தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
பிப்ரவரி 25, 2008-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். பள்ளிக் கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது ஜனவரி 7 முதல் பிப்ரவரி 25, 2008 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுகளின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விக்குப் பின்னர் தகவல் சம்பந்தமாக எந்தக் குறிப்பும் இல்லையென்றால் நீங்களாகவே ஆராய்ச்சிசெய்து பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும்.—ஊழியப் பள்ளி புத்தகம், பக்கங்கள் 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. வசனங்களின் அர்த்தத்தை சபையார் புரிந்துகொள்ள உதவியாக நாம் என்ன செய்ய வேண்டும், இதை ஏன் செய்ய வேண்டும்? [be-TL பக். 228 பாரா. 2-3]
2. சபையாருக்கு தகவல் நிறைந்த பேச்சுகளைக் கொடுப்பது ஏன் முக்கியம், இதை நாம் எப்படிச் செய்யலாம்? [be-TL பக். 230 பாரா. 3-5, பெட்டி]
3. ஆராய்ச்சி செய்வது எந்தெந்த விதங்களில் நம்முடைய பேச்சுகளை அதிக தகவல் நிறைந்ததாய் ஆக்க முடியும்? [be-TL பக். 231 பாரா. 1-3]
4. பழக்கப்பட்ட வசனங்களைப் பயன்படுத்துகையில் அவற்றை அதிக தகவல் நிறைந்ததாய் ஆக்க என்ன செய்யலாம்? [be-TL பக். 231 பாரா. 4-5]
5. நாம் வாசிக்கிற வசனங்களை நியாயங்காட்டி விளக்குவது ஏன் முக்கியம்? [be-TL பக். 232 பாரா. 3-4]
பேச்சு நியமிப்பு 1
6. மத்தேயு புத்தகம் முக்கியமாக யூதரை மனதில் வைத்தே எழுதப்பட்டது என்பதை எது சுட்டிக்காட்டுகிறது? [si-TL பக். 176 பாரா. 6-7]
7. பேச்சாளர்மூலம் கடவுள் தரும் அறிவுரையைப் பெற்றுக்கொள்ள நம் இருதயத்தை எப்படித் தயார்படுத்தலாம்? (2 நா. 20:33) [be-TL பக். 13 பாரா 4–பக். 14 பாரா 5]
8. ‘இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக’ ஆகும்படி தங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதற்கு பெற்றோர் என்ன செய்யலாம்? (2 தீ. 3:15) [be-TL பக். 16 பாரா. 3-4]
9. பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை மத்தேயு சுவிசேஷம் எப்படிச் சிறப்பித்துக் காட்டுகிறது? [si-TL பக். 181 பாரா 32]
10. மத்தேயுவின் சுவிசேஷம் இயேசுவை வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாகவும் ராஜாவாகவும் வர்ணிக்கையில் மாற்குவின் சுவிசேஷம் அவரை எவ்வாறு விவரிக்கிறது? [si-TL பக். 182 பாரா. 7-8]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. மனதில் வன்மம் வைத்திருப்பதைவிட கோபத்தைக் காட்டுவது மிக மோசமானதா? (மத். 5:21, 22) [w-TL08 1/15 “யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது—மத்தேயு புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்”]
12. கிறிஸ்தவர்கள் எவ்வாறு தங்கள் ‘கண்ணைத் தெளிவாக’ வைத்துக்கொள்ள முடியும்? (மத். 6:22, 23) [w-TL06 10/1 பக். 29]
13. தம்முடைய சீஷர்களிடம் “இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா” என்ற கேள்வியை இயேசு கேட்டபோது என்ன குறிப்பை வலியுறுத்தினார்? (மத். 13:51, 52) [w-TL08 1/15 “யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது—மத்தேயு புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்”]
14. தாம் சுகப்படுத்தியவர்களிடம் வழக்கமாக, ‘தம்மைப் பிரசித்தம் பண்ணாதிருக்கும்படி’ இயேசு ஏன் கட்டளையிட்டார்? (மத். 12:16) [w-TL90 4/1 பக். 8; cl-TL பக். 93-4]
15. எந்த “அளவினால்” ஒருவருக்கு ‘அளந்து கொடுக்கிறோம்’ என்பது சம்பந்தமாக இயேசு என்ன கருத்தைச் சொன்னார்? (மாற். 4:24, 25) [w80 6/15 பக். 12; gt-TL அதி. 43]