உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 2/08 பக். 11-12
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2008
நம் ராஜ்ய ஊழியம்—2008
km 2/08 பக். 11-12

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் பிப்ரவரி: உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? என்ற ஆங்கில புத்தகத்தையோ குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தையோ அளியுங்கள். மார்ச்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தை அளித்து பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க ஊக்கமாக முயலுங்கள். ஏப்ரல் மற்றும் மே: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளிக்கலாம். சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவு ஆசரிப்புக்கும் விசேஷப் பொதுப் பேச்சுக்கும் மட்டுமே வருகிற ஆர்வமுள்ள நபர்களை மீண்டும் சந்திப்பதற்கு விசேஷ முயற்சி எடுக்கலாம். அவ்வாறு சந்திக்கையில், அவர்களுக்கு ஏற்கெனவே பைபிள் படிப்பு நடத்தப்படவில்லை என்றால், ஒரு படிப்பை ஆரம்பிப்பதே நம் குறிக்கோளாய் இருக்க வேண்டும்.

◼ மார்ச் மாதத்தில் ஐந்து சனி, ஞாயிறுகள் இருப்பதால், துணைப் பயனியர் சேவை செய்வதற்கு அது மிகச் சிறந்த மாதமாயிருக்கும்.

◼ செயலரும் ஊழியக் கண்காணியும் ஒழுங்கான பயனியர்கள் எல்லாருடைய ஊழிய நடவடிக்கையையும் பரிசீலனை செய்ய வேண்டும். தேவைப்படும் மணிநேரத்தை எட்டுவதில் யாருக்காவது கஷ்டமிருந்தால் அவர்களுக்கு உதவி அளிக்க மூப்பர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

◼ 2008-ல் நினைவுநாள் ஆசரிப்புக் காலத்தில் கொடுக்கப்படும் விசேஷப் பொதுப் பேச்சின் தலைப்பு: “மனிதரை ஆட்சி செய்ய தகுதியுள்ளவர் யார்?” இது சம்பந்தப்பட்ட அறிவிப்புக்கு, செப்டம்பர் 2007 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழியத்தைக் காண்க.

◼ சபையின் செயலர்கள், லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்மின் (S-14) இரண்டாவது பக்கத்தில் உள்ள பின்வரும் ஃபார்ம்களைப் போதியளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்: வெளி ஊழிய அறிக்கை (S-4-TL), வீட்டுக்கு-வீடு பதிவு (S-8-TL), சபை பிரஸ்தாபியின் பதிவு (S-21-TL), ரசீது (S-24-TL), சபைக் கூட்ட ஆஜர் பதிவு (ஆங்கிலம்) (S-88-E), தேவராஜ்ய ஊழியப் பள்ளி பேச்சு நியமிப்பு (S-89-TL), துணைப் பயனியர் சேவைக்கான விண்ணப்பம் (S-205b-TL), உடல்நலப் பராமரிப்பிற்குரிய நிரந்தர அதிகாரப் பத்திரம் (dpa-TL), அடையாள அட்டை (ஆங்கிலம்) (ic-E). இவற்றை லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்மில் (S-14) ஆர்டர் செய்து, குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்குத் தேவையானவற்றை வைத்திருக்க வேண்டும்.

◼ கிடைக்கும் புதிய ஆடியோ சிடி-கள்:

பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?​—⁠MP3 ​—⁠ஆங்கிலம்

◼ கிடைக்கும் புதிய டிவிடி-கள்:

நற்செய்திக்கு முழுமையாக சாட்சி கொடுத்தார்கள்​—⁠அமெரிக்க சைகை மொழி

நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் ​—⁠அமெரிக்க சைகை மொழி

கடவுளைக் கனப்படுத்தும் இலக்குகளை நாடுங்கள்​—⁠ஆங்கிலம்

தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல்​—⁠2008 மற்றும் 2008​—⁠யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டர் ஆகியவற்றுடன் சேர்த்து இலக்குகளை நாடுங்கள் என்ற டிவிடி-யில் ஒன்றும் சபைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. பிரஸ்தாபிகள் அந்த வீடியோவைப் பார்க்க விரும்பும்போது இதைச் சபையின் நூலகத்திலிருந்து இரவலாக வாங்கிப் பார்த்துவிட்டுப் பின்னர் தந்துவிடலாம். எதிர்காலத்தில் இவை அதிகப்படியாகத் தயாரிக்கப்படுகையில் நம் ராஜ்ய ஊழியத்தில் அறிவிக்கப்படும். அப்போது சபைகள் இதைக் கூடுதலாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்