ் சொத்து பதிவுசெய்யப்பட்டிருப்பதை தயவுசெய்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். வருமான வரி அறிக்கையை சமர்ப்பிப்பதிலும் 12ஏ பிரிவின்கீழ் சொத்தைப் பதிவுசெய்வதிலும் சார்ட்டர்டு அக்கௌண்ட்டன்ட்டு உங்களுக்கு உதவுவார்.

◼ கிடைக்கிற புதிய பிரசுரங்கள்:

யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் (29 பாட்டுகள்) ​—⁠குஜராத்தி

பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? (துண்டுப்பிரதி எண் 26) ​—⁠கொங்கனி (தேவநாகரி)

◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:

பெரிய போதகரிடம் கற்றுக்கொள் ​—⁠தமிழ்

குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் ​—⁠கன்னடம், நேப்பாளி, பஞ்சாபி, மலையாளம், ஹிந்தி

இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் பதில்கள் ​—⁠ஆங்கிலம், தமிழ், நேப்பாளி, ஹிந்தி

பேசுவதிலும் போதிப்பதிலும் திறமையை வளர்த்துக்கொள்வது எப்படி ​—⁠நேப்பாளி

‘புறப்பட்டுப்போய், அவர்களை சீஷராக்கி முழுக்காட்டுதல் கொடுங்கள்’ ​—⁠வங்காளி

யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் (29 பாட்டுகள்) ​—⁠நேப்பாளி

துன்பத்துக்கெல்லாம் முடிவு விரைவில்! (துண்டுப்பிரதி எண் 75) ​—⁠அசாமீஸ், ஆங்கிலம், கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி, மலையாளம், ஹிந்தி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்