உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/07 பக். 3
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—2007
  • இதே தகவல்
  • “ஏற்ற வேளையில்” உங்களுக்கு உணவு கிடைக்கிறதா?
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • பகுதி 2-க்கான வீடியோக்களும் கட்டுரைகளும்
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • பகுதி 1-க்கான வீடியோக்களும் கட்டுரைகளும்
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • இன்டர்நெட்—ஜாக்கிரதை!
    நம் ராஜ்ய ஊழியம்—1999
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2007
km 9/07 பக். 3

கேள்விப் பெட்டி

◼ யெகோவாவின் சாட்சிகள் தனித் தொகுதியாய் ஒன்றுகூடி பைபிள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதையோ விவாதிப்பதையோ “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் அங்கீகரிக்கிறார்களா?​—⁠மத். 24:45, 47, NW.

இதை அவர்கள் அங்கீகரிப்பதில்லை. இருப்பினும், உலகின் பல்வேறு பகுதிகளில், தனிப்பட்ட விதத்தில் பைபிள் விஷயங்களை ஆராய்ச்சி செய்வதற்கு நம்முடைய அமைப்பைச் சேர்ந்த சிலர் குழுக்களை உருவாக்கியிருக்கிறார்கள். புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிள் எந்தளவு திருத்தமாக இருக்கிறது என்பதைக் கண்டறிவதற்கு, பைபிளை எழுதப் பயன்படுத்தப்பட்ட எபிரெயு, கிரேக்கு மொழிகளை தனித் தொகுதியாய் இருந்து ஆராய்ச்சி செய்வதில் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர், பைபிள் சார்ந்த அறிவியல் ரீதியான விஷயங்களை ஆராய்வதில் ஈடுபட்டிருக்கிறார்கள். தங்கள் கருத்துகளையும் விவாதங்களையும் பரிமாறிக்கொள்ள வெப் சைட்டுகளையும் சாட் ரூம்களையும் உருவாக்கியிருக்கிறார்கள், கருத்தரங்குகளை நடத்துகிறார்கள்; அதோடு, தாங்கள் கண்டுபிடித்ததை விளக்குவதற்காகவும், கூட்டங்களிலும் நம்முடைய பிரசுரங்களிலும் கொடுக்கப்படுகிற தகவல்களுடன் கூடுதலான தகவல்களை அளிப்பதற்காகவும் கருத்தரங்குகளை நடத்தியிருக்கிறார்கள், பிரசுரங்களையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

உலகெங்குமுள்ள யெகோவாவின் ஜனங்கள், சபை கூட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றிலிருந்தும் யெகோவாவின் அமைப்பு வெளியிடுகிற பிரசுரங்களிலிருந்தும் ஏராளமான ஆன்மீக போதனையைப் பெற்றுக்கொள்கிறார்கள். தம்முடைய ஜனங்கள் எல்லாரும், “ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும்,” ‘விசுவாசத்தில் உறுதியாக’ நிலைத்திருக்கவும் தம்முடைய பரிசுத்த ஆவியின் உதவியோடு, தம்முடைய சத்திய வார்த்தையின் அடிப்படையில் யெகோவா தேவையானவற்றை அளிக்கிறார். (1 கொ. 1:10; கொலோ. 2:6, 7) இந்தக் கடைசி நாட்களில் யெகோவா அளிக்கிற ஆன்மீக ஏற்பாடுகளுக்கு உண்மையிலேயே நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். இவ்வாறு, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பாரின் மேற்பார்வையின்றி தயாரிக்கப்படுகிற பிரசுரங்களையோ ஒழுங்கமைக்கப்படுகிற கூட்டங்களையோ வெப் சைட்டுகளையோ அடிமை வகுப்பு அங்கீகரிப்பதில்லை.​—⁠மத். 24:45-47, NW.

நற்செய்தியை ஆதரிக்கும் விதத்தில் தங்கள் சிந்திக்கும் திறனைப் பயன்படுத்த தனி நபர்கள் விரும்புவது பாராட்டுக்குரியது. ஆனால், இன்று பூமியிலுள்ள தம்முடைய சபை மூலமாக இயேசு கிறிஸ்து நிறைவேற்றுகிறவற்றை, தனிநபரின் எந்த முயற்சியும் திசைதிருப்பக் கூடாது. ‘மூதாதையரின் முடிவில்லாப் பட்டியல்களில் கவனம் செலுத்[தி] . . . விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட கடவுளின் திட்டத்திற்குப் பயன்படாமல், ஊக ஆய்வுகளுக்கே இடம் தருகிற’ சோர்வூட்டுவதும், பெருமளவு நேரத்தை எடுத்துக்கொள்வதுமான விஷயங்களை ஆராயாதிருக்கும்படி முதல் நூற்றாண்டில் இருந்தவர்களை அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார், (1 தீ. 1:3-7, பொ.மொ.) கிறிஸ்தவர்கள் எல்லாரும், ‘புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலக’ முயற்சி செய்ய வேண்டும்; ஏனெனில், ‘அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கின்றன.’​—⁠தீத். 3:9.

இன்னும் அதிகமாய் பைபிளைப் படிப்பதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் விரும்புகிறவர்கள், வேதாகமங்களின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ ஆகிய பிரசுரங்களையும் தானியேல், ஏசாயா, வெளிப்படுத்துதல் ஆகிய பைபிள் புத்தகங்களில் உள்ள தீர்க்கதரிசனங்களை விளக்குகிற பிரசுரங்கள் போன்றவற்றையும் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தும்படி நாங்கள் சிபாரிசு செய்கிறோம். இந்தப் புத்தகங்கள், பைபிளைப் படிப்பதற்கும், தியானிப்பதற்கும் ஏராளமான தகவலைத் தருகின்றன; இவை, ‘எல்லா ஞானத்தோடும் ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய [கடவுளுடைய] சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், [நாம்] சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் [தொடர்ந்து] தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்’ உதவுகின்றன.​—⁠கொலோ. 1:9, 10.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்